உங்களது தேவைக்கான சிறந்த கடனட்டையைத் தெரிவு செய்தல்
October 7, 2019
உங்களது தேவைக்கான கடனட்டையொன்றை பெற்றுக்கொள்வற்கு நீங்கள் முயலும்போது, உங்களது பாவனைக்கான தேவைகள் குறித்து சில விடயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாளாந்தத் தேவைக்காகப் பயன்படுத்தப்போகின்றீர்களா விசேட தினங்களான, அதாவது உணவுக்காக பயன்படுத்தவுள்ளீர்களா, பயணங்களுக்காக பயன்படுத்தவுள்ளீர்களா அல்லது உங்களது பழைய கடனட்டையை முற்றாக செலுத்திமுடிப்பதற்காக புதிய கடனட்டையைப் பயன்படுத்தவுள்ளீர்களா என்பது குறித்து நீங்கள் முடிவு எடுக்கவேண்டும்.
இவ்வாறான கேள்விகளுக்கான உங்களது பதிலுக்கு ஏற்றவகையில், பல தேவைகள் உள்ளன.
தினசரி செலவீனங்களுக்கான அட்டை – இவ்வகையான கடனட்டைகளின் மூலம், பணம் மீளப்பெறல் அல்லது கொள்வனவு செய்யும் நாளில் விசேட கழிவு போன்ற, பணத்தைக் சேமிப்பித்து வைத்தல் உள்ளிட்ட சிறந்த வட்டி வீதங்களுடனான கடனட்டையைத் தெரிவு செய்யவேண்டும். DFCC கடனட்டை மூலமான ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களின் போதும், மாதாந்தம் காலாண்டு அல்லது ஒரு வருடம் என்ற, உங்களது கோரிக்கையின் பிரகாரம், நாளாந்தம் நீங்கள் மேற்கொள்ளும் செலவீனங்களுக்கான 1% பணம் மீள வழங்கப்படும். இது, நீங்கள் செலவு செய்யும் பணத்தை சேமிக்கின்றீர்கள் என்பது அர்த்தமாகும். DFCC கடனட்டை மூலமான பண மீள் பெறுதலுக்கான கணிப்பானை, இங்கே பார்க்கவும்.
விசேட செலவுகளுக்கான கடனட்டை – உணவருந்துவதற்காக வெளியே செல்லுதல், பருவகால கொள்வனவு போன்றவற்றுக்கென்று நீங்கள் கடனட்டையொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள் என்றால், இதில் ஹோட்டல்களில், விருந்தகங்களில் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் போன்றவை குறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரத்தியேக அணுகல் முறைகளைக் கொண்ட கடனட்டைகளுக்கு விண்ணப்பிப்பதன் மூலம், விலைக்கழிவுகளின் மூலம் நல்ல விலையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, இது நீண்ட காலத்துக்கு பணத்தைச் சேமிக்கவும் உதவுகின்றது. அதுமாத்திரமல்லாது, பாரிய தொகைகளை ஒரே தடவை செலுத்தி, பின்னர் அந்தத் தொகையை சிறிது, சிறிதாக மீள் செலுத்தும் வகையான கடனட்டையாக இருத்தல் வேண்டும். DFCCஇனால் வழங்கப்படும் கடனட்டைகளில், 10,000/=க்கும் அதிகளவான கொள்வனவுகளை மேற்கொண்டு, அதற்கான கட்டணத்தை, 12 – 24 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்தக்கூடிய வசதிகள் வழங்கப்படுகின்றன. DFCC கடனட்டைகளை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
பயணங்களுக்கான அட்டை – நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வரும் ஒருவராக இருந்தால், காப்புறுதி உள்ளிட்ட பண சலுகைகளை வழங்கும் ஒரு கடனட்டையை நீங்கள் தெரிவு செய்யவேண்டும். DFCC வழங்கும் விசா சிக்னேச்சர் மற்றும் பிரீமியனர் விசா அட்டைகளில், நீங்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும்போது தேவைப்படும் காப்புறுதி உள்ளிட்ட அனைத்து தேவையான சலுகைகளும் வழங்கப்படுகின்றது. DFCC கடனட்டைகளுக்கு விண்ணப்பிக்க, இங்கே பார்க்கவும்.
மற்றைய அட்டைகளை சீராக்க ஒரேயொரு அட்டை – DFCC கடனட்டைகள், சந்தையிலுள்ள நல்ல வட்டிவீதங்களை வழங்குகின்றது. உங்களிடமுள்ள மற்றைய கடனட்டைகளுக்குச் செலுத்தவேண்டிய தொகைகைளை செலுத்தி முடித்துவிட்டு, ஒரு அட்டைக்கு மாத்திரம் பணத்தை மீள் செலுத்தவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கான வாய்ப்பை DFCC வங்கியின் கடனட்டை வழங்குகின்றது.
உங்களது தேவை என்னவாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து சலுகைகளையும் DFCC கடனட்டையில் பெற்றுக்கொள்ள முடியும். எமது அனைத்து அட்டைகளும் EMV சிப் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளதுடன், அட்டையை உலகில் எந்தவொரு இடத்தில் பயன்படுத்தும்போதும் மிகப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, விசா பே வேவ் செயற்படுத்தப்பட்ட வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
DFCC கடனட்டைகள் மூலம், உலகத்திலுள்ள அனைத்து வாய்ப்புகளுக்கும் உங்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.