DFCC சஹாய(நிவாரணம்) கடன் திட்டம்(MSME)

DFCC சஹாய(நிவாரணம்)
கடன் திட்டம்(MSME)

DFCC சஹாய(நிவாரணம்) கடன் திட்டம் நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு கிராம மட்டத்தில் புதிய வியாபாரத்தினை ஆரம்பிக்க இருப்பவர்கள் மற்றும் தற்போதைய வியாபரத்தினை விரிவாக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

பொதுவான தகவல்கள்

பொதுவான தகவல்கள்

கடன் தொகை- ரூ 300, 000 தொடக்கம் 4, 000, 000/- வரை
ரூ.300 000 இற்கு குறைவான கடன்கள் ஒவ்வொரு படியாக கருத்தில் கொள்ளப்படும்.
கடன் காலம் – அதிகபட்சமாக 5 ஆண்டுகள்

யாருக்கு

  • தொலைநோக்குள்ள நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாளர்களுக்கு கிராம மட்டத்தில் புதிய வியாபாரத்தினை ஆரம்பிக்க இருப்பவர்கள் அல்லது தற்போதைய வியாபரத்தினை விரிவாக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு .
  • சூழலுக்கு நட்புறவான பொருளாதார நடவடிக்கைகள், IT தொடர்பான உற்பத்திகள் கிராமத்தினை அடிப்படையாக கொண்ட புதிய கருத்துக்களை கொண்ட தொழில்முயற்சியாளர்களுக்கு.
  • இளம் வயதினர் பெண்கள் இளம் பட்டதாரிகள் மாற்றுத் திறனாளிகள்

செயற்திட்ட தெரிவுக்கான தகுதிகள்

  • வியாபார கருத்தக்களில் புதுமை
  • கடன் விண்ணப்பதாரியின் நிறுவன ரீதியான மற்றும் தொழில்நுட்ப திறன்
  • முன்மொழியப்பட்ட பொருளுக்கான சந்தை கேள்வி 
  • சந்தைப்படுத்தல் மற்றும் பொதியிடல் உத்திகள்
  • வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள்
  • தொழில்நுட்பத்தின் பொருத்தமான தன்மை
  • செயற்திட்டத்தின் தொழில்நுட்பம் மற்றும் நிதி சாத்தியங்கள்
  • சுற்றுச்சூழல் பாதிப்பு
  • வியாபார திட்டத்தின் வலிமை
  • விவசாயம் தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் வருமானம் ஈட்டக்கூடிய சகல வியாபாரங்களும் தகுதியானவை.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள்/வியாபாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்டும்.

  • விவசாயம்- பழங்கள் மற்றும் மரக்கறி நடுகை/செயற்பாடுகள் செடி வளர் பண்ணை அபிவிருத்தி /கரிம விவசாயம் உரம் இடல் செயல்பாடு /பண்ணை  பால் மற்றும் கோழி பண்ணை பொருட்கள்/விவசாய பொருட்கள் / அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம்.
  • தொழிற்துறை- வெல்டிங்/ஆடைகள் /கொங்கிறீட் வேலை நடைபாதை மற்றும் இன்டர் லொக்கிங் /தோல் தயாரிப்புக்கள் /பெயின்டிங் கட்டுமான வேலை மற்றும் தச்சு /பிளாஸ்டிக் மற்றும் றப்பர் செயற்பாடுகள் /கட்டமைப்பு இரும்பு/மாணிக்கம் வெட்டுதல் மற்றும் மெருகூட்டல்
  • சேவைகள்- விவசாய பொருட்கள் சேகரிப்பு மையங்கள்/ சுற்றுலா சேவைகள் ரெஸ்டோரன்ட்ஸ் பொழுதுபோக்குகள் /தோட்டம் அமைத்தல் மற்றும் அழகுக்கலை முன்பள்ளி மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலையங்கள் / IT  பிரின்டிங் இணையத்தளம் மற்றும் கையடக்க தொலைபேசி மற்றும் கம்பியூட்டர் பழுதுபார்த்தல் /குளிர்சாதனப்பெட்டி மற்றும் A/C மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் பார்த்தல் /கணணி மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு/இலக்றிகல் மற்றும் இலக்ரோனிக் பழுதுபார்த்தல்.

கடன்களை வெற்றிகரமாக்கல்

நடுத்தரமான வட்டி வீத அடிப்படையில் வியாபாரத்தின் வெற்றியினை பொறுத்து உங்களுக்கு மேலதிக கடன்களை பெற முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்