DFCC எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்கள்

DFCC எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்கள்
ஏனெனில் உங்களுடைய காலம் பொன்னானது

ரமைக்கப்பட்டுள்ள எமது நடைமுறை மூலமாக, விண்ணப்பத்தைச் சேகரிப்பது முதல் இறுதியாக பணம் வழங்கப்படுவது வரை, வெறும் 10 நாட்களுக்குள் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்பட்டு, பணம் வழங்கப்படுகின்றது. முடிவற்ற ஆவண நடைமுறைகள், தாமதங்கள் அல்லது கிடைக்குமா என்ற ஐயம் இனிமேலும் தேவையில்லை. வீட்டை சொந்தமாக்கிக் கொள்வதற்கு சீரான, வெளிப்படையான மற்றும் மின்னல் வேக நடைமுறை.

தேவையான தகமை

தேவையான தகமை

  • குறைந்தபட்ச மாதாந்த மொத்த வருமானம் ரூபா 50,000 (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள் + மாறுபடும் மேலதிகக் கொடுப்பனவுகளின் 50%)

Purposes

  • உங்களுக்குச் சொந்தமாக வீடொன்றை வாங்குவதற்கு, கட்டுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு.
  • உங்களுக்குச் சொந்தமாக காணியொன்றை வாங்குவதற்கு.
  • அடுக்குமனை ஆதனமொன்றை வாங்குவதற்கு.
  • தற்போதுள்ள வீட்டைப் பெருப்பிப்பதற்கு அல்லது எஞ்சிய வேலைகளை பூர்த்தி செய்வதற்கு.
  • வீட்டை மேம்படுத்துவதற்கு. (சூரிய மின்னுற்பத்தித் தொகுதிகளை பொருத்துதல் போன்றவை)

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • விண்ணப்பப் படிவம்
  • விற்பனை விலையைக் குறிப்பிட்டு, விற்பனை செய்பவரிடமிருந்து ஒப்புதல் (காணி அல்லது குடியிருப்பு ஆதனத்தின் கொள்வனவுக்கு மாத்திரம்).

தொழில் புரிபவராயின்,

  • பதவி, சம்பளம், இதர கொடுப்பனவுகள், சேவைக் காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதிப்படுத்தல் கடிதம்.
  • வாடிக்கையாளரின் சம்பளத்தை DFCC வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பதாக ஊழியரின் ஒப்புதல்.
  • கடந்த ஆறு மாதங்களுக்கான சம்பளச் சிட்டைகள்.
  • கடந்த ஆறு மாதங்களுக்கான சம்பளச் சிட்டைகள்.
    • கடந்த 6 மாதங்களுக்காக வங்கிக் கணக்கு கூற்றுக்கள்.
    • பொருந்தும் பட்சத்தில்,
      • வியாபார பதிவுச் சான்றிதழ்
      • கடந்த 3 வருடங்களுக்கான வருமான வரி விபரங்கள்
      • கடந்த 3 வருடங்களுக்கான நிதி கூற்றுக்கள்.
  • சட்ட ஆவணங்கள்:
    • தாய் உறுதியின் பிரதிகள்
    • உள்ளூராட்சி அதிகார சபையின் அங்கீகாரம் கொண்ட, உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நில அளவைத் திட்டம்.
    • உள்ளூராட்சி அதிகார சபையின் அங்கீகாரம் கொண்ட, உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நில அளவைத் திட்டம்.
    • உள்ளூராட்சி அதிகார சபையின் சான்றிதழ்கள் (கடந்த ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்).
      • தெருப் பாதை/கட்டிடப் பாதை
      • கையளிக்கப்படாமைக்கான நற்சாட்சிப் பத்திரம்
      • உரித்துரிமைச் சான்றிதழ்
      • வரிப்பணம் செலுத்திய ரசீதுகள்/வரி மதிப்பீட்டு அறிவித்தல் படிவங்கள்
  • குடியிருப்பு ஆதனம் ஒன்றைக் கொள்வனவு செய்வது அல்லது வீடொன்றை நிர்மாணிப்பதாயின்:
    • அங்கீகரிக்கப்பட்ட நிர்மாணத் திட்டம் (அங்கீகாரம் தேவையற்றதாகும் பட்சத்தில், இது குறித்து உள்ளூராட்சி அதிகார சபையால் விநியோகிக்கப்பட்ட கடிதம்)
    • இணக்கச் சான்றிதழ் (COC) – குடியிருப்பு ஆதனத்தை கொள்வனவு செய்வதற்கு மாத்திரம்
  • இணக்கச் சான்றிதழ் (COC) – குடியிருப்பு ஆதனத்தை கொள்வனவு செய்வதற்கு மாத்திரம்
  • காப்புறுதி:
    • வங்கிக்கு ஒதுக்கப்பட்ட, முழு கடன் தொகையையும் ஈடுகட்ட, குறைவடையும் கால உத்தரவாத காப்பீட்டுத் திட்டம் (Decreasing Term Assurance Policy – DTA)
    • வங்கிக்கு ஒதுக்கப்பட்டுப் பெறப்பட்ட, தீ, வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், மற்றும் மக்கள் கலவரம் (SRCC) மற்றும் அழிவுக் காப்பீட்டுத் திட்டம்

