உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குப் பயணிக்கவுள்ளீர்களா? இதோ உங்களுக்கான 5 ஆலோசனைகள்
October 22, 2019
விசேடமாக நீங்கள் வெளிநாட்டுக்குப் பயணங்களை மேற்கொள்ளும்போது, DFCC கடனட்டைகள் பல்வேறு வாய்ப்புகளை உங்களுக்காக வழங்குகின்றது. இதனால், பாரியளவு வெளிநாட்டுப் பணத்தை பரிமாற்றல் செய்யவேண்டிய தேவை உங்களுக்கு இல்லை என்பதுடன், உங்களது பயணச் செலவு குறித்தான அச்சத்தை விளக்கிக்கொள்ள முடியும். உங்களது பயணத்தின்போது, தேவையான பொருள்களை இலகுவாக கொள்வனவு செய்யவும் பாதுகாப்பாக இருக்கவும் பயணத்தை இலகுபடுத்தவும், கடனட்டை உதவுகின்றது.
கடனட்டையுடன், நீங்கள் வெளிநாட்டுக்குப் பிரயாணத்தை மேற்கொள்ளும்போது, ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டிய ஐந்து விடயங்கள் இதோ உங்களுக்காக
நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்கின்றீர்கள் என்பது குறித்து எமக்குத் தெரிவியுங்கள்
DFCC வங்கியில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து, நாம் மிகுந்த கவனத்தைச் செலுத்துகிறோம். நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்கின்றீர்கள் என்பது பற்றி நாம் அறிந்திருக்காவிடின், திடீரென வெளிநாடொன்றில் உங்களது கடனட்டை பயன்படுத்தப்படும்போது, நாம் உங்களது கடனட்டையை முடக்கிவிடுவோம். எனவே, இந்த நாட்டை விட்டு நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது, எமக்கு அறிவிப்பதற்கு மறந்துவிடாதீர்கள். இது குறித்து எமக்கு அறிவிப்பதற்கு, 0112-350000 என்ற 24 மணிநேர சேவை வழங்கும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவியுங்கள்.
சலுகைகளை பயன்படுத்துவது குறித்து உறுதியாக இருங்கள்
DFCCஇன் சிக்னேச்சர் கடனட்டை அல்லது பிரீமியர் விசா கடனட்டைகளை நீங்கள் பெற்றுக்கொண்டிருந்தால், பயண காப்புறுதி, மருத்துவக் காப்புறுதி, கடவுச்சீட்டை இழத்தல், பொதிகளுக்கான உதவி உள்ளிட்ட பல சலுகைகளை உங்களால் அனுபவிக்க முடியும். எனவே, உங்களது கடனட்டை மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்து எப்போதும் அறிந்திருந்து, அதைப் பயன்படுத்துவதற்கு முயலுங்கள். DFCC கடனட்டைகளை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவும்.
மேலதிக கொடுப்பனவு பற்றி கவனத்தில் கொள்ளவும்
குறைந்த செலவில் சிறந்த சலுகைளை வழங்குவதற்கு நாம் முயற்சி செய்தாலும், வெளிநாட்டுப் பயணங்களில் கடனட்டையைப் பயன்படுத்தும்போது, சமீபத்தில் வெளிநாட்டு கடனட்டை பரிமாற்றல்களுக்காக 3.5% சதவீத வரி அறவிடப்படுவதுபோல, வேறு சில மேலதிக கட்டணங்களும் தேவைப்படலாம். எனவே, நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் அங்கு கொள்வனவுகளில் ஈடுபடும்போதும் நீங்கள் ஒரு பாதீட்டின் அடைப்படையில் செயற்படுவது சிறந்தது.
உங்கள் கடனட்டையின் கடவுச்சொல்லை தெரிந்து வைத்திருப்பதுடன் அது செல்லுபடியாகும் காலம் குறித்து அறிந்து வைக்கவும்.
பல நாடுகளில், EMV சிப் மற்றும் கடவுச்சொல்களைப் பயன்படுத்தியே பரிமாற்றல்கள் இடம்பெறும். அதாவது, உங்களது பரிமாற்றல்களின்போது, கையொப்பங்களை இடாது, உங்களது கடனட்டையின் கடவுச்சொல்லை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும். DFCC கடனட்டைகள் அனைத்தும் EMV சிப் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச தரத்தைக்கொண்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும்போது, உங்களுக்கு அவசரமாக பணத்தேவை ஏற்படுமாயின், அங்குள்ள விசா தன்னியக்கப் பணப்பரிமாற்றல் இயந்திரத்தின்மூலம், கடனட்டையைப் பயன்படுத்தி, முற்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, உங்களது கடனட்டை செல்லுபடியாகும் திகதி குறித்து அறிந்துவைத்திருங்கள். இதன்மூலம், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது, தேவையற்ற அசௌகரியத்துக்கு நீங்கள் முகங்கொடுக்கவேண்டிய தேவை ஏற்படாது. இதற்கு, உங்களது கடனட்டைக்கான கடவுச்சொல்லை நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும்.
உள்ளுர் பணத்தில் செலுத்துவதைத் தெரிவு செய்யுங்கள்.
உலகிலுள்ள பல நாடுகளிலும், கட்டணங்களைச் செலுத்துவதற்கு, பல்வேறான பண அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், சரியான பணப்பறிமாற்றல் விகிதத்தை உறுதிப்படுத்துவதற்காக, உள்ளுர் பணத்தையே பயன்படுத்துங்கள்.
உங்களது பயணத்தின்போது, உங்களது அனைத்து செலவுகளை செய்வதற்கு, உங்களது கடனட்டை போதுமானதாக இருந்தாலும், கடனட்டையில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், உங்களது செலவுக்காக சிறியளவு பணத்தைக் கொண்டு செல்லுமாறு நாம் அறிவுறுத்துகிறோம்.
கடனட்டை என்பது, இந்த உலகத்திலுள்ள வாய்ப்புகளை திறப்பதற்கான சாவியாகும். இங்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை நீங்கள் மனதில் கொண்டால், 100 சதவீதம், உங்களது வெளிநாட்டுப் பயணத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.