
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கியானது தரம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் 2022 க்கான தேசிய மாநாட்டில் Lean Six Sigma Project திட்டத்திற்கான தங்க விருதை வென்றுள்ளது
March 14, 2023

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கியின் ஒரு அங்கமான DFCC Leasing, இலங்கை தர மேம்பாடு மற்றும் உற்பத்தித்திறன் சங்கத்தினால் (Sri Lanka Association for the Advancement of Quality & Productivity – SLAAQP) அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் 2022 க்கான தேசிய மாநாட்டில், அதன் செயல்முறை மேம்பாடு சார்ந்த Lean Six Sigma Project திட்டத்திற்கான தங்க விருது அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.
2023 பெப்ரவரி 21 ஆம் திகதி கொழும்பு BMICH இல் இடம்பெற்ற இந்த மதிப்புமிக்க நிகழ்வு, 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 400 க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்தது. இந்த விருது DFCC வங்கிக்கான ஒரு சாதனை இலக்காகும், ஏனெனில் இது Lean Six Sigma திட்டத்திற்கான விருதை 1 வது முறையாக வங்கி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுடன், அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவைகளை வழங்குவதில் அதன் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நுழைவு விண்ணப்பங்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் தாக்கம் ஆகியன, கடுமையான மதிப்பீட்டு அளவுகோல்களின்படி ஒரு சுயாதீன நிபுணர் நீதிபதிகள் குழுவால் மதிப்பிடப்பட்டது, இதன் விளைவாக DFCC Leasing செயல்முறை மேம்பாட்டுத் திட்டத்திற்கு தங்க தரநிலைகள் வழங்கப்பட்டன. DFCC வங்கி பிஎல்சி சார்பாக Lean Six Sigma Black Belter ஆன சாமர பீரிஸ் மற்றும் சில்லறை சொத்துகள் பிரிவின் தலைவர் அசங்க பட்டபடிகே ஆகியோரால் செயல்திட்ட விளக்கக்காட்சி நிகழ்த்தப்பட்டது.
DFCC வங்கி பிஎல்சி இன், சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இந்த சாதனை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அணியின் உற்சாக உணர்வை அங்கீகரித்து கருத்து வெளியிடுகையில், “புத்தாக்கம், செயல்திறன் மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் எமது Lean Six Sigma Project திட்டத்திற்காக இந்த தங்க விருதைப் பெற்றதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவையை வழங்கும் அதே வேளையில், எங்கள் செயல்முறைகள் பயனுள்ளதாகவும், திறன்மிக்கதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய எங்கள் அணி அயராது உழைத்துள்ளது. இந்த அங்கீகாரம் எங்களின் தொடர்ச்சியான மேம்பாட்டு முயற்சிகளுக்கும், சிறப்பான அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்கள் முயற்சிகளை அங்கீகரித்து எங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியதற்காக SLAAQP க்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கியானது, வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், சமூகங்களுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்கும் அதே வேளையில் அதன் இலக்குகளை முன்னோக்கி செலுத்தும் நிலைபேண்தகு, திறன்மிகு மற்றும் புத்தாக்கமான தீர்வுகளில் முதலீடு செய்வதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. அடுத்த தசாப்தத்தில் அனைத்து இலங்கையர்களுக்கும் அதிநவீன வங்கிச்சேவை மற்றும் நிதியியல் தீர்வுகளை வழங்கும் வகையில், மிகவும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய, அவர்களுக்கு செவிமடுக்கின்ற மற்றும் புத்தாக்கமான வழங்குனராகவும் பசுமை நிதிக்கான வங்கியாகவும் வெளிப்படுவதற்கு தன்னை வலுவூட்டுவதற்காக, வங்கி முறையான நிலைபேற்றியல் மூலோபாயம் மற்றும் கட்டமைப்பை உள்வாங்கியுள்ளது.

இடமிருந்து வலமாக நிற்பவர்கள் – சாமர பீரிஸ் (தயாரிப்பு முகாமையாளர் – DFCC குத்தகை), பேராசிரியர் ஹேமந்தி ரணசிங்க (SLAAQP அதிகாரி), திருமதி திலகா ஜயசுந்தர (செயலாளர் – கைத்தொழில் அமைச்சு), அசங்க பட்டபடிகே (DFCC – சில்லறை சொத்துக்களின் தலைமை அதிகாரி), திரு. விபுல் குலரத்ன (தலைவர் – SLAAQP)
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.