கடனட்டை மீது முதன்முறையாக விருப்பம் கொண்டுள்ளீர்களா? இதோ உங்களுக்கான 5 ஆலோசனைகள்!
October 7, 2019
கடனட்டை என்பது, நீங்கள் விரும்பும் வாழ்க்கைக்கான ஒரு டிக்கெட் ஆகும். உங்களது நாளாந்த வாழ்க்கைப் பாதீடு குறித்து கவலைகொள்ளாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தை அனுபவிக்க உதவும் ஒரு கருவியாகும். கடனட்டை மூலம், இந்த இடத்தில் இருந்தும் எதையும் கொள்வனவு செய்யக்கூடிய சுதந்திரம் உங்களுக்கு உண்டு. அதனால்தான், கடனட்டை பற்றி நீங்கள் முதல் முதலில் ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என்றால், அது தொடர்பான சில ஆலோசனைகளைப் பெறுவது, உதவியாக இருக்கும்.
கடனட்டை பற்றி முதல் முதலில் அறிய விரும்பும் உங்களுக்கு, இதோ ஐந்து சிறந்த ஆலோசனைகள்:
1.புத்திசாலித்தனமாக தெரிவு செய்யுங்கள் – அனைத்து கடனட்டைகளையும் ஒரேமாதிரியானவை அல்ல. அதனால், உங்களுக்குப் பொருத்தமான கடனட்டையை நீங்கள் தெரிவு செய்துகொள்ள வேண்டும். DFCC போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் கடனட்டைகள், உங்களுக்காக முன்மொழியப்படுகின்றன. பல்வேறுபட்ட தேவைகள் நிமித்தம், பல்வேறு DFCC விசா கடனட்டைகளை வங்கி வழங்குகின்றது. உங்களது நாளாந்த செலவீனங்களுக்காக, சிறப்புச் சலுகைகளை வழங்கும், உலகமெங்கும் பயணம் செய்வதற்கு என்ற உங்களது தேவைக்ககேற்ற கடனட்டையை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்றால், அதுபோன்ற கடனட்டை எம்மிடம் உண்டு. DFCC கடனட்டையில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிமாற்றல்களின் போதும், 1% மீள்பணம் பெற்றுக்கொள்ள முடியும். DFCC கடனட்டைகளை இங்கே ஒப்பிடுங்கள்.
2.பாதீடொன்றைப் பேணுங்கள் – நீங்கள் விரும்பிய வாழ்க்கைக்கான டிக்கெட்டாக கடனட்டையொன்று காணப்படும்போது, அதில் அதிகளவான செலவீனங்களை மேற்கொள்ளாமல், ஒரு கட்டுப்பாடான பாதீட்டை பேணுவது மிக முக்கியமானதாகும். கடனட்டை மூலம், உங்களது கொள்வனவு ஆற்றல் அதிகரிக்கும் என்றாலும், பல சந்தர்ப்பங்களில், வெறுமனே உங்களது கடனட்டையை, தேவைக்கு அதிகமாக பாவிப்பதற்கான தூண்டுதல் உண்டாகும். ஆனால் இதன் காரணமாக, தேவையற்ற கடனுக்குள் நீங்கள் மூழ்கிவிடுவீர்கள். உங்களது தேவைக்கேற்ற கடனட்டையை நீங்கள் பெற்றாலும், சரியான முறையில் மீள் செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள். DFCC கடனட்டைக்காக விண்ணப்பிக்கும்போது, நீங்கள் எவ்வாறு செலவு செய்கின்றீர்கள் என்பதற்கான அட்டவணை மற்றும் வரைபடங்களுடனான அறிக்கைகளை, மாதாந்தம் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
3.குறைந்தபட்ச கட்டணத்தை விட அதிகளவில் செலுத்துங்கள் – குறைந்தபட்சக் கட்டணத்தை விட, அதிகளவில் செலுத்துவது, உங்களது கடனட்டையை சரியாக பேணுவதற்கான சிறந்தமுறையாகும். எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம், முழுத்தொகையையும் செலுத்த முற்படுங்கள். DFCCஇன் மீள்செலுத்துகை கணிப்பானை இங்கே பார்க்கலாம்.
4.விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாக வாசியுங்கள் – கடனட்டையொன்றைப் பெற்றுக்கொள்ள முனையும்போது, அது தொடர்பிலான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாக வாசித்துப் பாருங்கள். இதன்மூலம், கடனட்டையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் என்பது குறித்தும் உங்களிடமிருந்து வங்கி எதிர்பார்ப்பைதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். அதுமாத்திரமல்லாது, மாதாந்தம் வரும் கடனட்டை அறிக்கைகளில் எந்தவொரு முரண்பாடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிக அவசியமாகும்.
5.கடனட்டையைப் பாதுகாக்கவும் – உங்களது பணம் சிதறிக்கிடப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் அல்லவா?. உங்களது கடனட்டையும் பணத்துக்கு ஈடானதே. எனவே, கடனட்டையை திறந்தவெளியொன்றில் போட்டு வைப்பதைத் தவிருங்கள். உங்களது கடனட்டைத் தகவல்களை, குறிப்பாக. CVV இலக்கத்தை, யாருடனும் பரிமாறிக்கொள்ள வேண்டாம். DFCC வங்கி அல்லது வேறு எந்தவொரு நம்பகரத்தன்மை வாய்ந்த நிதி நிறுவனமும், உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, உங்களது கடனட்டைத் தகவல்களைக் கோராது. கடனட்டையைப் பாதுகாப்பாக வைப்பது எவ்வாறு என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ள, இங்கே பார்க்கவும். ( கடனட்டையை எவ்வாறு பாதுகாப்பது என்பதுடன் இணைக்கவும்)
பிரத்தியேக சலுகைகள், கழிவுகளை உங்களுக்கு வழங்குவதற்காக, கடனட்டை பல கதவுகளை உங்களுக்காக திறந்து வைக்கின்றது. இது, நீங்கள் விரும்பிய வாழ்க்கைக்குள் உங்களைப் பிரவேசிக்கவும் குறைந்தபட்ச செலவீனங்களை மேற்கொள்ளவும் உதவுகின்றது. எவ்வாறாயினும், கடனட்டையொன்றை பயன்படுத்தும்போது, அதற்கான பொறுப்புகளை சரியான செய்வதன் மூலம், சிறந்த முறையில் கடனட்டைகளைப் பயன்படுத்த முடியும். DFCC கடனட்டை மூலம் வழங்கப்படும் சலுகைககளை இங்கே காணலாம்.