    நிபந்தனை: தேவைப்படும் பட்சத்தில் மேலதிக விபரங்களை/ஆவணங்களை வங்கி கோரக்கூடும்.

முக்கிய அம்சங்கள்

  • 10 நாட்களுக்குள் கடன் வழங்கப்படல் – விண்ணப்பத்தை சேகரித்து, பணம் வழங்கப்படுதல் வரை.
  • ஒரு நாளில் கடன் அங்கீகாரம்.
  • பிரத்தியேகமான சட்ட ஆலோசனை.
  • அடமானத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான, ஆதனத்துடன் தொடர்புபட்ட ஆவணங்கள் அனைத்தும் வாடிக்கையாளரின் சார்பாக திரட்டப்படல் – உள்ளூராட்சி அதிகார சபை ஆவணங்கள், காணிப் பதிவகத்திலிருந்து உறுதிகள் மற்றும் திட்டங்களின் பிரதிகள், கட்டணத்துடன் மூலச் சாரங்கள் (Extracts).
  • வாடிக்கையாளரை யைமாகக் கொண்ட புத்தாக்கத்துடனான அணுகுமுறை
  • எளிய ஆவண நடைமுறை

எவ்வாறு விண்ணப்பிப்பது

  • பின்வரும் பகுதியினூடாக தேவையான விசாரணைகளை பூர்த்தி செய்யுங்கள் -Inquire Now அல்லது or
  • அருகாமையிலுள்ள எமது கிளைக்கு வருகை தாருங்கள்-

பொதுவாக எழுப்பப்படுகின்ற வினாக்கள் (FAQs)

01. “எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்”என்றால் என்ன?

    வீட்டை வாங்கும் போது விரைவான வழியில் பணம் தேவைப்படுகின்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, விரைவுபடுத்தப்பட்ட செயல்முறை கொண்ட ஒரு வீட்டுக் கடன் திட்டமே எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன். 10 நாட்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதத்துடன், எளிதான, சிரமங்களற்ற விண்ணப்ப நடைமுறை மற்றும் விரைவுபடுத்தப்பட்ட அங்கீகாரச் செயற்பாட்டுச் சக்கரத்தைக் கொண்டுள்ளது.

02. கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

    பூரணப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், 10 பணி நாட்களுக்குள் பணம் வழங்கப்படும். (விண்ணப்பம் பெறப்பட்டு, பணம் வழங்கப்படுவதற்கு 10 நாட்கள் எடுக்கின்றன)

03. What are the benefits of the “Express Housing Loan”?

  • விரைவான தீர்வு: 10 நாட்களில் பணம் கிடைக்கும் உத்தரவாதம்.
  • சௌகரியம்: இலகுவான, சிரமங்களின்றி விண்ணப்ப நடைமுறை.
  • இலகுவாகப் பெற்றுக்கொள்ளல்: வீட்டை வாங்கும் போது விரைவாக பணம் தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
04. கடனுடன் தொடர்புபட்ட கட்டணங்கள் ஏதேனும் உள்ளனவா?

    ஆம், கடனுடன் இணைந்த பின்வரும் சேவைகளுக்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும்

  • தாய் உறுதியைத் தேடுதல் மற்றும் சட்டரீதியான பின்புல ஆய்வுகள்.
  • ஆதன விற்பனை ஒப்பந்தங்களின் வரைபு மற்றும் மீளாய்வு.
  • பரிவர்த்தனை முகாமைத்துவம் மற்றும் சட்ட வழிகாட்டல் ஆலோசனை.
  • அடமானத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான, ஆதனத்துடன் தொடர்புபட்ட ஆவணங்கள் அனைத்தும் வாடிக்கையாளரின் சார்பாக திரட்டுதல் – உள்ளூராட்சி அதிகார சபை ஆவணங்கள், காணிப் பதிவகத்திலிருந்து உறுதிகள் மற்றும் திட்டங்களின் பிரதிகள், கட்டணத்துடன் மூலச் சாரங்கள் (Extracts).
05. “எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடனுக்கு” தேவையான தகைமைகள் யாவை?

