வீட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டே DFCC வங்கியுடன் வங்கிச்சேவையை மேற்கொள்வதற்கான உங்கள் தெரிவுகள்
July 16, 2020
கொவிட்-19 உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலைமை வங்கிக்கு செல்வது போன்ற நமது அன்றாட இடைத்தொடர்பாடல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் விரிவான டிஜிட்டல் வங்கிச் சேவைகளை நாங்கள் வடிவமைத்து ஏற்பாடு செய்துள்ளதால் DFCC வங்கி வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வீடு அல்லது அலுவலகத்திலிருந்து 24 மணி நேரமும் உங்கள் வங்கிச்சேவைகள் அனைத்தையும் நீங்கள் முன்னெடுக்க முடியும்.
உங்கள் அன்றாட வங்கிச்சேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் DFCC வங்கியின் டிஜிட்டல் வங்கி மார்க்கங்கள் சில இங்கே தரப்பட்டுள்ளன. இந்த சேவைகள் அனைத்தும் வருடத்தில் 365 தினங்களும் உடனடி அணுகலை வழங்குகின்றன மற்றும் தரவு பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த தொழில்துறை தராதரத்துடன் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன.
DFCC Virtual Wallet
DFCC Virtual Wallet வங்கியின் வலுவினை உங்கள் உள்ளங்கைக்கு கொண்டு வருகிறது. நவீன, பயனர்களுக்கு சிநேகபூர்வமான மொபைல் செயலியைப் பயன்படுத்தி, DFCC Virtual Wallet வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பவும் பெறவும், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்தவும், பயன்பாட்டு கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தவும் மற்றும் அவர்களின் அனைத்து நிதிகளையும் (அனைத்து DFCC அட்டை / கணக்கு / கடன் தகவல்கள் உட்பட) ஒற்றையான மற்றும் சௌகரியமான தளத்தில் அணுக இடமளிக்கிறது. பயனர்கள் பிற DFCC Virtual Wallet பயனர்களிடமிருந்து நிதியைக் கோரலாம் மற்றும் அன்பளிப்பு வவுச்சர்களைப் போல செயல்படும் பரிசு அட்டைகளை அனுப்பலாம் மற்றும் பெறலாம். அவை பெறுநரால் மீட்டெடுக்கப்படலாம். நிதிகளை விரைவாக அணுகுவது தற்போதைய காலகட்டங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒப்பானது.
தற்போதுள்ள அனைத்து DFCC வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பதிவு இலவசம் என்பதுடன் மற்றும் ஒன்லைனில் மேற்கொள்ள முடியும். புதிய வாடிக்கையாளர்கள் கூட ஒன்லைனில் DFCC Virtual Wallet க்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் ஒரு கணக்கை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர ஒரு வங்கி அதிகாரி அவர்களை தொடர்பு கொள்வார். தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் DFCC டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி சுயமாக ஆரம்பித்து, உள்நுழையலாம். Android மற்றும் iOS இரண்டிற்கும் DFCC Virtual Wallet கிடைக்கிறது. செயலியைப் பதிவிறக்க கிளிக் (Click) செய்யவும்.
ஒன்லைன் வங்கிச்சேவை
மேலதிக கட்டணம் எதுவுன்றி DFCC ஒன்லைன் வங்கிச்சேவையுடன் உயர் வகுப்பு, முழுமையான சிறப்பம்சங்களைக் கொண்ட டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவத்திற்கான அணுகலை அனுபவிக்கவும். பயனர்கள் DFCC வங்கியுடனான தங்கள் முழுமையான வங்கிச்சேவை உறவிற்கும் முழுமையான அணுகலுக்கும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் முழுமையான திறன்களையும் கொண்டுள்ளனர்.
அனைத்து DFCC வங்கி கணக்குகளையும் பார்வையிடவும், கண்காணிக்கவும், SLIP கள் அல்லது CEFT கள் வழியாக நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நிகழ்நேரத்தில் தங்குதடையற்ற பணப் பரிமாற்றங்களை நிர்வகிக்கவும், உங்கள் பயன்பாட்டு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்தவும், நிலையான கட்டளைகளை திட்டமிடவும், கடன் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், வங்கிக்கு முன்னுரிமை அடிப்படையில் செய்திகளை அனுப்பவும், பெற்றுக்கொள்ளவும் கணக்குக் கூற்றுக்கள், காசோலைப் புத்தகங்களுக்கான கோரிக்கையை முன்வைக்கவும் மற்றும் வழங்கப்பட்ட காசோலைகளுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தவும் ஒன்லைன் வங்கிச்சேவை பயன்படுத்தப்படலாம்.
