DFCC Pinnacle

DFCC Pinnacle

வெற்றியின் புதிய சிகரங்களை எட்டுவதற்கான தங்குதடையற்ற நிதியியல் அனுபவமான DFCC Pinnacle இற்கு உங்களை வரவேற்கிறோம். DFCC Pinnacle என்பது முற்றிலும் புதியதொரு பிரத்தியேக உயர் வகுப்பு வங்கி அனுபவம் என்பதுடன், பிரத்தியேகமயமாக்கப்பட்ட சேவை மற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தொகுப்பைக் கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், வெற்றியின் புதிய சிகரங்களை எட்டவும் உங்களுக்கு உதவும்.

வணக்கம், எனது பெயர் ஷெரா ஹசன்

Pinnacle சேவைகளுக்கான தலைமை அதிகாரி

DFCC வங்கியில் ஒரு Pinnacle வாடிக்கையாளராக உங்களை வரவேற்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். மேலும், Pinnacle வங்கிச்சேவை வசதிகள், வெகுமதிகள் மற்றும் உயர் மட்ட சேவை அனுபவங்களைப் பெற்று மகிழுங்கள். Pinnacle வங்கிச்சேவை என்பது தலைசிறந்த வங்கிச்சேவை தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுமுறை முகாமைத்துவத்துடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பலதரப்பட்ட தனிப்பட்ட வங்கிச்சேவை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு பிரத்தியேகமான அங்கத்துவமாகும்.

வணிக வங்கிச்சேவை நிபுணத்துவத்தைக் கொண்ட எமது பல்துறை தொழில் நிபுணத்துவ அணி மற்றும் எங்கள் நிதியியல் சேவைக் குழுமத்தின் கூட்டுப் பலங்கள் உள்ளூர் மற்றும் கரைகடந்த வாடிக்கையாளர்களுக்கு உதவ மூலதன சந்தைகள், நிதி வள முகாமைத்துவம், காப்புறுதி மற்றும் ஆதனத் திட்டமிடல் மற்றும் சட்ட சேவைகள் ஆகியவற்றில் புத்தாக்கமான மற்றும் தங்குதடையற்ற வங்கிச்சேவை மற்றும் பிற நிதியியல் தீர்வுகளை வழங்க எங்களுக்கு இடமளிக்கின்றன.

உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு பிரத்தியேகமயமாக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்க உங்கள் துறையை நாங்கள் விரிவாக மதிப்பாய்வு செய்கிறோம். எங்களுடனான உங்கள் பயணம் தொடர்ந்து பலனளிக்கும் மற்றும் புகழ்பெற்றதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். நாடு முழுவதும் 139 கிளைகளைக் கொண்ட வலையமைப்பை நாம் கொண்டிருப்பதால், பிரத்தியேகமான Pinnacle சேவை அணியால் சுமுகமாகவும் சௌகரியத்துடனும் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதி உங்களுக்கு கிடைக்கின்றது.

Pinnacle சேவை மையத்தின் வாடிக்கையாளர் உறவுமுறை முகாமையாளர்கள்

Click to see Pinnacle Centre RMs

DFCC Pinnacle சேவையின் நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்

DFCC Pinnacle சேவையின் நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்

எங்கள் பிரத்தியேகமான வங்கிச்சேவை மையத்தில் உங்கள் வங்கிச்சேவை தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பிரத்தியேக உறவுமுறை முகாமையாளருடன் பிரத்தியேகமயமாக்கப்பட்ட சேவையை வழங்குவதே DFCC Pinnacle இன் நோக்கமாகும். Pinnacle வாடிக்கையாளராக உங்களுக்குக் கிடைக்கும் பிரத்தியேக அம்சங்கள் மற்றும் நன்மைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நீங்கள் விரும்புகின்றவாறு பூச்சிய தொகையுடன் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பியுங்கள்

நடைமுறைக் கணக்கு

  • உங்களது பெயர் பொறிக்கப்பட்ட காசோலைப் புத்தகங்களை வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • ஆரம்ப வைப்புத் தொகை தேவைப்பாட்டுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்ச மீதிக் கட்டணத் தேவைப்பாட்டுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • கணக்கில் மேல்மிச்சமாக உள்ள தொகையை தன்னியக்க முறையில் வைப்புக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

* பூச்சிய மீதியுடன் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு கணக்கிற்கும் அது ஆரம்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் நிதி வரவு வைக்கப்படல் வேண்டும்.

