
பாடசாலை விட்டு
விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்
DFCC வங்கி பாடசாலை விட்டு விலகியவர்களுக்கு பயிற்சி வங்கி உதவியாளராகவோ /பயிற்சி வணிக அபிவிருத்தி பங்காளராகவோ இணைவதற்கு வாய்ப்புக்களை வழங்குகின்றது.
பாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்
பாடசாலை விட்டு விலகியவர்களுக்கான வாய்ப்புக்கள்
DFCC வங்கி பாடசாலை விட்டு விலகியவர்களுக்கு பயிற்சி வங்கி உதவியாளராகவோ /பயிற்சி வணிக அபிவிருத்தி பங்காளராகவோ இணைவதற்கு வாய்ப்புக்களை வழங்குகின்றது. பின்வரும் அளவுகோல்களை அடையக் கூடிய தகைமை உடைய விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு சுயவிபரக் கோவையினை opportunities@dfccbank.com என்ற மின்னஞசல் முகவரிக்கு அனுப்புவதன் ஊடாக வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வங்கியியல் உதவியாளர்கள்
பொருத்தமான விண்ணப்பதாரி:
- 23 வயதிற்கு குறைந்தவராக இருத்தல்
- சிறந்த தனிப்பட்ட உட் திறன்களை கொண்டிருத்தல்
- க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கிலத்திற்கு credit சித்தியையும் க.பொ.த உயர் தரத்தில் 3 சித்திகளையும் பெற்றிருத்தல் (பொது ஆங்கிலம் அல்லாமல்)
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு ஓர் போட்டிமிகு ஊதிய பொதி மற்றும் ஏனைய மேலதிக சலுகைகளும் கட்டமைப்புடன் கூடிய தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புக்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட பயிற்சிகளையும் வழங்குகிறது.
பாடசாலை விட்டு விலகியவர்களுக்கு விற்பனை குழாமில் வாய்ப்புக்கள்–
பொருத்தமான விண்ணப்பதாரி:
- விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் ஆர்வத்துடன் இருத்தல்
- விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான இயல்பான ஆற்றலுடன் வெளி இடங்களுக்கு செல்வதற்கான ஆளுமை.
- சிறந்த தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் திறன்
- க.பொ.த உயர்தரத்தில் பிரதான 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் அடிப்படைச் சம்பளம் ,பயணத்திற்கு செலவு செய்த பணத்தினை ஈடு செய்தல் ,கையடக்க தொலைபேசி செலவுகள்(குறிப்பிட்ட எல்லை வரை) அத்தோடு கவர்ச்சிகரமான ஊக்குவிப்பு திட்டங்கள் உள்ளடங்கலாக மிகவும் போட்டிமிகு ஊதிய பொதியினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொழில்முறை வளர்ச்சிக்கு மற்றும் மேம்பாட்டிற்கு வளர்ச்சிப் பாதையினையும் விரிவாக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி வாய்ப்புக்களையும் வழங்குகின்றனர்.