மேல்நோக்கு
மேல்நோக்கு
புதிய DFCC இணைய வங்கிச்சேவை நீங்கள் விரும்பும் இடத்தில் இருந்தவாறே வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலமும் உங்கள் கணக்கை முகாமைத்துவம் செய்வதற்கு உங்களை இயலச் செய்து, மிக இலகுவாக பல வங்கிச் சேவைகளுடன் உங்கள் நிதிகள் மீதான முழுமையான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குகின்றது. உங்கள் குறிக்கோளை மையமாகச் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சேமிப்புகள், நிலையான வைப்புகளையும் சேமிப்புக் கணக்குகளை திறத்தல், உங்கள் கடன் அட்டைகளை செயலற்றதாக்குதல், தேவையான DFCC அறிவித்தல் (Alerts) சேவைகள் மற்றும் நீங்கள் விரும்பும் உங்கள் சொந்த பயன்படுத்துனர் அடையாளக் குறியீடு (Used ID) தெரிவுசெய்தல் போன்ற பரந்த அளவிலான சேவைகளுடன் இணைய வழியாக உங்கள் வங்கிச் சேவையை மேற்கொள்வதற்கு உங்களுக்கு வலுவூட்டப்படுகின்றது.
சிறப்பம்சமும் பெறுமதிசேர்த்தல் சேவைகளும்
சிறப்பம்சமும் பெறுமதிசேர்த்தல் சேவைகளும்
- உங்கள் வங்கிச் சேவைத் தொடர்புகளை முற்றுமுழுதாக பார்வையிட்டு கண்காணித்தல்.
- உங்கள் கணக்கு விபரங்களையும், கணக்கு மீதிகளையும் பார்வையிடல், கூற்றுகளை தரவிறக்கம் செய்தல், உங்கள் பட்டியல்களை தரவிறக்கம் செய்து அச்சிடல்
- கடன் விபரங்கள், கடன் அட்டை மற்றும் குத்தகை விபரங்களைப் பெறுதல்
- ஒரு முறை கிளிக் செய்து DFCC வங்கியில் நீங்கள் பேணும் வங்கிச் சேவைப் பட்டியல்கள் முழுவதையும் அணுகுதல்
- தடையற்ற நிதி மாற்றங்களும் கொடுப்பனவுகளும்
- உங்களுடைய கணக்குகளுக்கும் அல்லது மூன்றாம் தரப்பினரின் DFCC வங்கிக் கணக்குகளுக்கும் இடையில் உடனடியாக நிதிகளை மாற்றுதல்
- CEFTS மற்றும் SLIPS ஊடாக ஏனைய வங்கிக் கணக்குகளுடன் நிதிமாற்றம்
- இணைய வங்கிச் சேவை ஊடாக உங்கள் குத்தகைகள் மற்றும் கடன் அட்டைகளின் நிலுவைகளை செலுத்துதல்
- எதிர்காலப் பயன்பாட்டுக்காக சௌகரியமாக உங்கள் பயனாளிகளை முகாமைத்துவம் செய்து பேணுதல்
- கொடுப்பனவுப் பட்டியல்களைச் செலுத்துல்
- டயலொக் (கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனவு, கையடக்கத் தொலைபேசி பிற்கொடுப்பனவு, Mobile Broadband, Home Broadband, டயலொக் தொலைக்காட்சி, நிலையான இணைப்பு மற்றும் Wimax)
- மொபிடெல் (கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனவு, கையடக்கத் தொலைபேசி பிற்கொடுப்பனவு)
- ஸ்ரீலங்கா டெலிகொம்
- LECO
- இலங்கை மின்சார சபை (CEB)
- தேசிய நீர் வழங்கல்
- யூனியன் அஸ{வரன்ஸ் (ஆயுட் காப்புறுதி)
- AIA காப்புறுதி
- Ceylinco Life காப்புறுதி
- ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ்
- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேகரிப்பு கொடுப்பனவுகள்
உங்கள் பயன்பாட்டுக் கொடுப்பனவுகளை உங்கள் வசதிக்கேற்றவாறு எங்கிருந்தும் எந்நேரத்திலும் செலுத்துதல்.
