DFCC iConnect இலங்கை நிறுவனங்களுக்கு கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவ தீர்வுகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
July 12, 2021
கொவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட செயல்முறைகளின் டிஜிட்டல்மயமாக்கலுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தொலைவியக்க அடிப்படையிலான நிதியியல் சேவைகளைப் பெறுவதற்கு விரைவான, மிகவும் சௌகரியமான வழிமுறைகளின் தேடலில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளன.
DFCC iConnect 2018 முதல் இலங்கையில் நிறுவனங்களுக்கான அன்றாட நிதியியல் நடவடிக்கைகளை மிகவும் திறன்மிக்க வழியிலும், சௌகரியமாகவும் மேற்கொள்ள உதவி வந்துள்ளது. ‘இலங்கையில் பண முகாமைத்துவத்தில் சந்தை முன்னிலையாளர் (உள்நாட்டு வங்கிகள்)’ மற்றும்; ‘பண முகாமைத்துவ சேவைகளில் மிகச் சிறந்த செயற்பாடு – இலங்கை’ ஆகிய விருதுகளை அண்மையில் நிறைவடைந்த Asiamoney Awards விருதுகள் நிகழ்வில் சம்பாதித்துள்ளதுடன், DFCC iConnect இலங்கையில் நிறுவன வங்கிச் சேவைக்கான ஒப்பீட்டு அளவுகோலாகத் திகழ்கின்றது. Orel Corporation (Pvt) Ltd. மற்றும் Gamma Pizzakraft Lanka (Pvt) Ltd உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் முக்கிய வணிக நிறுவனங்களுக்கு தற்போது கடந்த நான்கு ஆண்டுகளாக DFCC iConnect சேவைகளை வழங்கி வருகின்றது.
Orel Corporation என்பது தொழில்துறை 4.0 இல் ஒரு தகவமைப்பு உற்பத்தி மின்-வணிகத்தால் வழிநடாத்தப்படும் ஒரு நிறுவனம் என்பதுடன், கட்டிட உள்கட்டமைப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் வர்த்தகம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, இணைய விடயங்கள் (IoT) மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. மூன்றாம் தலைமுறை, குடும்ப உரிமையாண்மையைக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான Orel 6 கண்டங்களில் 28 நாடுகளில் செயல்பட்டு வருவதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் 100 மடங்கு வளர்ச்சி காண வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டுள்ளது. Orel ஒரு முன்னுரிமை வாடிக்கையாளராக DFCC வங்கியுடன் ஆரோக்கியமான உறவைப் பேணுவதுடன், iConnect app தளத்தின் பயன்பாட்டையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. DFCC iConnect உடனான தமது அனுபவத்தைப் பற்றி குழும நிதி முகாமையாளரான தினேஷ் கருணாரத்ன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “iConnect இயங்குதளத்தை பயன்படுத்துவதால் நாம் பல நன்மைகளைப் பெற்றுள்ளோம், இது பல தன்னியக்க சேவைகளைக் கொண்டுள்ளது, இது எங்கள் நிதியை சௌகரியமாக கவனித்துக்கொள்வதில் உதவுகிறது. ஆகவே இச்செயற்பாடுகளுக்கு நாங்கள் மேலதிக ஆளணி வளப் பயன்பாட்டை ஒதுக்க வேண்டிய தேவை கிடையாது என்பதை உறுதிசெய்கிறோம். மனிதரீதியாக வரையப்படும் காசோலைகளுக்குப் பதிலாக அல்லது அதைப் போன்ற தேவையற்ற ஆவணங்களின் பணிச்சுமையைக் குறைக்க இத்தளமேடை உதவுகிறது, மேலும் எங்கள் நிதிக் கட்டுப்பாட்டு இன்று எமது செயற்பாடுகளை திறன்மிக்க மற்றும் வினைதிறன் கொண்ட வழியில் மேம்படுத்துவதால் இந்த கட்டமைப்பில் எமக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன், பாவனைக்கு இலகுவானதாகவும் காணப்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