    குறைந்தபட்ச மாதாந்த மொத்த வருமானம் ரூபா 50,000 (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள் + மாறுபடும் மேலதிகக் கொடுப்பனவுகளின் 50%)

06. நான் ஏற்கனவே வீட்டுக் கடனொன்றைக் கொண்டிருந்தால் அல்லது ஏனைய நிதிக் கடப்பாடுகளைக் கொண்டிருந்தால், இந்த கடனுக்கு நான் விண்ணப்பிக்க முடியுமா?

    ஆம், உரிய கடன் சேவை காப்பு விகிதம் (Debt Service Coverage Ratio – DSCR) அடங்கலாக, பொருத்தமான தகைமையை நீங்கள் கொண்டிருந்தால் இதற்கு விண்ணபிக்க முடியும்.

07. “எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடனுக்கு” நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?

    எந்தவொரு DFCC வங்கிக் கிளைக்கும் வருகை தந்தோ, அல்லது உதவிகளுக்கு எமது விற்பனை அலுவலர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டோ அல்லது info@dfccbank.comஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

08. 10 நாட்களுக்குள் கடன் கிடைக்கப்பெறாவிட்டால் என்ன நேரும்?

    10 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்திற்கு அமைவாக உங்களுடைய விண்ணப்பம் நடைமுறைப்படுத்தப்படாது போனால், தாமதத்திற்கான காரணங்களை உங்களுக்கு அறிவிப்பதை வங்கி உறுதி செய்வதுடன், எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.

09. எந்த வகையான ஆதனத்தை வாங்குவதற்கும் இக்கடனை நான் உபயோகிக்க முடியுமா?

    அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் அல்லது காணி உள்ளிட்ட புதிய அல்லது ஏற்கனவே உள்ள குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதற்கு எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடனை பயன்படுத்தலாம். சொத்து வங்கியின் தேவைகள் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

10. இந்தக் கடன் சம்பளம் ஈட்டும் தனிநபர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் என இரு சாராருக்கும் கிடைக்குமா?

    இல்லை, தகமை அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், சம்பளம் ஈட்டும் நபர்களுக்கே எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன் தற்போது கிடைக்கிறது.

11. கடன் தொகை எவ்வாறு தீர்மானிக்கப்படும்?

    கடன் தொகை உங்கள் தகுதியின் அடிப்படையைப் பொறுத்தது. வருமானம், கடன் மதிப்பெண், சொத்து மதிப்பு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உங்கள் திறன் போன்ற காரணிகளின் அடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது.

12. எனது கடன் விண்ணப்பத்தின் நிலவரத்தை நான் எவ்வாறு கண்காணிப்பது?

    உங்கள் விண்ணப்பத்தின் நிலவரத்தை நீங்கள் கிளை அல்லது வாடிக்கையாளர் உறவு முகாமையாளரைத் தொடர்புகொள்வதன் மூலம் கண்காணித்து, அறிந்து கொள்ளலாம்.

13. எனது கடனை முன்கூட்டியே தீர்க்க முடியுமா? அதற்கு அபராத கட்டணங்கள் ஏதேனும் உள்ளதா?

    ஆம், நீங்கள் கடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொறுத்து முன்கூட்டியே தீர்ப்பதற்கான கட்டணங்களுக்கு அமைவாக, கடனை முன்கூட்டியே தீர்க்கலாம்.

14. நான் கடனைப் பெற தகுதியுடையவரா என்பதை அறிய ஏதேனும் முற்கூட்டிய தகமை சரிபார்ப்பு அல்லது முற்கூட்டிய அங்கீகார செயல்முறை உள்ளதா?

    ஆம், முற்கூட்டிய தகமை சரிபார்ப்பு அல்லது முற்கூட்டிய அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

15. அனைத்து DFCC வங்கி கிளைகளிலும் “எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன்” கிடைக்குமா?

    ஆம், எக்ஸ்பிரஸ் வீட்டுக் கடன் திட்டம் அனைத்து DFCC வங்கி கிளைகளிலும் கிடைக்கிறது. உங்கள் விண்ணப்ப நடைமுறையை ஆரம்பிக்க நீங்கள் எந்த கிளைக்கும் சென்று விண்ணப்பிக்கலாம்.