DFCC iConnect – வணிகங்களுக்கான பாதுகாப்பான தொலைநிலை வங்கிச்சேவை
iConnect என்பது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கான தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் எங்கள் பண முகாமைத்துவ மற்றும் கொடுப்பனவுத் தீர்வாகும். இந்த தளத்தின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகக் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தையும் எவ்விதமான முட்டுக்கட்டைகளுமின்றி, தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் எந்த நேரத்திலும் நிர்வகிக்க முடியும். கணக்கு தொடர்பான மேலோட்டங்கள், உள்ளூர் மற்றும் எல்லை தாண்டிய கொடுப்பனவுகள் அல்லது சேகரிப்பு தீர்வுகள் என எதுவாக இருந்தாலும், அனைத்தும் DFCC iConnect மூலம் சாத்தியமாகும்.
iConnect ஐ உங்கள் நிறுவன வளத் திட்டமிடல் கட்டமைப்புடன் (ERP) முழுமையாக ஒருங்கிணைக்க முடியும் என்பதுடன், மேலும் காசோலை அச்சிடுதல், SLIP கொடுப்பனவுகள், நிகழ்நேர பெருந்திரள் தீர்வு (RTGS), கொடுப்பனவுக் கட்டளைகள், ஊதியக் கொடுப்பனவுகள், நிறுவனத்திற்குள்ளே பணப் பரிமாற்றங்கள், சர்வதேச கொடுப்பனவுத் தீர்வுகள், பயன்பாட்டு கட்டணப் பட்டியல்கள், வர்த்தக கடனட்டைகள் மற்றும் பல போன்ற ஒருங்கிணைந்த கொடுப்பனவுத் தீர்வுகளை மொபைல் இயக்க முறையினூடாக வழங்குகிறது. டிஜிட்டல் வைப்பு கணக்குகள், நிதி வழங்கல் சங்கிலி முகாமைத்துவம், வருமதி முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் விரிவான நிகழ்நேர கண்காணிப்பு திறன்கள் மூலம் வசூல் மற்றும் கணக்கு இணக்கக்கூற்றை நிர்வகிப்பதற்கான ஒரு விரிவான தீர்வை iConnect வழங்குகிறது.
DFCC iConnect பற்றி மேலும் அறிய (Click to learn more about DFCC iConnect) கிளிக் செய்யவும் அல்லது உதவிக்கு 0112 35 00 00 ஐ அழைக்கவும்.
DFCC Pay – அனைவருக்கும் டிஜிட்டல் வங்கிச்சேவை
யார் வேண்டுமானாலும் DFCC Pay ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். பயனர்கள் தங்கள் DFCC வங்கி கணக்குகள் அல்லது இலங்கையில் உள்ள பங்கேற்கும் ஏனைய 3 ஆம் தரப்பு வங்கிக் கணக்குகளுடன் இணைக்க முடியும். DFCC Pay பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து LANKAQR வணிகர்களிடமும் நிதியை மாற்றவும், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்தவும் பயனர்களுக்கு இடமளிக்கின்றது.
இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து Visa QR வணிகர்களிடமும் பணம் செலுத்துவதற்கு DFCC வங்கி கடனட்டை வாடிக்கையாளர்களுக்கு DFCC Pay ஐ பயன்படுத்துவதற்கான கூடுதல் திறன் உள்ளது. DFCC Pay அனைராலும் அணுகக்கூடியது மற்றும் உடனடியாகவே டிஜிட்டல் முறையில் வங்கிச்சேவைக்கு எளிதான வழியை வழங்குகிறது. இது Android மற்றும் iOS இரண்டிற்கும் கிடைக்கிறது.
DFCC வங்கியில் பாதுகாப்பிற்கு முதலிடம்
மிகச் சிறந்த டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை உங்களுக்கு வழங்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம், இதனால் வங்கிக் கிளை போன்ற பொது இடங்களுக்கு தேவையின்றி செல்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கு மேலாக, தரவு பாதுகாப்பின் அதீத முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இதனால் எங்கள் தீர்வுகள் அனைத்தும் தரவு மற்றும் இணைய பாதுகாப்பிற்கான மிகவும் கடுமையான, உலகளாவிய தொழில்துறை தரங்களை பூர்த்தி செய்வதை உறுதிசெய்துள்ளோம்.
டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற பயணம் மற்றும் பொது இடங்களுக்குச் செல்வதால் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதன் மூலமும் பாதுகாப்பாக இருக்க, சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். எவ்வாறாயினும், நீங்கள் எப்போதாவது ஒரு கிளைக்கு வர வேண்டிய தேவை இருப்பின், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்கள் எல்லா கிளைகளிலும் அதிகபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளதால் நீங்கள் நம்பிக்கையுடன் வருகை தரலாம்.
DFCC வங்கியின் டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே (click here) கிளிக் செய்யவும். டிஜிட்டல் வங்கிச்சேவை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படின் 0112 35 00 00 என்ற 24 மணி நேர சேவை அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.