 

டெபிட் அட்டை

  • உங்களது பெயர் பொறிக்கப்பட்ட டெபிட் அட்டையை வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • விற்பனை மைய கொடுப்பனவுகளின் போது ரூபா. 200,000/- தொகையுடனான அதிகரித்த உச்ச வரம்பு.
  • பணத்தை மீளப்பெறுவதற்காக தினமொன்றில் ரூபா. 200,000/- தொகையுடனான அதிகரித்த உச்ச வரம்பு.
இலங்கையிலுள்ள எந்தவொரு DFCC வங்கி அல்லது Lanka Pay வலையமைப்பு ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகவும் பணத்தை கட்டணங்கள் எதுவுமின்றி மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

கடனட்டை

  • Pinnacle Infinite கடனட்டையை வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • எரிபொருள் நிரப்பல், வெளிநாட்டு செலவு, உணவகங்கள், சேவை வழங்குநருக்கு நேரடியாக செலுத்தப்பட்ட பாவனைக் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள் ஆகியவற்றுக்கு 3% பணமீளளிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். (கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுவதற்கு அந்தந்த பரிவர்த்தனைகள் அந்தந்த வணிக வகைகளின் கீழ் கைப்பற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க)
  • ரூ. 25,000 ற்கும் ரூ. 1,000,000 ற்கும் இடைப்பட்ட எந்தவொரு கொள்வனவிற்கும் 6 மாதங்கள் வரையிலான 0% இலகுக் கொடுப்பனவுத் திட்டங்கள். (எரிபொருள், பண முற்பணம், கெசினோ மற்றும் சூதாட்ட பரிவர்த்தனைகளுக்கு இலகு கொடுப்பனவு திட்டம் செல்லுபடியாகாது). கையாளுகைக் கட்டணம் அறவிடப்படும் மற்றும் தயவுசெய்து பொது கடன் அட்டைக் கட்டணங்களைப் பார்க்கவும். கையாளுகைக் கட்டணம் அறவிடப்படும் மற்றும் தயவுசெய்து பொது கடன் அட்டைக் கட்டணங்களைப் பார்க்கவும்..
  • ஒவ்வொரு முறை செலவு செய்யும் போதும் 1% பணமீளளிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • உலகளாவில் எந்த விமான நிலையத்திலும் ஆண்டுக்கு இரண்டு முறை ‘Lounge Key’ மூலம் இலவச உள்நுழைவுகள்.
  • விசா உதவி சேவை – மேலும் விவரங்களுக்கு இங்கே (Click here) கிளிக் செய்யவும்.
  • DFCC Pinnacle Infinite கடனட்டையைப் பயன்படுத்தி இரு வழி விமானப் பிரயாண டிக்கெட்டை கொள்வனவு செய்யும் இலவச பிரயாண காப்புறுதி.
  • AIA காப்புறுதி – 01 ஆம் ஆண்டில் வட்டியின்றிய தவணைக் கொடுப்பனவுத் திட்டம் மற்றும் வருடாந்த அடிப்படையிலான கொடுப்பனவுகளுக்கு Health Protector & Smart Builder திட்டங்களுக்கு 5% பணமீளளிப்பு.

டிஜிட்டல் வங்கிச்சேவை வசதிகள் இலவசம்

  • உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • மாதாந்த அடிப்படையில் இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
    இலத்திரனியல் வங்கிச்சேவை வசதிகளைப் பெற்றுக்கொள்ளல்.
  • DFCC Virtual Wallet சேவையைப் பெற்றுக்கொள்ளும் வசதி.
  • Virtual Wallet ஐப் பயன்படுத்தி மேலதிக கட்டணங்கள் இல்லாமல் பாவனைக் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்துங்கள்.

கூடுதல் நன்மைகள்

  • Pinnacle வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக 24 மணி நேர அழைப்பு மையம் (011 235 0011).
  • சந்திப்பு அறைகளைப் பயன்படுத்தும் வசதிகள்.
  • நிதிச் சொத்து வர்த்தக கடன் வசதி.

 

தேவையான தகைமை

DFCC Pinnacle வழங்கும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை அனுபவிக்க நீங்கள் கீழேயுள்ள எந்தவொரு நிபந்தனையையும் பூர்த்தி செய்ய வேண்டும்,

  • குறைந்தபட்ச மாதாந்த தேறிய ஊதியமாக ரூபா. 450,000/- தொகை DFCC கணக்கொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • ரூபா. 10,000,000/- இலங்கை ரூபா அதற்கு அதற்கு சமமான வெளிநாட்டு நாணயத் தொகை வைப்புக்கள்.
  • ரூபா. 25,000,000/- தொகைக்கு மேற்பட்ட அடமான சொத்துக்கள்.
  • குடும்ப கூட்டுக் கணக்கு – கணவன் அல்லது மனைவியின் பெயரில் ரூபா. 5,000,000/- தொகைக்கு மேற்பட்ட வைப்புக்கள்.

 

எவ்வாறு விண்ணப்பிப்பது

இல 87, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 07 இல் உள்ள பிரத்தியேக DFCC Pinnacle வங்கிச்சேவை மையத்திற்கு வருகை தாருங்கள் அல்லது மேலதிக விபரங்களுக்கு 0112 350 011 என்ற இலக்கத்தின் மூலமாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

DFCC Pinnacle Walkthrough