
Our Sustainability
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
கல்வி
சிறுவர்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் கல்வியறிவு ஊட்டுதல் தேசம்முழுவதற்கும் நிலையான,ஆக்கபூர்வமான பயனை தரும் என்று DFCC வங்கி திடமாக நம்புகிறது. எனவே அடுத்த சந்ததி தலைவர்களுக்கும் செல்வாக்கானவர்களுக்கும் வேண்டியதை வழங்கி நாட்டினது கல்வியின் தரத்தை உயர்த்துவதில் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
“Samata English” (அனைவருக்கும் ஆங்கிலம்) கல்வித் திட்டம்
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கம்பஹா, களுத்துறை பிரதேசங்களில் முன்னோடியாக “Samata English”கல்வித் திட்டத்தை ஆரம்பித்த DFCCவங்கிஅதிலிருந்து படிப்படியாக முன்னேறி விரிவடைந்து வரும் இத்திட்டம் 16-22 வயதிற்கிடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில் ஆங்கில ஆற்றலை மேம்படுத்தி அவர்கள் நம்பிக்கையுடன் தொழிலணியில் பிரவேசிப்பதற்கு அவர்களுக்கு தகுதியூட்டும் நோக்கத்தை கொண்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் காலி,கண்டி,குருநாகல் பிரதேசங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.Gateway Language Centreஇன் பங்குடைமையுடன் 96 மாணவர்கள் ஆரம்ப மதிப்பீட்டினை பூர்த்தி செய்த பின்னர் இக்கற்கைநெறியில் இணைந்து கொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.3 மாதகால கற்கைநெறியையும் இறுதிப் பரீட்சை ஒன்றையும் பூர்த்தி செய்த மேற்படி 96 மாணவர்களில் 87 பேர் முதல் வகுப்பில் சித்தி அடைந்தனர். இந்த சாதனை, இந்த மாணவர்களின் பேச்சு ஆங்கில திறனை விருத்தி செய்வதாற்கு எவ்வளவு தூரம் உதவியுள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. இறுதி மதிப்பீட்டை Gateway மேற்கொண்டது. கொழும்பு மொழித் திறன் மற்றும் நாடகக் கலை கல்வியகத்தினாலும் மாணவர்கள் சான்றிதழ்படுத்தப்பட்டார்கள்.
மேலும் “Samata English” கல்வித் திட்டத்தின் இரண்டாவது கட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்டயப்பட்ட பின்னர் பிராந்தியங்களில் அதிஉயர் ஆறு சாதனையாளர்களுக்கு வங்கியில் உள்ளக பயிற்சியாளர்களாக இணைந்து கொண்டு வேலை அனுபவத்தையும் திறனையும் விருத்தி செய்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.