DFCC வங்கி எழுச்சிக்கான நெகிழ்திறன் கொண்ட இலங்கைக்கான வலுவான மூலோபாயத்துடன் ஒரு நிலைபேண்தகு பயணத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது
August 13, 2021
எழுச்சிக்கான நெகிழ்திறன் கொண்ட இலங்கைக்கு பங்களிப்பு செய்வதற்கான உறுதிமொழியின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் ஏற்ற வங்கியான, DFCC வங்கி, 2020 முதல் 2030 வரையான தனது முற்றிலும் புதிய நிலைபேண்தகமை மூலோபாயத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் முன்னணி நிலைபேண்தகு வங்கியாக மாறுவதற்கான தொலைநோக்குடன் இந்த மூலோபாயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு வரையான வங்கியின் நிலைபேண்தகமை கொள்கை, மூலோபாயம் மற்றும் திட்டம் என்பன அதன் வரலாற்று சாதனைகள் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், அடுத்த தசாப்தத்தில் உலகம் முழுவதும் பாரிய அளவில் நிச்சயமின்மைகள் மற்றும் சவால்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளமைக்கு மத்தியில் தன்னுடன் தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் இலங்கை ஆகியவற்றின் எழுச்சிக்கான நெகிழ்திறனை நோக்கிய பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்ற வங்கியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இது அமையப்பெற்றுள்ளது.
நிலைபேண்தகமையின் மூலம் நீண்ட கால அடிப்படையில், தொடர்புபட்ட தரப்பினரின் மதிப்பை உருவாக்குவதை வங்கி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வங்கியின் புதிய நிலைபேண்தகமை மூலோபாயம் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து நிலைபேண்தகு வணிக நடைமுறைகள், கூடுதல் மட்டத்திலான பொறுப்புக்கூறல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்த முயல்கிறது. எந்தவொரு எதிர்மறையான சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கத்தையும் குறைக்க இது அனைத்து வணிகப் பிரிவுகள் மற்றும் செயல்முறைகள் முழுவதும் நிலைபேண்தகு சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைப்பதுடன், இந்த மூலோபாயத்தை செயல்படுத்துவதில் அதன் ஒட்டுமொத்த வணிக செயற்பாடுகள் முழுவதும் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் ஈடுபடச் செய்கிறது.
ஒரே நேரத்தில் மக்கள், பூமி மற்றும் இலாபத்தின் மீது அக்கறை கொள்கின்ற மும்முனை மதிப்பு உருவாக்கும் கட்டமைப்பை வங்கி உள்வாங்கியுள்ளது. இது தனது வணிகத்தை ஒரு பொறுப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முறையில் நடத்துவதற்கும், தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மதிப்பு கூட்டலையும் உறுதி செய்கின்றது.
DFCC வங்கியின் நிலைபேண்தகமை மூலோபாயம் மூன்று முக்கிய கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.
முதலாவதாக, ‘எழுச்சிக்கான நெகிழ்திறன் கொண்ட வணிகம்’ – நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது என்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் உட்பட பசுமை பேணும் கடன் வழங்கல் மற்றும் நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முயற்சியாளர்கள், மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சலுகை கடன் திட்டங்களுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், எற்றுமதியாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்கு கடன் வழங்கி உதவுவதை விஸ்தரிப்பதை உள்ளடக்குகிறது. வங்கியால் கடன் வழங்கப்பட்ட செயற்திட்டங்கள் தேவையான உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் சமூக விதிமுறைகளை பூர்த்தி செய்வதையும், எந்தவொரு சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களுக்கு தீர்வு காணுவதையும் உறுதிசெய்யும் வகையில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவக் கட்டமைப்பினை செயல்படுத்துவதும் இதில் அடங்கும்.
இரண்டாவது கோட்பாடாகக் காணப்படுகின்ற, ‘எழுச்சிக்கான நெகிழ்திறன் தாக்கம்’, என்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் அதே வேளையில், வங்கி தனது சொந்த செயல்திறனை கணிசமாக அதிகரிக்கும் நம்பிக்கையுடன் செயற்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் காபன் நடுநிலைமையை அடைவதற்கான இறுதி குறிக்கோளுடன், வள செயல்திறனை மேம்படுத்தவும், கழிவுகளை குறைக்கவும், வள உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் வங்கி முழுவீச்சுடன் செயல்படும்.
மூன்றாவது கோட்பாடாக ‘எழுச்சிக்கான நெகிழ்திறன் சமூகங்களை’ உருவாக்குவதையும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காக ஒரு நிலைபேண்தகு கலாச்சாரத்தை தோற்றுவிப்பதுடனும் தொடர்புபட்டது.
