DFCC Read the Way – இலங்கையில் சிறுவர்களின் கல்விக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு நிலைபேற்றியல் சார்ந்த முயற்சி
June 20, 2023
இலங்கையில் அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, புத்தகங்கள் மூலம் உலகை ஆராயும் வழிமுறையில் கற்கின்ற கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் உள்ள சிறுவர்களின் கல்விக்கு ஆதரவளிக்கும் புதிய முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளது. “DFCC Read the Way” நிகழ்ச்சித்திட்டமானது, இலங்கையில் உள்ள பின்தங்கிய சிறுவர்களுக்கு, குறிப்பாக தரமான கல்வியைப் பெறுவதில் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு, புத்தகங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் கல்வி சார்ந்த உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் சிறுவர்களுக்கு வாசிப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலமும், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், எதிர்கால தலைவர்களாக மாறுவதற்கு தேவையான கருவிகளை வழங்குவதன் மூலமும் சிறுவர்களுக்கு வலுவூட்டவும், தைரியப்படுத்தவும் முயல்கிறது.
2030 ஆம் ஆண்டிற்கான அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் மற்றும் தொலைநோக்கினால் வழிநடத்தப்படும் கல்வியானது, முதியோர், சுற்றுச்சூழல், உடற்பயிற்சி, அவசரகால நிவாரணம் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றுடன் வங்கி கவனம் செலுத்தும் 6 E க்கள் – 6 குறுக்கு வெட்டுக் கருப்பொருள்களில் ஒன்றாகும்.‘மீள்எழுச்சித்திறன் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்பது’ என்பதன் அடிப்படையில் 6 E க்கள் DFCC வங்கியின் நிலைபேற்றியல் நோக்கத்தால் ஈர்க்கப்பட்டு நிலைபெற்றுள்ளன. இவ்வாறு, DFCC Read the Way முயற்சியானது, இலங்கையில் கல்வியை மேம்படுத்த DFCC வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாகும். அத்துடன், Caritas Sri Lanka – SEDEC உடன் இணைந்து நடத்தப்படும் “DFCC Samata English” மற்றும் “DFCC Education Scholarship Programme” என்ற கல்வி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் ஆகியனவும் கல்வி சார்ந்த அதன் முயற்சிகளில் அடங்கியுள்ளன.
“இலங்கையில் கல்வித் தேவைகளுக்கு, குறிப்பாக பின்தங்கிய பின்னணிகளைக் கொண்ட சிறுவர்களுக்கு, குறிப்பாக பெரும் பொருளாதார நெருக்கடியின் போது, கல்வித் தேவைகளுக்கு உதவுவதற்காக இந்த முயற்சியை முன்னெடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று DFCC வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியலுக்கான துணைத் தலைவர் நில்மினி குணரத்ன அவர்கள் தெரிவித்தார். “சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும், எமது சிறுவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தைத் தோற்றுவிப்பதற்கு கல்வியே முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.”
நன்கொடை அளிப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும், இந்த திட்டத்திற்கு பங்களிக்குமாறு DFCC வங்கி ஊக்குவிக்கிறது. ஆர்வமுள்ள எவரும் நாடளாவிய ரீதியில் எந்தவொரு DFCC கிளையிலும் நன்கொடை அளிக்கலாம் என்பதுடன், மேலும் புதிய அப்பியாசப் புத்தகங்கள், அனைத்து மொழிகளிலும் கதைப் புத்தகங்கள், அனைத்து மொழிகளிலும் உள்ள விசேட பாடப் புத்தகங்கள், அகராதிகள் போன்றவற்றை நன்கொடையாக வழங்குவதற்கும் ஊக்குவிக்கப்படுவார்கள். புத்தகங்களையும் தகுதியான பாடசாலைக்கு விநியோகிக்க நாடளாவிய ரீதியில் உள்ள கிளை வலையமைப்பின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு மேலதிகமாக, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு அப்பியாசப் புத்தகப் பொதிகளை வங்கி வழங்கும்.
“இந்த முயற்சியின் மூலம் இலங்கையில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் கணிசமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த எம்மால் முடியும்,” என்று DFCC வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியலுக்கான துணைத் தலைவர் நில்மினி குணரத்ன அவர்கள் மேலும் தெரிவித்தார். “எமது சிறுவர்களுக்கும், நமது நாட்டிற்கும் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் எம்முடன் கைகோர்ப்பர் என்று நாம் திடமாக நம்புகின்றோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.”
நிலைபேற்றியலுடனான எதிர்காலத்தை நனவாக்க உறுதிபூண்டுள்ள DFCC வங்கியானது, இலங்கையில் சமூக நோக்கங்களுக்கு ஆதரவளிக்கும் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் வங்கியின் பல முயற்சிகளின் தொடர்ச்சியாகும்.
DFCC Read the Way முயற்சி மற்றும் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள DFCC கிளைக்குச் செல்லவும் அல்லது உங்கள் DFCC வங்கிக் கிளை முகாமையாளரைத் தொடர்பு கொள்ளவும்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.