உங்கள் இணைய வழி மூலமான கொடுக்கல் வாங்கல்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துவது எவ்வாறு?
February 9, 2023
இன்று, இணைய வழி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடான வங்கிச் சேவைகள் முன்னெப்போதையும் விட பாதுகாப்பானவையும் எளிமையானவையும் ஆகும். எங்களைப் பொறுத்தவரை, உயர் தரத்திலான பாதுகாப்பையும் ஆபத்தின்மையையும் உறுதிப்படுத்துவதற்காக அதிநவீன, கைத்தொழிலுக்கு உகந்த, பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இருப்பினும், உங்கள் இணைய வழி மூலமான கொடுக்கல் வாங்கல்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளும் உள்ளன.
குறுஞ்செய்தி (SMS) அறிவித்தல்களை இயலச்செய்யுங்கள்
SMS அறிவித்தல்கள் உடனடியாக வழங்கப்படுபவையாகும் என்பதுடன் அவற்றின் மூலம் உங்கள் கணக்கில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்போது உடனடியாக அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கப்படும். இந்த சிறப்பம்சத்தை செயல்படுத்துவது ஏனெனில், உங்கள் கணக்கில் சந்தேகத்திற்கிடமான அல்லது அதிகாரம் அளிக்கப்படாத கொடுக்கல் வாங்கல் ஒன்று மேற்கொள்ளப்பட்டால், அதைப் பற்றி உங்களுக்கு உடனடியாக அறியப்படுத்தப்படும். எனவே, நீங்கள் அதைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க முடியும். நடைபெறக்கூடாத அத்தகைய நிகழ்வொன்று நடைபெறும்போது, நீங்கள் எந்தளவு வேகமாக எங்களுக்குத் தெரிவிக்கின்றீர்களோ, அந்தளவு வேகமாக உங்கள் நிதிகளைப் பாதுகாப்பதற்கும் இணையவெளி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் நாங்கள் செயற்பட முடியும். எனவே, நீங்கள் ஏற்கனவே SMS அறிவித்தல்களை செயற்படுத்தவில்லையெனில், எங்கள் இணைய தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இப்பொழுதே அதனை செயல்படுத்த முடியும்.
இணைய வழி வங்கிச்சேவைக்கான பாதுகாப்பான உறுதிப்படுத்தலை இயலச்செய்யுங்கள்
பாதுகாப்பான உறுதிப்படுத்தலானது, ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தும் உறுதிப்படுத்தல் குறியீடுகளை உருவாக்கும் ஒரு வன்பொருளை (பௌதீக) பயன்படுத்துகின்றது. உங்கள் கணக்குடன் நீங்கள் இணைக்கப்பட்டவுடன் உள்நுழைவதற்கு (Login) உங்கள் கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பான உறுதிப்படுத்தல் குறியீடு (authentication code) ஆகிய இரண்டும் உங்களுக்குத் தேவைப்படும். இது உங்கள் டிஜிட்டல் வங்கிக்கு ஊடுருவ முடியாத பாதுகாப்புத் தடையை வழங்கும் 2 காரணிகளை உறுதிப்படுத்தும் ஒரு வடிவமாகும். ஏனெனில், எந்தவொரு திருடனும் உங்கள் கணக்கை அணுகுவதற்கு உங்கள் கடவுச்சொல்லை மட்டுமன்றி, உங்கள் உறுதிப்படுத்தல் குறியீட்டையும் அவர்கள் தெரிந்திருத்தல் வேண்டும். பாதுகாப்பான உறுதிப்படுத்தலை செயல்படுத்த நீங்கள் விரும்பினால், எமது ஏதேனும் கிளையில் அல்லது 24 மணித்தியாலமும் செயற்படும் 011 2350000 என்னும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து செயல்படுத்த முடியும் அல்லது எமது இணைய வழி வங்கிச்சேவை ஊடாக மின்னஞ்சல் மூலம் உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியும்.