இந்த மூலோபாயம் 6E க்கள் என்று அறியப்படுகின்ற எழுச்சிக்கான நெகிழ்திறனுக்கு பங்களிக்கின்ற அதன் பல கருப்பொருளுடனான கவனம் செலுத்தும் பகுதிகளையும் எடுத்துக்காட்டுகிறது. அவை கல்வி (Education), முதியோர் (Elderly), தொழில்முயற்சியாண்மை (Entrepreneurship), சுற்றுச்சூழல் (Environment), அவசர நிவாரணம் (Emergency Releif) மற்றும் உடற்பயிற்சி (Exercise) ஆகியவற்றைக் கொண்டவை. ‘அனைவருக்கும் ஆங்கிலம்’ (Samata English) கல்வி நிகழ்ச்சித்திட்டம், DFCC வணிக வலுவூட்டல் உதவி (DFCC Vyapara Sahaya) தொழில் முயற்சியாளர்களுக்கான திறன்கள் மேம்பாட்டுத் திட்டம், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக சமீபத்தில் நடத்தப்பட்ட ‘DFCC டிஜிட்டல் தானசாலை’ (DFCC Digital Dansala) மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வு சார்ந்த முயற்சிகள் அடங்கலாக மேற்குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படுகின்ற பிரிவுகளில் வங்கி பல்வேறு செயற்திட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்;துள்ளது. இன்னும் பல செயற்திட்டங்கள் வெகுவிரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.
மூலோபாயத்தை செயல்படுத்துவது, ஒத்துழைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், வலுவூட்டுதல், புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகிய பல முக்கிய ஆக்கக் கூறுகளால் முன்னெடுக்கப்படுகிறது.
புதிய மூலோபாயத்தை செயல்படுத்துவதில், 2030 ஆம் ஆண்டளவில் வங்கி தனது இலக்குகளை அடைவதற்காக பணியாளர்களுக்கு அறிவூட்டுவதற்கும், செயல்படுத்துவதற்கும் வங்கி ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிலைபேண்தகமை முகாமைத்துவ சபை மற்றும் பல வணிகச் செயல்பாட்டுப் பிரிவு மட்டங்களில் உள்ளக செயலணிகளை அமைத்துள்ளது.
இப்புதிய மூலோபாயம் குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில், “DFCC வங்கி தனது நீண்டகால நிலைபேண்தகமை மூலோபாயத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இது தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரினதும் ஈடுபாட்டின் விளைவாக காணப்படுவதுடன், அனைவருக்கும் எழுச்சி நெகிழ்திறன் கொண்ட நிலைபேண்தகு எதிர்காலத்தை தோற்றுவிப்பதற்கான எங்கள் உந்துசக்தியையும் காண்பிக்கிறது. அதே நேரத்தில் நிலைபேண்தகு வங்கிச்சேவையில் முன்னிலை வகிக்கும் வங்கியாக எமது ஸ்தானத்தையும் உறுதிப்படுத்துகிறது. நீண்டகால மூலோபாயம் எங்கள் தற்போதைய Vision 2025 மூலோபாயத்தின் கூறுகளை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் காபன் நடுநிலை வங்கியாக இருக்க வேண்டும் என்ற இறுதி இலக்கைக் கொண்டு 2030 ஆம் ஆண்டுக்குள் அடையக்கூடிய பரந்த இலக்குகளையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரையும் உள்ளடக்குவதை உறுதி செய்வதிலும், தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பை தோற்றுவிப்பதிலும் அதிக முக்கியத்துவம் செலுத்தியுள்ளோம் என்ற உறுதிமொழியை நாங்கள் வழங்குவதுடன், இது நாட்டில் மிகவும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, டிஜிட்டல் வழிமுறையில் இயக்கப்படுகின்ற வங்கியாக மாறுவதற்கான எமது வங்கியின் பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.
புதிய நிலைபேண்தகமை மூலோபாயம் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் ஒத்திசைவதற்கான DFCC வங்கியின் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதுடன், அவற்றை அடைவதற்கான நாட்டின் முயற்சிகளையும் மேம்படுத்துகிறது. DFCC வங்கி அதன் நிலைபேண்தகு வங்கிச்சேவை முன்னெடுப்பின்; கீழ் இலங்கை வங்கிகள் சங்கத்தால் வடிவமைக்கப்பட்டு, முன்னெடுக்கப்படுகின்ற 11 நிலைபேண்தகு வங்கிச்சேவை கோட்பாடுகளை பின்பற்றுவதாக முதன்முதலில் கைச்சாத்திட்ட வங்கிகளுள் ஒன்று என்ற சிறப்பையும் கொண்டுள்ளது.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.