வரிக் கொடுப்பனவுகளை முன்னெடுப்பதற்கான பொதுவான மின்னணு நிதி பரிமாற்ற (CEFT) பரிவர்த்தனை நடைமுறை – DFCC Bank PLC
digital channel

வரிக் கொடுப்பனவுகளை
முன்னெடுப்பதற்கான
பொதுவான மின்னணு நிதி
பரிமாற்ற (CEFT) பரிவர்த்தனை நடைமுறை

வரிக் கொடுப்பனவுகளை முன்னெடுப்பதற்கான பொதுவான மின்னணு நிதி பரிமாற்ற (CEFT) பரிவர்த்தனை நடைமுறை

நாட்டில் நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக வரி செலுத்துனர்கள் தங்களுடைய வரிக் கொடுப்பனவுகளை இலங்கை வங்கியின் தப்ரோபேன் கிளையில் பேணப்படுகின்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கணக்கிற்கு CEFT மூலமாக மேற்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இணைய வங்கிச்சேவை மற்றும் DFCC iConnect சேவை வசதிகளைக் கொண்டுள்ள DFCC வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றி CEFT பரிவர்த்தனை மூலமாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான வரிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.



DFCC இணைய வங்கிச்சேவை வசதியைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள்

  • இணைய வங்கிச்சேவை மூலமாக வழங்கப்படுகின்ற பாதுகாப்பான அஞ்சல் வசதியை உபயோகித்து தேவையான அறிவுறுத்தல்களை வங்கிக்கு அனுப்பி வைக்க முடியும்

  • வாடிக்கையாளர் அஞ்சலில் பின்வரும் தகவல் விபரங்களை கட்டாயமாக குறிப்பிடல் வேண்டும்,
    o வரி செலுத்துனர் அடையாள இலக்கம் (TIN Number)
    o வரியின் வகைக் குறியீடு (Tax type code)
    o வரித் தொகை (Tax Amount)

  • தினமொன்றில் பி.ப 5.00 மணி வரை கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களும் அதே தினத்திலேயேநடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பின்னர் கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களும் அதற்கு அடுத்த பணித் தினத்தில் மு.ப 9.00 மணிக்கு முன்பதாக நடைமுறைப்படுத்தப்படும்.


DFCC iConnet நிதி முகாமைத்துவ வசதியைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள்

  • பின்வரும்தகவல்விபரங்களைகட்டாயமாககுறிப்பிட்டு iconnectsupport@dfccbank.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வாடிக்கையாளர் மின்னஞ்சலை அனுப்பி வைத்தல் வேண்டும்
    o வரி செலுத்துனர் அடையாள இலக்கம் (TIN Number)
    o வரியின் வகைக் குறியீடு (Tax type code)
    o வரித் தொகை (Tax Amount)

  • தினமொன்றில் பி.ப 5.00 மணி வரை கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களும் அதே தினத்திலேயே நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பின்னர் கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களும் அதற்கு அடுத்த பணித் தினத்தில் மு.ப 9.00 மணிக்கு முன்பதாக நடைமுறைப்படுத்தப்படும்.


கிளைகள் மூலமாக கொடுப்பனவை மேற்கொள்வதற்கான விண்ணப்பம்

  • மேற்குறிப்பிட்ட வசதிகள் எதனையும் கொண்டிராத வாடிக்கையாளர்கள் தமக்கு அருகாமையிலுள்ள DFCC கிளையில் பின்வரும் தகவல் விபரங்களை எழுத்து மூலமாக சமர்ப்பித்தல் வேண்டும்
    o வரி செலுத்துனர் அடையாள இலக்கம் (TIN Number)
    o வரியின் வகைக் குறியீடு (Tax type code)
    o வரித் தொகை (Tax Amount)

  • தினமொன்றில் பி.ப 5.00 மணி வரை கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களும் அதே தினத்திலேயே நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பின்னர் கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களும் அதற்கு அடுத்த பணித் தினத்தில் மு.ப 9.00 மணிக்கு முன்பதாக நடைமுறைப்படுத்தப்படும்.


மேலதிக விபரங்களுக்கு 011 2350000 மூலமாக எமது 24 மணி நேர அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Skip to content
page-default-temp.php