ஒன்லைன் வங்கியியல்

இணையத்தள வங்கிச் சேவை

DFCC eவங்கிச் சேவையானது, உங்களுக்கு வசதியான இடங்களான உங்களது வீடு அல்லது அலுலகத்தில் இருந்துகொண்டே, வங்கிச் சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை வழங்குகிறது. DFCC வங்கிச் சேவையை, இன்றே செயற்படுத்திக்கொள்ளுங்கள்.

சிறப்பம்சங்களும் நன்மைகளும்

சிறப்பம்சங்களும் நன்மைகளும்

 • உங்கள் கணக்கை பரிசோதித்து கண்காணித்துக்கொள்ளுங்கள்

உங்கள் கணக்கு விவரங்கள், கணக்கு மீதிகள், நிதிக்கூற்றுகள், கடன் விவரங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகளையும் பதிவிறக்கம் கொள்ளல்.

 • தடையற்ற நிதிப் பரிமாற்றல்கள்

உங்கள் சொந்தக் கணக்குகளுக்கோ அல்லது மூன்றாம் நபரின் DFCC கணக்கொன்றுக்கோ, வங்கிக் கணக்குகளில் இருந்து நிகழ்நேரப் பணப் பரிமாற்றல்களை மேற்கொள்ள முடியும். வேறு வங்கிக் கணக்குகளாயின் CEFT, SLIPS அல்லது Telegraphic பரிமாற்றங்கள் ஊடாக நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்

 • ரசீதுகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்

உங்களது பயன்பாட்டுக்கொடுப்பனவுகள் (மின்சாரம் நீர்க்கட்டணங்கள்) ஆகியவற்றை, எந்தவொரு நேரத்திலும் எங்கிருந்தும் மேற்கொள்ள முடியும்.

 • பெறுமதி சேர் சேவைகள்;
  • வங்கி ஆணைகளின் அறிவுறுத்தல்களை திட்டமிடுங்கள்
  • கடன்களுக்கான மீள்கட்டணங்களை செலுத்துங்கள்
  • காசோலை புத்தகங்களை கோருதல் அல்லது விநியோகித்த காசோலைகள் மீது கொடுப்பனவு நிறுத்தக் கட்டளைகளை மேற்கொள்ளுதல்
  • நிலையாக வைப்புகளின் முதிர்வுகள், குறைவான நிதி தொடர்பான தகவல் அறிக்கைகளை, மின்னஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ளல்
  • வங்கிக்கு அல்லது வங்கியிடமிருந்து பாதுகாப்பான தகவல்களை அனுப்பும் மற்றும் பெறும் வசதி

எவ்வாறு ஆரம்பிப்பது

 • இலத்திரனியல் eவங்கிச் சேவைக்கு எவ்வாறு பதிவு செய்துகொள்வது?

DFCC வங்கியின் கணக்கு உரிமையாளர் ஒருவர், முறையாக கையொப்பமிடப்பட்ட மாற்று அலைவரிசைக்கான விண்ணப்பத்தை கையளித்து, இலத்திரணியல் வங்கிச் சேவை வாடிக்கையாளராக இணைந்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கு, இங்கே அழுத்தவும் அல்லது அருகிலுள்ள எமது வங்கிக்கிளைக்கு விஜயம் செய்யவும்

 • இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு, பதிவுக்கட்டணம் அல்லது வருடாந்தக் கட்டணம் உண்டா?

இந்தச் சேவை முற்றிலும் இலவசமானது

 • eவங்கிச்சேவைக் கணக்கொன்றுக்குள் ஏன் உள்நுழைய வேண்டும்?

இணையத்தள வங்கிச் சேவைக்குள் நீங்கள் உள்நுழையும்போது, எந்தவொரு தொலைபேசியோ கணினியாகவோ இருந்தாலும், பாதுகாப்பான இணையத்தளத்தைப் பயன்படுத்தவும்.

 • எனது பயனர் அடையாளம் (user ID) மற்றும் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை, முதன்முறையாக எவ்வாறு பெற்றுக்கொள்வது?

பயனர் அடையாளம் மற்றும் உள்நுழைவுக்கான கடவுச்சொல் ஆகியவை, பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் கணக்கைச் செயற்படுத்துவதற்கு, பயனர் அடையாளத்தை பெற்றுக்கொண்டவுடன், எமது வாடிக்கையாளர் சேவை இலக்கமான +94112350000க்கு அழைப்பை ஏற்படுத்தவும். உங்கள் உள்நுழைவு மற்றும் பரிவர்த்தணை கடவுச்சொற்கள் உங்களது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

துறை சார்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விதிகளும் நிபந்தனைகளும்

Download Application