செயற்திட்ட நிதியுதவி

செயற்திட்ட நிதியுதவி

DFCC வங்கி, தெளிந்த துறைசார் அனுபவத்தையும் நிதியியல் தேர்ச்சியையும் கொண்டிருப்பதோடு, பல்வேறுபட்ட பிரிவுகளில் பல ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டங்களுக்கு நிதியுதவியைப் பெற்றுத்தந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களது தேவையை எமக்கு தெரியப்படுத்துவது மட்டுமே, அவசியமான சேவையை நாம் பெற்றுத் தருவோம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

செயற்திட்ட நிதிச்சேவை ஒரு விசேடமான தேர்ச்சி. குறித்த வணிகம் தொடர்பான பொறுப்பேற்பை மதிப்பீடு செய்தல் மற்றும் மிகப் பொருத்தமான நிதியுதவி பக்கேஜை கட்டமைத்தல் தொடர்பாக துறைசார் அறிவு மற்றும் நிதியியல் தேர்ச்சி என்பன அவசியமாகும். செயற்திட்டத்தின் காசுப் பாய்ச்சல்களுக்கு அதிக கவனம் தரப்படுவதோடு, மதிப்பீட்டு செயன்முறையில் செயற்திட்டத்தின் நீடித்திருக்கும் ஆற்றலை பகுத்தாய்வதற்காக பல்வேறு அம்சங்கள் கருத்திற்கொள்ளப்படும். அவற்றில் ஆதரவாளரின் கொடுக்கல் வாங்கல் பதிவுகள், சந்தை, தொழினுட்பம் மற்றும் தயாரிப்பு, முகாமைத்துவம் மற்றும் மனித வளம், சூழல், விதிமுறைகள் மற்றும் சட்ட அனுமதிகள் என்பன உள்ளடங்கும். அனுகூலமான நிதி ஒத்துழைப்பானது, ஆதரவாளரின் பங்களிப்பு, ஊக்க மட்டம், கடன் உரிமை மற்றும் மீள் செலுத்துகை திட்டம் அத்துடன் தேவைப்படக்கூடிய கடன் மேம்படுத்தல்கள் என்பவற்றை கருத்திற்கொண்டு முடிவு செய்யப்படும். சில சந்தர்ப்பங்களில், தேவைகள் நியாயமாக இருக்கும்போது செயற்திட்ட நிதியுதவி விருப்பத்திற்கமைவான பங்குகளின் வடிவில் வழங்கப்படலாம். 

பிரயோகித்தல்

எந்தவொரு செயற்திட்டம் தொடர்பான மதிப்பாய்வும் அதன் நீடித்திருக்கும் திறனை  நிறுவுவதை நோக்காகக் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது. அந்த விதத்தில், எந்தவொரு கடன் வசதிக்கும் அனுமதியளிப்பதற்கு முன்பதாகவும் உத்தேசிக்கப்பட்ட பொறுப்பேற்புடன் தொடர்புடைய இடரார்ந்த அம்சங்களில் இச் செயன்முறை அவதானத்தை செலுத்தும். இதனை முன்னிட்டு எந்தவொரு நிதிச்சேவை கோரிக்கை தொடர்பாகவும் பொதுவாக தேவைப்படும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

 

ஊக்க ஆதரவு

பின்புலம், வணிக அனுபவம், தொழினுட்பத் தேர்ச்சி, முன்னைய கொடுக்கல் வாங்கல்களின் பதிவு என்பவற்றுடன் செயற்திட்ட ஆதரவாளர்கள், பங்குதாரர்கள், பணிப்பாளர்கள் மற்றும் அதி முக்கியத்துவம் தரப்பட வேண்டிய யாரேனும் பிரதான செயற்திட்ட உறுப்பினர் ஆகியோரை உள்ளடக்கிய ஏனைய விபரங்கள்.

