வாடிக்கையாளர்
வாடிக்கையாளர்
எப்படி தொடங்குவது
நீங்கள் இப்போது DFCC Wallet க்கு பதிவு செய்யலாம்.
முறை 01 – வங்கி பற்று அட்டை வழியாக பதிவு செய்யுங்கள்.
1. வேர்ச்சுவல் வொலெட்டை பதிவிறக்கம் செய்யவும்.
2. “பற்று அட்டையுடன் பதிவு செய்க” விருப்பத்தை தெரிவு செய்யவும்.
3. உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடவும்.
4. உங்கள் 16 எண் பற்று அட்டை எண்ணை உள்ளிடவும்.
5. உங்களது பற்று அட்டையின் இரகசிய இலக்கத்தை உள்ளிடவும்.
மேற்குறிப்பிட்டவை சீர் பார்க்கப்பட்டதன் பின்னர், நீங்கள் உள்ளிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு, தற்காலிக இரகசிய இலக்கம் அனுப்பப்படும்.
6. தற்காலிக இரகசிய இலக்கத்தை உள்ளிடுக, உள்ளிட்ட இலக்கம் சரியாயின், உங்கள் வேர்ச்சுவல் வொலெட் பதிவு செய்யப்பட்டு, உள்நுளையும் முதல் இரகசிய இலக்கம், உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.
முறை 02 – இப்போது விண்ணப்பிக்க அம்சத்தின் மூலம் பதிவுசெய்க.
1. வேர்ச்சுவல் வொலெட்டை பதிவிறக்கம் செய்யவும்.
2. “பதிவு செய்க” விருப்பத்தை தெரிவு செய்யவும்.
3. உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் உங்கள் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடவும்.
4. “அடுத்து” என்ற பொத்தானை அழுத்தி, கேட்க்கப்படும் விபரங்களை உள்ளிடவும்.
விண்ணப்பம் நீங்கள் தேர்ந்தெடுத்த கிளைக்கு பரிந்துரைக்கப்படுவதுடன், ஒரு வங்கி அதிகாரி உங்களுடன் தொடர்பு கொள்வார்.
வொலட்டுகளின் சிறப்பம்சங்கள்
- பட்டியல்களுக்கான கட்டணங்களைச் செலுத்துதல்.
- CEFT வழியாக மற்ற வங்கிகளுக்கு நிதி பரிமாற்றம்.
- பிற வங்கி கடன் அட்டைகளுக்கு CEFT வழியாக கட்டணங்களைச் செலுத்துங்கள்.
- வொலட்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றல்கள்.
- பிற வொலட் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் கோருதல்.
- கிரெடிட் கார்டு வரம்பு, கிடைக்கக்கூடிய இருப்பு, செலுத்த வேண்டிய தேதிகள், செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கட்டணம், சம்பாதித்த கேஷ்பேக் வெகுமதிகள் மற்றும் கடந்த 3 மாத அறிக்கைகள் ஆகியவற்றைக் கண்டறியவும்.
- கடைசி 5 பரிவர்த்தனைகளுடன் அனைத்து நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளின் நிலுவைகளையும் கண்டறியவும்.
- நிலையான வைப்பு நிலுவைகள், வைப்பு காலம், வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தேதி ஆகியவற்றை கண்டறியவும்.
- கடன் நிலுவைகள், செலுத்த வேண்டிய தொகைகள் மற்றும் அடுத்த கட்டண தேதி ஆகியவற்றை கண்டறியவும்.
- DFCC வங்கிக் கணக்கொன்றுக்கு மற்றும் DFCC வங்கிக் கணக்கில் இருந்தும் பரிமாற்றல்கள்.
- நிதி ஆதாரங்களை நிர்வகிக்கவும்.
- விரும்பிய பரிவர்த்தனைக்கு புனைப்பெயர் உள்ளிட்டு பதிதல்.
தகுதி
- இலங்கைப் பிரஜையாக இருத்தல்
- இணையத்தள இணைப்புகளுடனான ஸ்மார்ட் தொலைபேசியொன்றை வைத்திருத்தல்.
- 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருத்தல்
வணிகர்
வணிகர்
வணிகர்களுக்கான நன்மைகள்
- பரிவர்த்தனைகளுக்கான செலவைக் குறைத்தல்
- பரிவர்த்தனைகளுக்கு உடனடி கடன்
- மேலதிக கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் முறைமை
- சிறப்பான பண முகாமைத்துவம்
- விரைவான மற்றும் காகிதமற்ற கொடுப்பனவு முறைகள்
- பரந்தளவிலான வாடிக்கையாளர் தளத்தை அடையும் திறன்
- நீங்கள் எங்கு இருந்தாலும் தொலைபேசியூடாக பரிவர்த்தணை செய்யக்கமூடிய வசதி
- நேருக்கு நேரான பரிவர்த்தனைகளை POS உடன் ஒருங்கிணைத்துக் கொள்ளும் வசதி
- 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை
- கணக்கு மீதியை பரிசோதித்தல்
- பரிவர்த்தனைகளின்போது, குறுஞ்செய்திகளைப் பெற்றுக்கொள்ளல்
- இ–வர்த்தக பரிவர்த்தணைகளை எளிதாக்கும் வகையில் இணையத்தளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதி
வணிக வகைகள்
- பல்பொருள் அங்காடி
- அழகு மற்றும் சுகாதாரம்
- உணவகங்கள்
- ஆடைகளும் அணிகலன்களும்
- இணையத்தள அங்காடி
- இலத்திரனியல்
- பயணங்கள்
தகுதி
- இலங்கைப் பிரஜையாகவோ அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வணிகமொன்றின் உரிமையாளராகவோ இருத்தல்
- வங்கியொன்றில், நடைமுறைக் கணக்கொன்றையோ, சேமிப்புக் கணக்கொன்றையோ பேணுதல்