மீள்பார்வை
மீள்பார்வை
DFCC வங்கியானது, இலங்கையின் முன்னணி வங்கிகளை இணைக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட வலையமைப்பு கட்டமைப்பின் ஒரு அங்கமாக விளங்குகின்றது. இதன் மூலம் குறித்த வங்கி வலையமைப்பின் ஊடாக துரிதமான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்
RTGS
RTGS
நிகழ்–நேர நிகர கணக்குத்தீர்வுக் கட்டமைப்பு (RTGS) ஆனது, வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, ஏனைய வங்கிகளுக்கு, நிதிப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், கிளை வலையமைப்பினால் உபயோகிக்கப்படுகின்றது. RTGS என்பது நிகழ்–நேர அடிப்படையில், வங்கிகளுக்கிடையில் பெரும் பெறுமான நிதியை பரிமாற்ற உதவும் நுட்பமாகும்
கட்டணங்கள்
- ஏனைய வங்கிகள்– RTGS (CBSL 450 + வங்கி 550)
- சாதாரணம் – ரூ 1,000 ஒவ்வொரு பரிமாற்றங்களுக்கும், USD 10 ஒவ்வொரு பரிமாற்றங்களுக்கும்
பிரீமியர் – ரூ 500, ஒவ்வொரு பரிமாற்றங்களுக்கும் USD 5
CEFTS
CEFTS
பொதுவான மின்னணு நிதிப் பரிமாற்ற இணைப்பு (CEFTS) ஆனது வாடிக்கையாளர்கள் தமது வசதிக்கு ஏற்ப நிகழ்–நேரத்தில் உள்நாட்டு வங்கிகளுக்கிடையில் நிதிப்பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவும் நிகழ்–நேர நிதிப் பரிமாற்ற கட்டமைப்பாகும். வாடிக்கையாளர்கள் தமது இணையத்தள வங்கிச்சேவைக்குள் உள்நுழைவதன் மூலம் அல்லது வங்கிக்கிளை கருமபீடங்களிலோ இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்
கட்டணங்கள்
- வங்கிக் கருமபீடங்களில்
- சாதாரணம் –ஒவ்வொரு பரிமாற்றங்களுக்கும் ரூ 100
- பிரீமியர் – இலவசம்
- இணையத்தள வங்கிச் சேவை
- சாதாரணம் – ஒவ்வொரு பரிமாற்றங்களுக்கும் ரூ 30
- பிரீமியர் – இலவசம்
- வணிக கணக்குகள் – ஒவ்வொரு பரிமாற்றங்களுக்கும் ரூ 30
SLIPS
SLIPS
SLIPS (இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவுக் கட்டமைப்பு) என்பது, இலங்கையின் உள்நாட்டு தீர்வு வலையமைப்புக்குள்ளாக பாதுகாப்பான முறையில் நிதிப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் வங்கிகளுக்கிடையிலான மின்னணு நிதிப் பரிமாற்ற கட்டமைப்பாகும்
துண்டிப்பு நேரங்கள்
- மு .ப 10.30 (அதே நாள் பரிவர்த்தனை)
- பி .ப 1.00 (அதே நாள் பரிவர்த்தனை)
- பி.ப 5.00 (அடுத்த நாள் பரிவர்த்தனை)
கட்டணங்கள்
- ஒவ்வொரு பரிமாற்றங்களுக்கும் ரூ 50