- இலகுவாக இணையத்தின் வழியாக கணக்கு திறத்தல்
- இணைய வங்கிச்சேவை ஊடாக சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளைத் திறத்தல்
- நிகழ்நிலை வங்கி முறை மூலம் திறக்கப்படும் நிலையான வைப்புகளுக்கு மேலதிக 0.5% விகிதம்
- நிகழ்நிலை வங்கி முறை மூலம் திறக்கப்படும் நிலையான வைப்புக்களை உயர்த்தும் வசதி
- குறிக்கோளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சேமிப்புக் கணக்குகள்:
- குறிக்கோள் சேமிப்புக் கணக்கைத் திறந்து உங்கள் குறிக்கோளை அடைவதற்கு உங்கள் சேமிப்புகளை தாமாக இயங்கச் செய்தல்
- உங்கள் குறிக்கோள்களை அவதானித்து உங்கள் இலக்குத் திகதிகளையும் முதிர்வுக் காலத்தையும் நிர்ணயித்தல்
- கடன் அட்டை சேவைகள்
- உங்கள் கடன் அட்டையை செயலற்றதாக்குதல்
- உங்கள் கடன் அட்டைகளை வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கு உங்கள் பிரயாணம் தொடர்பான அறிவித்தல்களை இற்றைப்படுத்தல்
- உங்கள் கடன் அட்டைகளை நீங்கள் பயன்படுத்த விரும்பாத நாடுகளைத் தடைசெய்தல்
- உங்கள் கொடுக்கல் வாங்கல்களைச் சரிபார்த்தல் (பூர்த்தியாக்கப்பட்டவை, பட்டியலிடப்படாதவை)
- அட்டைகளின் கூற்றுகள் (கடந்த 6 மாதங்களுக்கான அட்டையின் கூற்றுகளை தரவிறக்கம் செய்தல்)
- சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்களை தெரிவித்தல் மற்றும் தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுக்கு மாற்றுதல்
- உங்கள் தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை சரிபார்த்தல்
- கடன் அட்டைக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல்
- அரசு நிறுவனங்களுக்கான கட்டணம் செலுத்துதல்:
- உள்நாட்டு இறைவரி திணைக்களத்திக்கு வரி செலுத்துதல்
- ஊழிய சேமலாபாநிதியம்
- இலங்கை வாடிக்கையாளர்களுக்கான கொடுப்பனவுகள்
- பிற அரசாங்க கொடுப்பனவுகள் – இங்கே கிளிக் செய்யவும்
- சுய சேவை சிறப்பம்சங்கள்
- நிதி மாற்றங்கள் மற்றும் பட்டியல் கொடுப்பனவுகளுக்கு எதிர்கால திகதியிடப்பட்ட கொடுக்கல் வாங்கல்களைத் திட்டமிடுதல் அல்லது நிலையியல் கட்டளை அறிவுறுத்தல்களை மேற்கொள்ளுதல்
- கொடுப்பனவு உறுதிப்படுத்தலுக்காக கொடுக்கல் வாங்கல் பற்றுச்சீட்டுகளை தரவிறக்கம் செய்தல்
- காசோலைப் புத்தகங்களுக்கான கோரிக்கை அல்லது வழங்கப்பட்ட காசோலைகளுக்கான கொடுப்பனவுகளைத் தடைசெய்தல்
- நீங்கள் விரும்பும் எச்சரிக்கை அறிவிப்புகளை செயற்படுத்தல்
- கட்டமைக்கப்பட்ட செய்தி வசதி ஊடாக வங்கியுடன் பாதுகாப்பாக தொடர்பாடலை மேற்கொள்ளுதல்
- தங்களுடைய முற்பண வருமான வரி (AIT) சான்றிதழை வங்கிக் கிளைகளுக்கு வரும் அலைச்சல் இன்றி பதிவிறக்கிக் கொள்ளலாம்.
- இணைய வங்கிச்சேவை பரிவர்த்தனை வரையறைகள்
நாளுக்கான வரையறை (மொத்தம்) | பரிவர்த்தனை வரையறை |
Rs. 10,000,000 | Rs. 5,000,000 |
*நாளுக்கான வரையறையை அதிகரிக்க விரும்பினால், இணைய வங்கிச்சேவை இன்பாக்ஸ் (inbox) மூலம் எங்களுக்கு தெரிவிக்கலாம்.
எவ்வாறு ஆரம்பிப்பது?
எவ்வாறு ஆரம்பிப்பது?
நீங்கள் தற்போது DFCC வாடிக்கையாளர் ஒருவராக இருப்பின், இந்த சேவைகளைப் பெறுவதற்காக பதிவு செய்வதற்கு 0112350000 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் வங்கியின் ஒரு புதிய வாடிக்கையாளராயின், நீங்கள் கணக்கைத் திறப்பதற்கு விண்ணப்பிக்கும் போது இணைய வங்கிச் சேவைக்கும் சேர்த்துக் கொள்வதற்கான உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- பதிவுக்கட்டணம் அல்லது வருடாந்த கட்டணம் உண்டா?
- ஆம், வருடாந்தக் கட்டணம் உண்டு. தயவு செய்து தீர்வையைப் (வயசகைக) பார்க்கவும்
- நான் முதன்முறையாக எனது பயன்படுத்துனர் அடையாளக் குறியீட்டையும் (User ID) உள் நுழைவதற்கான கடவுச் சொல்லையும் (Login Password) எவ்வாறு பெற்றுக்கொள்வது?
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்துக்கும் தற்காலிக பயன்படுத்துனர் அடையாளக் குறியீடும் கடவுச் சொல்லும் அனுப்பி வைக்கப்படும்
- உங்கள் தற்காலிக பயன்படுத்துனர்; அடையாளக் குறியீடும் கடவுச் சொல்லும் கிடைக்கப்பெற்றவுடன் நீங்கள் இணைய வங்கிச்சேவைத் தளத்தை (online banking portal) அணுகி நீங்கள் விரும்பும் பயன்படுத்துனர் அடையாளக் குறியீட்டையும் உள் நுழைவதற்கான கடவுச் சொல்லையும் நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியும்
இது தவிர்ந்த மேலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்