DFCC வங்கி இலங்கையின் ‘மிகவும் போற்றப்படும் நிறுவனங்களில்’ ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது
November 30, 2021
இலங்கையின் முதன்மையான வர்த்தக வங்கியான DFCC வங்கியானது, பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் கற்கை நிலையம் – சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை பிரிவு – டெய்லி எஃப்டி ஆகியவற்றின் ‘இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்கள் 2021’ விருது வழங்கல் நிகழ்வில் ‘சிறந்த 5 கௌரவ பெயரிடல்களில்’ ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் மீண்டு எழுகின்ற திறன்மிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்கும் பாதுகாப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பெறுமதியைத் தோற்றுவிப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளுக்காகவும் வங்கி இந்த கௌரவ பெயரிடல் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த கௌரவ பெயரிடல் வங்கியின் வலுவான நிதிச் செயல்திறனை மட்டுமல்லாமல், அனைத்து பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுவில் பரந்த சமூகத்திற்கு நல்விளைவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த பாராட்டு DFCC வங்கியின் 65 ஆண்டு கால அபிவிருத்தி மற்றும் வணிக வங்கியியல் வரலாற்றில் நீண்ட கால முயற்சிகள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களின் வலுவான மதிப்பீடுகளின் பக்கபலத்துடன் பெற்றுள்ள வலுவான சந்தை ஸ்தானத்தைப் பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், DFCC வங்கியின் பரந்த அளவிலான புத்தாக்கமான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகள் அண்மைக்காலத்தில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், இது உள்ளூர் தொழில்துறை முழுவதும் இத்தகையதொரு அபிமானத்தைத் தோற்றுவிப்பதற்கு ஏதுவாகியுள்ளது.
இறுதித் தெரிவாக போட்டி நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் சிரேஷ்ட முகாமைத்துவ அணிகள் முன்வைத்த படைப்பாக்க விளக்கக்காட்சிகளை சுயாதீனமாக மதிப்பீடு செய்யும் நடுவர் குழுவை உள்ளடக்கிய ஒரு செயல்முறையின் மூலம் ‘மிகவும் போற்றப்படும் நிறுவனங்கள்’ தேர்ந்தெடுக்கப்படுகின்றன. திறமைசாலிகளை ஈர்க்கும் மற்றும் தக்கவைத்துக்கொள்ளும் திறன், தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தரம், அவற்றின் புத்தாக்க மட்டம், சமூகத்தில் அவை வகிக்கும் பங்கு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த முயற்சிகள், சமூக மற்றும் நிறுவன ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல குணாதிசயங்களின் அடிப்படையில் அவை மதிப்பிடப்படுகின்றன. கண்ணியம் மற்றும் ஊழலுக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் செயல்படும் நிறுவனங்களின் கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் மதிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நடுவர் குழு மற்றும் ஒவ்வொரு முகாமைத்துவ அணி இடையிலும் இடைத்தொடர்பாடல் கொண்ட அமர்வுகள் நடத்தப்பட்டு, நிறுவனங்கள் அத்தகைய வணிக நடைமுறைகளை எவ்வளவு சிறப்பாக உள்வாங்கிக்கொண்டுள்ளன என்பது மதிப்பிடப்பட்டது.
வங்கியின் சாதனை குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “DFCC வங்கியானது இலங்கையில் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களில் ஒன்றாக கௌரவப் பெயரிடல் அங்கீகாரம் பெற்றமையை முன்னிட்டு மிகவும் பெருமையடைகின்றது. புத்தாக்கமான, உலகத் தரம் வாய்ந்த வங்கித் தீர்வுகள் மூலம் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க, தொடர்ச்சியான, நிறுவன அளவிலான முயற்சியே இதற்குக் காரணம். பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக ஸ்திரமான மற்றும் எந்த சூழ்நிலையிலும் மீண்டு எழக்கூடிய எதிர்காலத்தை அடைவதற்கான இலக்குடன் அனைவருக்கும் மதிப்பை தோற்றுவிப்பதற்கான எங்கள் முயற்சிகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த அங்கீகாரம் நமக்கு உந்துசக்தியளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி
திரு. சொஹாந்த விஜேசிங்க – சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரி – நிறுவன வங்கிச் சேவை (வலது) மற்றும் திரு. திரு. ஷான் ஹீன்கெந்த – துணைத் தலைமை அதிகாரி – ஊழியர் உறவுகள் மற்றும் துணை நிறுவனங்கள் (இடது) ஆகியோர் இலங்கையில் மிகவும் போற்றப்படும் நிறுவனங்கள் 2021 விருது வழங்கும் நிகழ்வில் DFCC வங்கியின் சார்பாக விருதைப் பெற்றுக் கொள்ளும் காட்சி.