தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தல் – உங்களுக்குத் தேவையானவை
October 7, 2019
உங்களது கனவுகளை நனவாக்குவதற்கான விளிம்பு வரையான தேவைகளை, DFCCஇன் தனிநபர் கடன் உங்களுக்குப் பெற்றுத் தருகின்றது. உங்களது தேவை எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்றவகையான தனிநபர் கடன் திட்டம் எம்மிடம் உண்டு. எவ்வாறாயினும், வெற்றிகரமான விண்ணப்பமொன்றுக்கு, சில முக்கியமான ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
உங்களுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களாவன:
- அடையாள ஆவணங்கள் – தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு (இருந்தால்)
- இறுதி மூன்று மாதங்களுக்கான வங்கி நிதிக்கூற்றுகள்
- வருமானம் பெறுவதற்கான ஆதாரங்கள்
அடையாள ஆவணங்கள்
நீங்கள் யார் என்று, உங்களால் கூறப்படுவதை நாம் உறுதிப்படுத்தவேண்டும். நீங்கள் ஆவணங்களுடன் எம்மிடம் வரும்போது, நீங்கள் எங்களது வாடிக்கையாளரா இல்லையா (KYC) என்பது தொடர்பான வங்கியின் கொள்கையின் கீழ், எம்மால் சில கேள்விகள் கேட்கப்படும். நீங்கள், எம்முடைய வங்கிச் சலுகைகளை ஏற்கெனவே பெற்றவர் என்றால், விரிவான கேள்விகளுக்கு நீங்கள் விடை வழங்கத் தேவையில்லை அல்லது நிறைய விண்ணப்பங்களை நிரப்பவேண்டிய தேவை இல்லை. எனினும், அடையாள அட்டைகளை நீங்கள் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
வங்கி நிதிக்கூற்றுகள்
உங்களது அனைத்து வங்கி நிதிக்கூற்றுகள் உள்ளிட்ட தற்போது நீங்கள் எந்தெந்த நிதி நிறுவனங்களுடன் செய்துள்ள உடன்படிக்கைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீங்கள் எடுத்து வருவதே சிறந்தது. இலங்கையிலுள்ள எந்தவொரு வங்கி, நிதி நிறுவனத்தில் நீங்கள் பெற்றுள்ள கடன்கள், கடனட்டைகள், குத்தகைகள், சேமிப்பு, நிலையான வைப்பு உள்ளிட்ட அனைத்து நிதி ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்கவேண்டும். இதன்போது, உங்களது கடன் பெற்றுக்கொள்வதற்கான மதிப்பை உறுதிப்படுத்தும் முகமாக, உங்களது ஆள் அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டு, கடன் தகவல் பணியகத்திடம் இருந்து (CRIB) அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும். உங்களது தனிநபர் கடன் விரைவில் செயற்படுத்தப்படுவதற்கு, நீங்கள் சரியான தரவுகளை சமர்ப்பிப்பது, மிக முக்கியமாகும்.
வருமானம் பெறுவதற்கான ஆதாரங்கள்
தனிநபர் கடனுக்கான சலுகைகளை நாம் வழங்கவேண்டும் என்றால், கடனை செலுத்தி முடிப்பதற்கான வருமானம் உங்களிடம் உண்டு என்பதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும். உங்களது கடனுக்கான மீள்செலுத்தும் தகைமை குறித்து தெரிந்துக்கொள்வதற்கு, DFCCஇன் தனிநபர் கடன் கணிப்பொறியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் தொழில் செய்பவராக இருப்பின், இறுதி மூன்று மாதங்களுக்கான சம்பளப் பட்டியலை அல்லது வேலை தருநரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட கடிதமொன்றை நீங்கள் சமர்ப்பிக்கவேண்டும். நீங்கள் தனிப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், நிதிக்கூற்றுகளையோ அல்லது வரி வருமானத்தையோ காண்பிக்க முடியும்.
மேலதிக தகவல்கள்
எம்மிடம் பல்வேறுபட்ட தனிநபர் கடன் திட்டம் இருக்கும் நிலையில், உங்களுக்கு எந்தக் கடன் திட்டம் சரியானது என்பதற்காக, சிலவேலைகளில், மேலதிகமான விவரங்கள் தேவைப்படலாம். உதாரணமாக, எம்மிடமுள்ள தனிநபர் கடன் திட்டமொன்றை நீங்கள் பெற்றுக்கொள்ளவுள்ளீர்கள் என்றால், அதற்குத் தகுதியான தொழில் நிலையில் நீங்கள் உள்ளீர்கள் மற்றும் இலங்கையில் அது அனுமதிப் பெற்றதாக உள்ளது என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும்.
DFCC கடன் திட்டமொன்றைப் பெற்றுக்கொள்வது தொடர்பான மேலதிக விவரங்கள் உங்களுக்குத் தேவைப்படுமாக இருந்தால், 011 235000 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள். இதன்மூலம், உங்களால், தனிநபர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு, இலகுவான வழிமுறைகளை உங்களால் கையாள முடியும் என்பதோடு, எமது விற்பனை முகவர்கள், உங்களுடன் தொடர்பில் இருப்பர்.