DFCC Aloka கணக்கு வைத்திருப்பவர்களுக்கு DOC 990க்கான பிரத்தியேக இலவச அணுகலை DFCC வங்கி வழங்குகிறது.
April 18, 2023
பெண்களுக்கான டிஜிட்டல் சுகாதார தீர்வுகளுக்கான அணுகலை வழங்கும் முயற்சியில், DFCC வங்கி பெண்களுக்காக பிரத்தியேகமாக வழங்கும் வங்கித் திட்டமான DFCC வங்கி Aloka, Dialog Axiata PLC நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் சுகாதார தீர்வு சேவை வழங்குனரான Doc990 உடன் பிரத்தியேக கூட்டாண்மையை நிறுவியுள்ளது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், DFCC Aloka சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் Doc990 இன் சேவைகளுக்கான இலவச அணுகலை பெற்றுக்கொள்வதோடு, தேவைப்படும் வேளைகளில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் அணுக முடியும். இந்த வசதி DFCC Aloka கணக்கினை புதிதாக ஆரம்பிப்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமல் பெரேரா, “DOC 990 உடன் இந்த பிரத்தியேக கூட்டாண்மைக்குள் பிரவேசிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். Aloka திட்டம் மூலம், நாம் பெண்களுக்கு வெறுமனே நிதிச் சேவைகளை மட்டும் வழங்கவில்லை. தொற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள், அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றுடன், சுகாதாரப் பாதுகாப்புக்கான தேவை ஆகியவற்றின் மத்தியில், Aloka சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் அவசரகால மருத்துவ உதவியை விரைவாகப் பெறலாம். அத்தோடு மருத்துவமனைக்கு செல்லாமல் பாரதூரமற்ற நோய்களை மேலும் திறம்பட கவனிக்கலாம். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல பாத்திரங்களை வகிப்பதாலும், அவர்களது குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோருக்கு பராமரிப்பு வழங்குவதாலும், இந்த திட்டம் ஒரு சிறந்த உதவிகரமாக இருக்கும். மேலும், அவர்கள் எங்கிருந்தாலும் உயர்தர மருத்துவ உதவியை அணுகுவதன் மூலம் ஆபத்தை குறைக்கவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்த திட்டம் அவர்களுக்கு உதவுகிறது.”
Digital Health Private Limited இனால் இயக்கப்படும் Doc99 ஆனது, சந்தாதாரர்களுக்கு அவர்களது கையடக்கத் தொலைபேசியின் மூலமாகவே மருத்துவ சேவைகளை வழங்கும் இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் சுகாதார தீர்வு சேவைகள் வழங்குனராகும். 2016 இல் தொடங்கப்பட்ட Doc990 ஆனது Dialog Axiata PLC இன் துணை நிறுவனமாகும். www.doc.lk வழியாக, அல்லது 990 ஐ டயல் செய்வதன் மூலம், அல்லது Android மற்றும் iOS இல் கிடைக்கும் Doc990 செயலி வழியாகவும், 140க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் உள்ள 5000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் Doc990 ஆனது பயனர்களை இணைக்கிறது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைகள் உட்பட பலவிதமான மருத்துவ சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பயனர்களை தகுதியான மருத்துவர்கள், தரமான மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் இத்தளம் இணைக்கிறது.
இந்த முயற்சிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி Dialog Axiata PLC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க மேலும் தெரிவிக்கையில், “புதுமையான மற்றும் அணுகக்கூடிய சுகாதார தீர்வுகளின் தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில், Doc990 ஆனது ஆண்டு முழுவதும் பெண்களுக்கு தேவையான சுகாதார உதவிகளுக்கான இலகுவான டிஜிட்டல் அணுகலை வழங்குவதற்கு DFCC Aloka வுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Doc990 ஆனது பெண்களுக்கு முற்போக்கான டிஜிட்டல் சுகாதார தொழிநுட்பத்தை எளிதாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.”
இந்த முயற்சியானது, தனது பெண் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் செயல்படும் அதேவேளை, இலங்கை வாழ் பெண்களின் அபிலாஷைகளுடன் இணைவதற்கான DFCC Aloka வின் அர்ப்பணிப்பின் இன்னுமொரு படி ஆகும்.
இடமிருந்து வலம் – ஆன் சில்வா- சட்ட அதிகாரி- DFCC வங்கி PLC, ருவனி வீரசிங்க- சிரேஷ்ட உறவுகள் முகாமையாளர் – Retail Banking மற்றும் SME- DFCC வங்கி PLC, ஆசிரி இத்தமல்கொட- SVP, Retailமற்றும் SME- DFCC வங்கி PLC, ஷெரா ஹசன்- VP – Pinnacle/கிளை வங்கி திட்டமிடல் மற்றும் அமுலாக்கத் தலைவர் – DFCC வங்கி PLC, திமல் பெரேரா- CEO, DFCC வங்கி PLC, சுபுன் வீரசிங்க- பணிப்பாளர்/குழு தலைமை நிர்வாகி, Dialog Axiata PLC, சோமஸ்ரீ சுப்ரமணியம்- தலைமை இயக்க அதிகாரி, Digital Health (Pvt) Ltd, திரு. தீக்ஷன ஏகநாயக்க- சிரேஷ்ட கணக்கு முகாமையாளர், Digital Health (Pvt) Ltd, நிஷானி பெர்னாண்டோ – சிரேஷ்ட சட்ட அலுவலகம்- ஒப்பந்தங்கள்-குழு சட்ட மற்றும் ஒழுங்குமுறை, Dialog Axiata PLC, மற்றும் நவோதா ரத்நாயக்க – வளர்ச்சித் தலைவர், Digital Health (Pvt) Ltd.
DFCC வங்கி பற்றி
DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச்சேவைகளை வழங்கும், ஒரு முழுமையான சேவைவழங்கும் வணிக வங்கியாகும். DFCC வங்கியின் நிலைத்தன்மை வியூகம் 2020–2030 ஆனது, பசுமை நிதியளிப்பு மற்றும் நிலையான மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வுத்தன்மை மிக்க வணிகங்களை உருவாக்குவது உட்பட, அதிக எதிர்விசைப்பு ஆற்றலுக்கு பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்வதை எதிர்நோக்குகிறது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற Global Brands சஞ்சிகையின் 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் ‘மிகவும் நம்பகமான சில்லறை வங்கியியல் வர்த்தக நாமம்’ மற்றும் ‘சிறந்த வாடிக்கையாளர் சேவை வங்கி வர்த்தக வர்த்தக நாமம்’ ஆகிய விருதுகளை DFCC வங்கி பெற்றுள்ளதுடன், Euromoney வழங்கும் ‘பண முகாமைத்துவத்தில் சந்தை முன்னணி 2021’ என்ற விருதையும் பெற்றுள்ளதுமாய் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது, Business Today யின் இலங்கையின் சிறந்த 40 கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாக DFCC வங்கி தரப்படுத்தப்பட்டது. அத்தோடு, DFCC வங்கியானது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையில் உரிமம் பெற்ற சிறப்பு வங்கி என்ற வகையில், ICRA Lanka Limited இனால் [SL] A+ ஆகவும், Fitch Ratings Lanka Limited ஆல் A+ (lka) ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.