முகாமைத்துவ பயிற்சி
விண்ணப்பத்தினை தரவிறக்கவும்
DFCC வங்கியின் முகாமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆனது சிறந்த அங்கீகாரத்துடன் வங்கியின் துணை அபிவிருத்தி செயல்பாடுகளை தொடர்வதற்கும் வழிகோலும்.
DFCC இன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக் கூடிய மற்றும் நாளைய தலைமுறையினரின் தலைவர்களாக உருவாக கூடிய நபர்களையே நாம் விரும்புகின்றோம்.எங்களின் அபிவிருத்திக்கு சொத்தாக விளங்கக் கூடிய கருத்துக்களையும் பன்முகத்தன்மை கொண்டவர்களையுமே நாம் தேடுகின்றோம். வணிகச் சூழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில் மாறிவரும் போக்குகளிற்கு முகங்கொடுக்கக் கூடியவர்களும் விருப்பப்படுவர்.குறிப்பாக சுறுசுறுப்பானவர்களை நாம் விரும்புகின்றோம்.
இதை மனதில் கொள்ளவும் முகாமைத்துவ பயிற்சியாளர்கள் வெவ்வேறுவிதமான கல்வித்தகைமைகள் ,கலாச்சாரம் ,பிரதேசம் ,பொருளாதாரம் மற்றும் சமூகப்பின்னணிகளில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். நிகழ்ச்சி திட்டமானது தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு வகுப்பறை பாடத்திட்டங்கள் ,தொழில் பயிற்சி ,தொழில் சுழற்சிகள் தொடர்ச்சியான மதிப்பீடுகள் என்பவற்றின் ஊடாக சவால்களை எதிர்க்கொள்ளல் மற்றும் பரந்த கற்றலை வழஙகுவதற்கு என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக செயல்பாடுகளை செய்வதற்கு அவர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். பயிற்சி காலத்தின் முடிவில் வழக்கமான பணியாளர்கள் குழாமில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கான தகைமையை கண்டறிந்த பின்னர் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவர். வங்கியில் இணைந்த பின்னர் பயிற்சியாளர்களும் வேலைத்தளம் மற்றும் அதன் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அனுசரித்து போவதற்கு புதிய ஊழியர்களை வழிநடத்தக் கூடிய DFCC REDS கழகத்தின் உறுப்பினர்களாக கருதப்படுவர்.
எவ்வாறு சிறந்த தொழில் நிபுணத்துவம் மிக்கவராக மாறுவது பற்றி கற்பித்து கொடுக்கவும்.
- லக் ஷான் குமாரஜீவ -
உன்னதமான அனுபவம்
DFCC இன் முகாமைத்துவ பயிற்சியாளராக என்னுடைய அனுபவமானது சிறப்பாக இருந்தது. நான் ஓர் கிளையில் ஆரம்பித்து பின்னர் வணிக வங்கியியல் பிரிவிற்கு மாறினேன். இச்சுழற்சியானது கிளை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த உதவியதுடன் சிறிய நடுத்தர தொழிற்துறைகளுக்கு மதிப்பீடுகளை எழுதுவதற்கு உதவியது. மேலும் முகாமைத்துவ பயிற்சியானது வெளிக்கள சுற்றுலாக்கள் மற்றும் OBT போன்ற சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகளை உள்ளடக்கி இருந்ததனால் வங்கியில் பணி புரியும் ஏனையவர்களை பற்றி அறிய உதவியது. DFCC உடன் பணி புரிவது பொதுவாக ஓர் சிறந்த அனுபவமாக இருந்தது.
- போரா கிறிஸ்டி -
DFCC முகாமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியையும் வெகுமதிகளையும் அளிக்கிறது ஏனெனில் இது வங்கியின் நாளாந்த செயற்பாடுகளுக்கான சிறந்த வெளிப்பாட்டினை பெற்றுத்தர உதவியது. 2013 ஆம் ஆண்டில் நான் DFCC வங்கியில் முன்னதாக எவ்வித வங்கியியல் வெளிப்படுத்தல்களும் இல்லாமல் மற்றும் போட்டிமிகு நிபுணத்துவம்மிகு உலகில் கைநிறைய அனுபவத்துடன் முகாமைத்துவ பயிற்சியாளராக இணைந்தேன் .