
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கியின் புதிய ‘வாகன கடன்” திட்டம் உங்கள் கனவு வாகனத்தை வாங்குவதற்கு கட்டுபடியான வழிமுறைகளை வழங்குகிறது!
October 25, 2021

வணிக வங்கிச்சேவையில் முன்னோடியான DFCC வங்கி, பொருளாதார மற்றும் சமூக மதிப்பை தோற்றுவிப்பதற்கான அதன் சமீபத்திய முயற்சியாக, ‘DFCC வாகன கடன்’ வசதியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. மோட்டார் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மகத்தான அளவில் கட்டுபடியான தெரிவுகளுக்கு இடமளிக்கும் ஒரு புத்தாக்கமான வாகன கடன் திட்டமாக இது காணப்படுகின்றது.
புதிய DFCC வாகன கடன் திட்டமானது நீட்டிக்கப்பட்ட கொடுப்பனவுக் காலத்துடன் ரூபா 10 மில்லியன் வரை கடன் வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. எஞ்சிய மதிப்பை உள்ளடக்கிய ஒரு கட்டமைக்கப்பட்ட மீள்கொடுப்பனவுத் திட்டத்தின் மூலம், கடன்படுனர் தான் விரும்பிய வாகனத்தை வாங்குவதற்கு இந்த வசதி உதவுகிறது. தற்போதைய கடன் காலத்தை மேலும் நீட்டித்துக் கொள்ளும் ஒரு தெரிவையும் இது உள்ளடக்கியுள்ளது. வாடிக்கையாளருக்கு கடன் காலத்தின் முடிவில் எஞ்சிய தொகையை அதிகபட்சம் 8 வருடங்களுக்கு மேற்படாமல் மேலும் சில வருடங்களுக்கு கடனைத் தொடர உதவுகிறது. கடன்படுனர் அதன் மூலம் தற்போதைய வாகனத்தை அப்புறப்படுத்தி, புதிய வாகனத்திற்கு புதிய கடனைப் பெறுவதன் மூலம் எஞ்சிய பெறுமதியைத் தீர்க்கும் தெரிவைப் பெறுகிறார். இக்கடன் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு வாகனத்தை, கட்டுபடியான மாதாந்த தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தின் மூலம் குறைவான அபாயம் மற்றும் அதிகரித்த கடன் காலம் மூலம் வாங்குவதற்கு உதவுவதாகும்.
வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் அனைத்து கார்கள், வான்கள், எஸ்யூவி வாகனங்கள் மற்றும் டபிள் கெப் வாகனங்களுக்கு மட்டுமே இக்கடன் வசதி பொருந்தும்.
தனது வாடிக்கையாளர்களின் பொருளாதார வளர்ச்சியையும், நிதியியல் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக வாகனங்களின் கட்டுபடியை மேம்படுத்துவது மிக முக்கியம் என்று DFCC வங்கி உறுதியாக நம்புகிறது. கட்டுபடியான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட கடன் வசதிகளுக்கான வாய்ப்புக்கள் இல்லாமை மற்றும் தொற்றுநோயின் மத்தியில் பொருளாதார நிலைமைகள் தேக்கமடைவதால் பாரதூரமான அளவில் கட்டுப்படுத்தப்பட்ட பணப்புழக்கங்கள் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் ஒரு கணிசமான முட்டுக்கட்டையாக உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளைக் கவனித்து, DFCC வங்கியின் ‘வாகன கடன்’ திட்டம், சமுதாயத்தின் கணிசமான பிரிவினருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இது தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் நேர்மறையான பலன்களைக் கொண்டுள்ளது.
வங்கியின் சமீபத்திய புத்தாக்கமான கடன் திட்டத்தின் அறிமுகம் குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “புதிய ‘வாகன கடன்’ திட்டம் முன்னர் எப்போதும் இல்லாத அளவில் கட்டுபடியாகும் மட்டத்தைக் கொண்டுள்ளதால், இலங்கையில் வாகன சந்தைக்கு மீண்டும் உயிரூட்டும் மற்றும் புரட்சிகரமான மாற்றத்திற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. சமுதாயத்தில் பாரிய அளவிலான பிரிவினர் தங்கள் கனவு வாகனங்களை வாங்குவதற்கு ஒரு வழிமுறையை உருவாக்குவதன் மூலம் பொருளாதார உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் மீண்டும் பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ‘வாகன கடன்’ முயற்சியானது, DFCC வங்கியின் நீண்ட கால நிலைபேறாண்மை மூலோபாயத்துடன் இணைந்த சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் சமூக-பொருளாதார நன்மைகளுடன் பொருளாதார நெகிழ்ச்சித்திறனை உறுதிப்படுத்துவதற்கான பயணத்தின் மற்றொரு படியாகும்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.