Gamma Pizzakraft Lanka வின் தலைமை நிதியியல் அதிகாரியான சரத் குமார சிங்கபுரகே அவர்களும் தனது அன்றாட நிதி நடவடிக்கைகளில் DFCC iConnect ஐப் பயன்படுத்துவதால் அனுபவிக்கும் சௌகரியத்தை உறுதிப்படுத்தினார். Gamma Pizzakraft Lanka தற்போது இலங்கையில் Pizza Hut மற்றும் Taco Bell ஆகியவற்றின் ஏகபோக வணிக உரிமையாளராக உள்ளது. இந்நிறுவனம் நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களின் சங்கிலித்தொடரை சொந்தமாகக் கொண்டு இயங்குவதுடன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. Gamma Pizzakraft Lanka ஆனது DFCC வங்கியுடன் கால அடிப்படையிலான கடன்கள் மற்றும் வழக்கமான வணிக வங்கிச்சேவை ஆகிய இரண்டு செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றது. அதன் ஆரம்ப கட்ட செயல்பாட்டில் Gamma வுக்கு அதன் விற்பனை மைய விரிவாக்க திட்டத்திற்காக கடன்களை வழங்கிய முதல் வங்கி DFCC வங்கி ஆகும். இதைத் தொடர்ந்து, DFCC வங்கி Gamma வால் முன்னெடுக்கப்பட்ட பல முக்கிய செயற்திட்டங்களுக்கு கடன் வழங்கியுள்ளதுடன், நிறுவனத்துடன் ஆரோக்கியமான உறவைத் தொடர்ந்து பேணி வருகிறது.
Gamma Pizzakraft சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு DFCC iConnect ஐப் பயன்படுத்தத் தொடங்கியது, மேலும் இந்த தளத்தின் மூலம் இது வரையில் ஏராளமான நன்மைகளை அனுபவித்துள்ளது. ஒரு கணினி சாதனத்திற்கும் மற்றொரு கணினி சாதனத்திற்கும் இடையிலான கொடுப்பனவுகள், நேரடி கோப்பு பதிவேற்றம், சம்பள கொடுப்பனவுகள், ஊதிய கட்டளை ஏற்பாடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பில் பெரும்பாலான செயல்பாடுகளை நிறுவனம் பயன்படுத்தியது. திரு. சிங்கபுரகே அவர்கள் தனது அனுபவத்தை மேலும் விளக்குகையில், “இந்த கட்டமைப்பு பயனர் மட்டத்திலான அதிகாரத்தை வலுவான பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது எங்கள் நேரத்தை மிகவும் திறமையாகவும் வினைதிறனுடன் நிர்வகிக்க உதவுகிறது. iConnect இன் சம்பள செயலாக்க நடைமுறை மிகச் சிறந்தது, இது எங்கள் கணக்கு இணக்கக்கூற்று செயல்முறைகளில் உதவுகிறது. எங்கள் விற்பனையாளர்களிடமிருந்து காசோலை சேகரிப்பு மற்றும் அதன் தீர்வையாதல் நடைமுறைக்கான நேரத்தைப் போக்கி, இந்த தளம் பெரிதும் உதவுகிறது. ஒரு சிறந்த உறவுமுறை முகாமையாளர் தலைமையிலான பண முகாமைத்துவ அணி, ஒரு சிறந்த சேவையை வழங்குகிறது, மேலும் DFCC வங்கியை எங்கள் நிறுவன வங்கிச்சேவை பங்காளராகக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
நாடெங்கிலும் இன்னும் அதிகமான நிறுவனங்களுக்கு பயனளிக்க முடியும் என்ற நம்பிக்கையில், DFCC வங்கி தொடர்ந்து கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவத் தீர்வுகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டளவில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் இயக்கப்படுகின்ற வங்கியாக மாறுவதற்கு பொருத்தமான வழியில் செயல்பட்டு வருகிறது.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2021 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.