உங்கள் கடவுச்சொற்களை ஒழுங்காக மாற்றவும்
உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுவது அதிகாரம் அளிக்கப்படாத அணுகலின் வாய்ப்பை பெரும்பாலும் குறைக்கின்றது. இது குற்றவாளிகள் உங்கள் கடவுச்சொல்லைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இது அசௌரியமானதாக இருக்கலாம், ஆனால் உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுமாறு நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.
பயன்படுத்துனரின் பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் கடவுச்சொற்கள் ஆகியவற்றை ஒருபோதும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்!
DFCC வங்கி உள்ளிட்ட எவருடனும் உங்கள் பயன்படுத்துனர் பெயர்கள், கடவுச் சொற்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் கடவுச்சொற்களை எவருடனும் ஒருபோதும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். DFCC வங்கி அல்லது நியமிக்கப்பட்ட முகவர்கள், அல்லது ஏதேனும் அரசாங்கத் திணைக்களம் அல்லது நியதிச்சட்ட சபை அல்லது சட்ட வலுவூட்டல் முகவர் ஒருபோதும் உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் கணக்குகள் அல்லது ஆள் அடையாளம், விசேடமாக உங்கள் பயன்படுத்துனர் பெயர், கடவுச்சொல் அத்துடன் அல்லது ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் கடவுச்சொற்கள் பற்றிய இரகசியம் மிக்க தகவல்களைக் கோரமாட்டார்கள். ஏதேனும் அத்தகைய கோரிக்கைகளுக்கு ஒரு போதும் பதிலளிக்க வேண்டாம், பதிலாக, 011 2350000 என்னும் எமது தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு விடுத்து உடனடியாக DFCC வங்கிக்கு முறைப்பாடு செய்யுங்கள்.
எப்பொழுதும் நேரடியாக இணைய வழி அத்துடன் அல்லது கையடக்கத் தொலைபேசி உடாக வங்கிச் சேவையை அணுகுங்கள்
எமது இணைய வழி அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக வங்கிச்சேவை வசதிகளுக்கு உங்களை வழிநடத்தும் என்று கூறும் எந்த இணைப்புகளையும் ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். உங்கள் மொபைல் App, Google Play அல்லது Apple App Store இலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதையும், வேறு எங்கிருந்தும் பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பதிவிறக்கம் செய்வதற்கு முன் வெளியீட்டாளரின் பெயரைச் சரிபார்த்து, நீங்கள் நிறுவும் App உண்மையாகவே “DFCC BANK PLC” வங்கியினுடையதா என்பதை உறுதிப்படுத்தவும்.
இணைய வழி வங்கிச் சேவையை அணுகும்போது, முடியுமாயின் ஏதேனும் இணைப்புகளை கிளிக் செய்து அல்லது ஏதேனும் மறைநிலையான அல்லது தனிப்பட்ட சாளரத்தைப் (window) பயன்படுத்துதைக் குறிக்கோளாகக் கொள்ளாது நீங்களாகவே URL இல் பதிவு செய்வதை அல்லது www.dfcc.lk யில் உத்தியோகபூர்வ DFCC வங்கி இணையத்தளத்திற்குச் செல்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலும், பகிரங்க அல்லது திறந்த WiFi வலையமைப்பைப் பயன்படுத்தி இணைய வழி வங்கிச் சேவையை அணுகுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். URL இன் முதல் பகுதி (Domain Name) அது இருக்கவேண்டியவாறு http://online.dfcc.lk/ அல்லது https://dfcciconnect.lk/ என சரியாக இருக்கின்றதா என்பதை உள்நுழைவதற்கு (login) முன்னர் எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சந்தேகத்துக்கிடமான அல்லது அதிகாரம் அளிக்கப்படாத கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி உடனடியாக முறைப்பாடு செய்யவும்.
