DFCC Green Deposit

DFCC Green Deposit

‘DFCC பசுமை வைப்பு’ என்பது நிலைபேறான தன்மை, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மிகக் கடுமையான காலநிலை மாற்றங்களைக் குறைத்தல் போன்ற பசுமை எண்ணக்கருக்களை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட நிலையான வைப்பாகும்.

அறிமுகம்

அறிமுகம்

‘DFCC பசுமை வைப்பு’ என்பது நிலைபேறான தன்மை, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மிகக் கடுமையான காலநிலை மாற்றங்களைக் குறைத்தல் போன்ற பசுமை எண்ணக்கருக்களை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட நிலையான வைப்பாகும். DFCC பசுமை வைப்பின் ஊடாகத் திரட்டப்படும் நிதிகள் நிலைபேறான தன்மைக்கு ஆதரவளிக்கின்றதும் இலங்கை மத்திய வங்கியின் பசுமை நிதி வகுப்புத்தொகுப்புக்கு இணங்கி ஒழுகுவதுமான நிலைபேறான தன்மைக்கு ஆதரவளிக்கும் கடன்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. நீர் மின்சாரம், சக்தியை உருவாக்குவதற்கு கழிவுப்பொருட்களின் பயன்பாடு மற்றும் நீர் மீள்சுழற்சி ஆகியவை நிலைபேறான கடன்களுக்கு சில உதாரணங்களாகும். இலங்கையில் பசுமை நிதியிடலை ஊக்குவித்து பசுமை வைப்பை ஆரம்பித்த முதலாவது வங்கி DFCC வங்கி ஆகும். இந்தப் பயன்மிக்க நோக்கங்களுக்கு ஆதரவளிப்பதில் அக்கறையுள்ள எவரும் DFCC பசுமை வைப்பை மேற்கொள்ளலாம்.

சிறப்பம்சங்களும் பயன்களும்

  • முதிர்ச்சியின் போது வட்டி செலுத்தக்கூடிய 12 மாதங்களுக்கு வைப்பில் இடப்படும் இலங்கை ரூபாவில் ஒரு நிலையான வைப்பு
  • முதிர்ச்சியின் போது வட்டி செலுத்தக்கூடிய 12 மாதங்களுக்கு வைப்பில் இடப்படும் BFCA (வணிக வெளிநாட்டு நாணயக் கணக்கு) வைத்திருப்போருக்கான ஐக்கிய அமெரிக்க டொலரில் ஒரு நிலையான வைப்பு
  • DFCC பசுமை வைப்புக்கு எதிராக எவ்வித கடனும் வழங்கப்படாது
  • சமூகப் பொறுப்புடையவராக இருத்தல்

தகைமை

  • கூட்டிணைந்த நிறுவனங்களும் 18 வயதுக்கு மேற்பட்ட தனிப்பட்ட நபர்களும்

தேவையான ஆவணங்கள் (உற்பத்தியின் தன்மையைப் பொறுத்து)

  • நிறுவனத்தின் அடிப்படையில் கணக்குத் திறப்பதற்கான ஆவணப்படுத்தல்
  • சுய பிரகடனம்

எவ்வாறு விண்ணப்பிப்பது

  • தயவு செய்து அண்மையில் உள்ள எமது கிளைக்கு வருகை தரவும்

டிஜிட்டல் வங்கிச்சேவை

கருவிகளும் ஆதரவும்