DFCC Pay Merchant

DFCC Pay Merchant

DFCC வங்கி DFCC Pay Merchant App இனை அறிமுகப்படுத்துகின்றது, இது விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை பணமில்லாது, Quick Response (QR) குறியீடுகள் மூலம் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் உள்ள Android கையடக்கத் தொலைபேசி மூலம் QR கொடுப்பனவுகளை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் பெறுவதற்கான புதிய வழியை இன்றே அனுபவியுங்கள்.

வாடிக்கையாளராக பதிவு செய்யுங்கள்

வாடிக்கையாளராக பதிவு செய்யுங்கள்

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து சுயமாகவே இதற்காக பதிவு செய்து கொள்ள முடியும்.
  • பௌதிக வடிவிலான அட்டையில்லாமல் வங்கிக் கணக்கொன்றின் மூலமாக மொபைல் தொலைபேசி ஊடாக பரிவர்த்தனை செய்ய பயனர்களுக்கு இடமளிக்கின்றது.
  • இதற்கு கட்டணம் கிடையாது.
    பங்கேற்கும் அனைத்து உள்ளூர் வங்கி சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளையும் சேர்த்துக் கொள்ள முடியும்.
  • DFCC கடனட்டை கணக்கு விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான அணுகல் வசதி.
  • இலங்கையில் உள்ள அனைத்து ‘LANKAQR’ வணிகர் மையங்களிலும் கொடுப்பனவுகளை செலுத்தலாம்.
  • DFCC கடனட்டை வாடிக்கையாளர்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் Visa QR வசதி கொண்ட வணிக மையங்களில் app ஐ பயன்படுத்தி கொடுப்பனவுகளை செலுத்தலாம்.
  • வாடிக்கையாளர்கள் முன்னெடுக்கும் டிஜிட்டல் (பண வடிவமல்லாத மற்றும் அட்டை இன்றிய)
  • கொடுப்பனவுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
  • விரிவான பரிவர்த்தனை தொடர்பான உடனுக்குடன் அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகளுக்கான அணுகல் வசதி
  • 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மைய உதவி.

எப்படி பதிவு செய்வது

  • Play Store அல்லது App Store வழியாக App ஐப் பதிவிறக்கம் செய்யவும்.
  • App இல் இணைந்து கொள்வதற்கான பதிவு நடைமுறையை பூர்த்தி செய்யவும்.
  • பதிவு செய்வதற்கு சரியான சொந்த விவரங்களை உள்ளிடவும்.
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்.
  • 8 எண் கொண்ட தனிப்பட்ட அடையாள இலக்கத்தை (PIN) தோற்றுவிக்கவும்.

 

கொடுப்பனவு சாதனத்தை எவ்வாறு இணைத்துக் கொள்வது

உங்கள் DFCC கடனட்டையை இணைத்துக்கொள்ள

  • விபரப் பட்டியலிலிருந்து ‘கட்டண முறைகள்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அட்டையின் முகப்பக்கத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது அட்டையின் இலக்கம் மற்றும் தேவையான விவரங்களை உள்ளிட்டு உங்கள் DFCC கடனட்டையை பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • அட்டை கணக்குடன் இணைந்த மொபைல் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆறு இலக்க சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்.

 

எந்தவொரு வங்கியிலும் நீங்கள் கொண்டுள்ள நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கினை இணைத்துக் கொள்ள

  • விபரப் பட்டியலிலிருந்து ‘கட்டண முறைகள்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ‘புதிய கணக்கை சேர்த்துக்கொள்ள’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • வங்கியைத் தேர்ந்தெடுத்து கணக்கு இலக்கத்தை உள்ளிடவும்.
  • கணக்கு வகை, கணக்கு இலக்கம் ஆகியவற்றை உள்ளிடவும்.
  • உங்களுக்கு எஸ்எம்எஸ் அறிவிப்பு மூலமாக தோராயமாக கொடுக்கப்பட்ட தொகையை உள்ளிட்டு மேற்கொண்டு தொடரவும்.

ஒரு வணிகராக பதிவு செய்து கொள்வதற்கு

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • வணிகத்தின் அடிப்படையில் ஆதார துணை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவைப்பாடு.
  • எந்த DFCC வங்கி கிளையிலிருந்தும் இந்த வசதியைக் கோருவதற்கு, DFCC வணிகர் ஒப்பந்தம், விண்ணப்பம் ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • பணத்தைப் பெற்றுக்கொள்ள DFCC வங்கியில் கணக்கொன்று திறக்கப்பட வேண்டும்.
  • பொது விரைவுக் குறியீடு (QR) கொடுப்பனவுத் தீர்வுகளுக்கு அதற்கு இணக்கமான மொபைல் தொலைபேசி / சாதனம் தவிர வேறு எந்த கூடுதல் வன்பொருள் தேவைப்பாடும் கிடையாது.
  • நிலையான (static) மற்றும் மாறும் (dynamic) பொது விரைவுத்; தகவல் குறியீடுகள் என இரு வழி பரிவர்த்தனை.
  • உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடனட்டைகள் மற்றும் Lanka QR பரிவர்த்தனைகள் அடங்கலாக பொது விரைவுத் தகவல் குறியீடு கொடுப்பனவுகளை வழங்கும் ஏனைய தெரிவுகளுக்கான கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள முடியும்.
  • வசதியை செயலாக்கப்படுத்திக் கொள்வதற்கு வங்கி தொடர்பினை ஏற்படுத்தும்.

 

வணிகர் ஒப்பந்தம்

வணிகர் விண்ணப்பம்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

கட்டணம்

  • DFCC வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் – ரூபா 30.00
  • Pay App இலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கான பரிவர்த்தனை உச்ச வரம்பு – ரூபா 1,000,000.00
  • DFCC கணக்குகளுக்கு இடையில் ஒரு தடவையில் அதிகபட்ச பணப் பரிமாற்ற உச்ச வரம்பு ரூபா 500,000.00