ஏதேனும் சந்தேகத்துக்கிடமான அல்லது அதிகாரம் அளிக்கப்படாத கொடுக்கல் வாங்கல்களை எப்போதாவது கண்டுபிடித்தீர்களாயின், அவற்றைப் பற்றி உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள். எந்தளவு விரைவாக முறைப்பாடு செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு குற்றவியல் செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதற்கும் ஏதேனும் திருடப்பட்ட நிதிகளை கைப்பற்றிக் கொள்வதற்குமான வாய்ப்புகள் அதிகமாகும். ஏதேனும் அத்தகைய செயற்பாடுகளைப் பற்றி முறைப்பாடு செய்வதற்கு எமது வாரம் முழுவதும் 24 மணித்தியாலமும் இயங்கும் வாடிக்கையாளர் மைய தொலைபேசி இலக்கம் 011 2350000 இற்கு அழைப்பு விடுக்கவும்.
விவரத் திருட்டு (Phishing) பற்றிய ஒரு குறிப்பு
கூருணர்வு மிக்க தகவல்களை உள்ளீடு செய்வதற்கு அல்லது கையளிக்கச் செய்வதற்கு தந்திரமாக உங்களை ஏமாற்றி உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் அத்துடன் அல்லது உள்நுழைவதற்கான அறிமுக ஆவணங்களைத் திருடுவதற்காக வன்மமான ஒரு மூன்றாம் ஆம் தரப்பு DFCC வங்கி என, அல்லது ஏதேனும் வேறு சட்டமுறையான நிறுவனம் என தம்மைக் காட்டிக்கொள்ளும்போது அதனை விவரத்திருட்டுத் தாக்குதல்கள் என அழைக்கின்றோம்.
இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் உங்களை மின்னஞ்சல், தொலைபேசி, WhatsApp> SMS, இணைய இணைப்புகள், இணைய விளம்பரங்கள் மற்றும் நேரடியாகக் கூட தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம். எப்போதும் நீங்கள் எதை கிளிக் செய்கின்றீர்கள் என்பதையிட்டு விழிப்பாக இருப்பதுடன் நிச்சயமாக இது உண்மையான DFCC வங்கி தான் என உறுதிப்படுத்தாதவிடத்து, எவரேனும் இணைய வழியான இடைமுகத்திடம் ஏதேனும் தகவல்களைப் பதிவுசெய்ய அல்லது வழங்க வேண்டாம்.
எவ்வகையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும் அல்லது ஏதேனும் தனிப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் நாம் ஒருபோதும் உங்களுடன் தொடர்பு கொள்ளமாட்டோம். உங்களுக்கு அத்தகைய ஆதரவு தேவையாயின், ஒரு உத்தியோகபூர்வ வழியில் எம்மைத் தொடர்புகொள்ள முடியும். நீங்கள் எம்முடன் தொடர்புகொள்ளும்போது மாத்திரமே உங்கள் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக நாம் சில தனிப்பட்ட விபரங்களை உங்களிடம் கோரலாம். எனினும், நாம் உங்கள் உள்நுழையும் அறிமுக ஆவணங்கள், CVV இலக்கங்கள் (உங்கள் டெபிட் / கடன் அட்டையின் பின்புறத்தில் காணப்படும் 3 எண்களைக் கொண்ட இலக்கம்) அல்லது உங்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் வங்கிச் சேவை வசதிகளைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய ஏதேனும் வேறு தகவல்களை நாம் ஒருபோதும் கோரமாட்டோம்.
இணைய வழியில் பாதுகாப்பாக இருத்தல் அத்துடன் எமது டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வை நாமே மேற்கொள்ள வேண்டும். எனவே, எப்போதும் விழிப்பாக இருங்கள், கிளிக் செய்வதற்கு முன்னர் சிந்தியுங்கள் எவரேனும் 3ஆம் தரப்பினருக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கையளிப்பதற்கு முன்னர் இரண்டு தடவைகள்
சிந்தியுங்கள்.