DFCC வங்கியானது டிஜிட்டல் வருமான வரி கணிப்பானுடன் இணையத்தள சேவைகளை மேம்படுத்தியுள்ளது
March 30, 2021
DFCC வங்கியானது தனது பிரத்தியேக இணையத்தளத்தினூடாக டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் இலக்குடன் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் ஒரு அங்கமாக, அனைவருக்கும் ஏற்ற வங்கியானது அண்மையில் புதிய வருமான வரி கணிப்பான் கருவியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிற்துறையில் முன்னிலை வகிக்கின்ற தனது இணையத்தளத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற பலதரப்பட்ட இடைச்செயற்பாட்டு சேவைகள் மற்றும் கருவிகளுக்குப் புறம்பாக இந்த கருவியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
மிகவும் திறன்மிக்க வருமான வரி கணிப்பான் கருவியானது வாடிக்கையாளர்கள் உள்ளீடு செய்கின்ற தகவல்களுக்கு அமைவாக உச்சப்பயனை தர வல்லது. தொழில், முதலீடு மற்றும் வணிக வருமானம் அடங்கலாக பலதரப்பட்ட வருமான வழிமுறைகளுக்கு ஏற்ப பெறுமானங்களை இலங்கை ரூபாவில் உள்ளீடு செய்ய முடியும். ஏனைய வருமானம் மற்றும் விலக்களிப்புக்கு தகுதி பெறும் கொடுப்பனவுகள் போன்ற கூடுதல் களங்களும் உள்ளீடு செய்வதற்காக கிடைக்கப்பெறுவதுடன், ஒட்டுமொத்த அனுபவத்தையும் வாடிக்கையாளர்களை நோக்கியதாக மாற்றுகின்றது.
பல அடுக்கு களங்கள் வாடிக்கையாளர்கள் தமது ஒவ்வொரு வருமான வழிமுறையையும் வேறுபடுத்த இடமளிக்கின்றன. ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருமானத்தின் தனித்துவத்தையும் தெளிவாக புரிந்துகொண்டுள்ள ஒரு வங்கி என்ற ரீதியில், வாடகை, பங்குஇலாபங்கள் மற்றும் ஆலோசனை சேவை வருமானம் உள்ளிட்ட ஏனைய பல தெரிவுகளுடன் பல அடுக்கு களங்கள் ஒவ்வொன்றும் உப பிரிவுகளில் உள்ளீடு செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமது வருமானத்தை மாதாந்த அல்லது வருடாந்த தொகை அடிப்படையில் உள்ளீடு செய்யும் தெரிவையும் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளனர். வருமானத்தொகை மாதாந்த அடிப்படையில் உள்ளீடு செய்யப்பட்டால், கணிப்பு நோக்கங்களுக்கு இக்கருவியானது அதனை தன்னியக்க அடிப்படையில் வருடாந்த தொகைக்கு மாற்றீடு செய்கின்றது. பயன்பாட்டு தகவல் உதவி தெரிவுகள் மூலமாக எவ்விதமான சந்தேகங்கள் மற்றும் விசாரணைகளையும் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள முடிவதுடன், நடைமுறை எத்தகையது மற்றும் பெறுமானத் தொகைகள் எவ்வாறு உள்ளீடு செய்யப்படல் வேண்டும் என்பவற்றையும் இது தெளிவாக விளக்குகின்றது. கணிப்பீடு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அதன் விபரத் தொகுப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்காக PDF கோப்பு வடிவில் அச்சிடப்படவோ அல்லது பதிவிறக்கம் செய்யப்படவோ முடியும்.
இக்கருவியை அறிமுகப்படுத்தியமைக்கான காரணம் தொடர்பில் DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்குவதற்காகவே எமது அதிநவீன இணையத்தளத்தில் இந்த வருமான வரி கணிப்பீட்டு கருவியை நாம் சேர்த்துள்ளோம். எமது இணையத்தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையின்றிய டிஜிட்டல் அனுபவத்தை ஏற்படுத்தும் முகமாக, எமது முழுமையான டிஜிட்டல் அணுகுமுறைக்கு மற்றுமொரு கூடுதல் அனுகூலமாக இக்கருவியானது பெறுமதி சேர் அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் மிகவும் வாடிக்கையாளர்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் டிஜிட்டல் ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற வங்கியாக மாற வேண்டும் என்ற எமது பயணத்தில் எம்மை சிறப்பாக வழிநடாத்திச் செல்லும்,” என்று குறிப்பிட்டார்.
ரூபா 250,000 தொகைக்கும் மேற்பட்ட வருமானத்தை ஈட்டி, குறிப்பிட்ட வருமான வரி வரம்புகளுக்குள் இடம்பெறுகின்ற வங்கியின் உயர் வருமானம் ஈட்டுகின்ற மற்றும் தனவந்த வாடிக்கையாளர்கள் இந்த சௌகரியமான வருமான வரி கணிப்பீட்டு கருவியை வரவேற்பர் என்பது நிச்சயம். அவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் DFCC Pinnacle, DFCC Prestige மற்றும் Infinite மற்றும் Signature அட்டை வாடிக்கையாளர்கள், ரூபா 5 மில்லியன் தொகைக்கும் மேற்பட்ட கடன் தொகையைப் பெற்றுள்ள தற்போதைய மற்றும் எதிர்கால வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் பிரிவினுள் அடங்கியுள்ளனர்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் வர்த்தக வங்கியாகும். இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.