
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
பாதுகாப்பான இணையத்தள பரிவர்தனைகளை எவ்வாறு பயன்படுத்துவது
October 23, 2019

இணையத்தள கொள்வனவுகள் மற்றும் கட்டணங்கள் அனைத்தும் சிறப்பானவையாகும். இதை, உங்களுக்கு எங்கு வசதியாக இருக்கின்றதோ, அங்கு இருந்து எந்தவொரு நேரத்திலோ இரவிலோ மேற்கொள்ள முடியும். உங்களது அலுவலகத்தில் இருந்தோ வீட்டிலிருந்தோ இணையத்தள பரிவர்த்தணைகளை செய்வதானது, எப்போதும் பாதுகாப்பானது என்று கருதமுடியாது. நீங்கள் வீதியில் நடந்துசெல்லும்போதோ கடையொன்றுக்குள் இருக்கும்போதே, உங்களது பணம் திருடப்படுவதைப் போன்றே, இணையளத்தளத்தில், உங்களது தகவல்கள் திருடப்பட்டு, உங்களது பணத்தைத் திருடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனவே, உங்களது இணையத்தள பரிவர்தணைகள், எப்போதும் பாதுகாப்பானதாகவே உள்ளது என்பதை, நீங்கள் எப்போதும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள்
பாதுகாப்பான இணைப்புகளை மாத்திரம் பயன்படுத்துங்கள்
நீங்கள் பிரவேசிக்கும் இணையத்தளம், நம்பகரமானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு, ‘https’ என்று ஆரம்பிக்கும் URL உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ‘http’ என்று குறிப்பிடப்படுபவை அல்ல. உங்களது இணையத்தளங்கள் நம்பகரமானவை என்பதைக் காண்பிப்பதற்கு, ஒரு சில வரைபடங்களும் தென்படும்.
பாதுகாப்பான இணையத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பயன்படுத்தும் உங்களது தகவல்களை, நீங்கள் அனுப்பும் மற்றும் பெற்றுக்கொள்ளும் இணையளத்தளத்தைத் தவிர, மூன்றாவது நபரால் பெற்றுக்கொள்ள முடியாது. சில இணையத்தளங்கள் நம்பகரமானவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, சில குறிப்புகளையும் காண்பிக்கும்.
பாதுகாப்பான இணையத்தளம் ஒன்றைப் பாவிப்பதும் மிக முக்கியமானதாகும். ஒரு நிதி பரிவர்த்தணையை மேற்கொள்ளும்போது திறந்த அல்லது பொது Wi-Fiகளைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இணையத்தளம் நம்பகரமானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்
ஒரு கொள்வனவை மேற்கொள்வதற்காக, நீங்கள் உங்களது தகவல்களை வழங்குவதற்கு முன்னர், அந்த இணையத்தளம் நம்பகரமானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவ்வாறு உங்களுக்கு நிச்சமற்ற தன்மை தென்பட்டால், அந்த இணையத்தளத்தின் மதிப்பு குறித்து கூகுளில் தேடிப் பாருங்கள். மிகவும் பிரபலமான ஒரு அமைப்பாக இருந்தாலும் கூட, அதன் URL சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க எப்போதும் தவறிவிடாதீர்கள். முக்கியமாக, வேறு ஒரு இணையத்தளத்தில் இருந்து பயன்படுத்தப்போகும் இணையத்தள முகவரியைப் பெற்றுக்கொண்டால், அதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நம்பிக்கையில்லாத ஒரு இணையத்தளத்தில் எப்போதும் பணப்பரிவர்தணைகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அது மாத்திரமல்லாது, உங்களது கட்டண தகவல்கள் பற்றி, யாருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவோ உங்களது மின்னஞ்சலுக்கு வரும் மின்னியல் வணிக முகவரிகளுடன் பரிவர்தணைகளை மேற்கொள்வதையோ முற்றாக தவிர்த்துவிடுங்கள். DFCC வங்கி உள்ளிட்ட நம்பகரமான அமைப்புகளோ நிதி நிறுவனங்களோ, உங்களது நிதி தொடர்பான தகவல்களை மின்னஞ்சலில் அனுப்புமாறு, எப்போதும் கோராது.
பரிவர்த்தணைகளை கண்காணியுங்கள்
இக்காலத்தில், நாம் பாரியளவிலான பரிவர்த்தணைகளை மேற்கொள்வதால், தனிப்பட்ட ஒரு நபரின் பரிவர்த்தணைகளை கண்காணிப்பது கடினமாகும். ஆனால், அது குறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பரிவர்த்தணைகள் குறித்தும் ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்தாவது, அது உங்களது மாதாந்த அறிக்கையில் உள்ளதா இல்லையா என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தணைகள் இடம்பெற்றிருந்தால், அது குறித்து வங்கிக்கு அறிவியுங்கள். ஆனால், ஒவ்வொரு பரிவரத்தணைகளுக்கும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்களைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவை முன்கூட்டியே பெற்றுக்கொள்வது சிறந்ததாகும்.
கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைக்கவும்
கடினமான கடவுச்சொற்களை யாரும் விரும்புவதில்லை என்றாலும், இணையக் கொள்வனவுகளின் போது, உங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு, அதுவே சிறந்த வழியாகும். ஆங்கிலத்தில் பல்வேறான எழுத்துகள், இலக்கங்கள், குறியீடுகளுடனான கடவுச்சொல்களையே பயன்படுத்துங்கள். அதுமாத்திரமல்லாது, மேலதிக பாதுகாப்பொன்றை வைத்துக்கொள்ளும் பொருட்டு, கணக்கை அங்கீகரிக்கும் முறைமையையும் வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நம்பிக்கையானவராக இருந்தாலும், உங்களது கடவுச்சொற்களை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.
மற்றையவர்களின் சாதனங்களைப் பயன்படுத்தனால், அனைத்து இணையத்தள பாவனைகளையும் அழித்துவிடுங்கள்.
சில நேரங்களில் மற்றொருவருடைய தொலைபேசியையோ கணினியையே பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால், எவ்வளவு நம்பிக்கையான நபராக இருந்தாலும், நீங்கள் பயன்படுத்திய இணையத்தளத்தின் தடயங்களை அழித்துவிடுங்கள். எவ்வாறாயினும் இணையத்தளத்திலுள்ள incognito முறையைப் பயன்படுத்துவது சிறந்தது. இதில், நீங்கள் பயன்படுத்திய எந்த இணையத்தளமும் பதிவில் இருக்காது.
தவறு நடந்தால் என்ன செய்வது?
உங்களது கடனட்டை, உங்களுக்கு தெரியாமல் இணையத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால், அது குறித்து வங்கிக்கு உடனடியாக அறிவியுங்கள். இதற்காக, 7 நாள்களுக்கு 24 மணிநேர சேவையை வழங்கும் 011-2350000 என்ற தொலை பேசி இலக்கத்துக்கு தெரிவிக்கவும். எவ்வளவு விரைவாக தெரிவிக்கின்றீர்களோ அவ்வளவு சீக்கிரம், உங்களது பிரச்சினை தீர்த்து வைக்கப்படும்.