வணிக பிரிவுகள்

வணிகத்தால் பயனைப் பெற்றுக்கொள்ளும் சந்தை தொடர்பான சுருக்க விபரம். இதில் சந்தை கட்டமைப்பு, அதன் வளர்ச்சி சாத்தியங்கள், போட்டித்தன்மை, விநியோகம் /வழங்குகை வழிமுறைகள், வாய்ப்புகள் / இடையூறுகள், விதிமுறைகள் மற்றும் வரிச் சூழல் என்பவற்றுடன் வணிகம் தன்னகத்தே கொண்டுள்ள முக்கிய போட்டியிடும் ஆற்றல்களும் உள்ளடக்கப்படுதல் வேண்டும். 

உத்தேசிக்கப்பட்ட செயற்திட்டம்

தயாரிப்பு அல்லது சேவை செயன்முறையின் சுருக்க விபரம். இதில் உள்ளீடு முதல் வெளியீடு வரையிலான விபரங்கள் உள்ளடங்குவதோடு, செயற்திட்ட இடம், தயாரிப்பு / சேவை வசதிகள், தொழினுட்பம், மூலப்பொருட்கள் / பயன்பாட்டுப் பொருட்கள், அத்தியாவசிய சேவைகள், ஒழுங்காக்கல் கட்டமைப்பு, முகாமைத்துவம் / மனிதவளம், சூழல், அனுமதிகள் மற்றும் ஏனைய ஒழுங்குபடுத்தல்கள் அனுமதி, அத்துடன் செயற்திட்டத்தின் செயலாக்க கால அட்டவணை மற்றும் செயற்திட்டத்தை உரிய காலத்தில் முடிப்பதற்கான நடவடிக்கைகள் என அனைத்தும் உள்ளடங்குதல் வேண்டும்.  

செலவீன உத்தேச மதிப்பீடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் செயற்திட்டத்தின் உத்தேச செலவீன மதிப்பீடு வழங்கப்படல். இதில் நிலையான சொத்துக்கள், புலன்படா சொத்துக்கள் மற்றும் தற்போதைய மூலதனம் ஆகிய அம்சங்கள் உள்ளடங்குதல் வேண்டும். இந்த செலவீனங்கள் அனைத்தும் அளவைப் பட்டியல்கள், வெவ்வேறு மதிப்பீடுகள் (நிலையான சொத்துக்கள் தொடர்பாக) மற்றும் ஏற்றுமதி இறக்குமதி விலைகளுக்கிடை விகிதம் (தற்போதைய மூலதனம் தொடர்பாக) என்பவற்றால் மெய்ப்பிக்கப்படுதல் வேண்டும். 

நிதிச்சேவை

பங்குதாரர்களின் பங்களிப்புகள், நீண்டகால / குறுகிய கால நிதிச்சேவை திட்டம், ஊக்கம் மற்றும் மொத்த ஆற்றல், வணிக வங்கிச்சேவை மற்றும் ஏனைய வணிகக் கடன் வசதிகள், நிதிச்சேவை எறியங்கள் மற்றும் ஏனைய எதிர்வுகூறல்கள், முக்கிய அனுமானிப்புகள், பிரிப்புகள் மற்றும் நீடிப்பு உறுதிப்படுத்தல் ஆய்வு என்பனவும் இதன்போது கருத்திற் கொள்ளப்படும். 

கடன் ஒழுங்கமைப்பு

செயற்திட்ட ஒழுங்காக்கல் அட்டவணையின் அடிப்படையில் தயவுக் காலப்பகுதி (வழமையாக இரு வருடங்கள் வரை) உள்ளடங்கலாக 8 வருடங்கள் வரை 

வட்டி வீதம்

வட்டி நியமப்புள்ளியுடன் எல்லை. DFCC  நிதி தொடர்பாக வட்டி நியமப்புள்ளியானது, சராசரி அளவிடப்பட்ட பிரதான கடன் வீதம்  (AWPLR)  ஆக இருக்கலாம். கடன் எல்லை நிதி தொடர்பாக சராசரி அளவிடப்பட்ட வைப்பு வீதம் (AWDR) ஆக இருக்கலாம். ஏனைய நியமபபுள்ளிகள் குறித்த சூழ்நிலைக்கு அமைவாக பிரயோகிக்கப்படலாம்.