DFCC இணையதளத்தில் முகப்புத்தகம் topjobs ஆகியவற்றில் வேலைவாய்ப்புக்கள் பற்றி விளம்பரப்படுத்தப்படும் . சில தெரிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்புக்கள் Linked-in மற்றும் பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தப்படும்.
ஏற்கனவே வெற்றிடமாக உள்ள பதவி ஒன்றிற்கு நீங்கள் விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளீர்களாயின் எங்களுடைய இணையத்தளத்தில் உள்ள நிலையான DFCC விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து முழுமையாக நிரப்பி விளம்பரத்தில் குறிப்பிட ப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தபாலில் மனிதவள திணைக்களம் DFCC வங்கி பிஎல்சி இல 75/3 ,காலி வீதி, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பவும்.
நீங்கள் முதல் கட்ட தேர்வுகளில் பட்டியலிடப்பட்டிருந்தால் திறன் பரிசோதனை சிரேஷ்ட முகாமைத்துவத்துடன் முதல் சுற்று நேர்முகத்தேர்வு மற்றும் விளக்கக்காட்சிகள் குழு கருந்துரையாடல் ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்பீட்டு மையம் ஆகியன உள்ளடங்கலான ஓர் தெரிவு செயற்பாட்டிற்கு ஆளாவீர்கள். இச்செயற்பாட்டின் மூலம் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரிகள் வங்கியின் CEO மற்றும் DCEO உடன் இறுதி நேர்முகத்தேர்விற்கு முகங்கொடுப்பார்கள். வெற்றிகரமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வங்கி முகாமைத்துவ பயிற்சிக்கு இணைத்துக் கொள்ளப்படுவர். முகாமைத்துவத்தின் சுய விருப்பத்திற்கு ஏற்ப நிலையான தெரிவு செயற்பாடுகள் மாறுபடலாம்.
வங்கியின் நுழைவு நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரிகள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இதுவும் பரீட்சை தொடங்குவதற்கு முன்னர் அறியத்தரப்படும். முகாமைத்துவப் பயிற்சி பரீட்சைகள் மற்றும் நிறைவேற்றுனர் பரீட்சைகளின் போதும் வெற்றிகரமாக செய்த விண்ணப்பதாரிகள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு சமூகமளித்தவர்கள் (வங்கியின் எந்தவொரு பதவி வெற்றிடத்திற்கும்) நேர்முகத்தேர்விற்கு சமூகமளித்த திகதியில் இருந்து ஒருமாதத்திற்குள் மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அவ்வப்போது அறியத்தருவோம்.
பதவியினை பொறுத்து ஆட்சேர்ப்பு செயல்பாடானது மாறுபடலாம். எதுவாயினும் சாராசரியாக கனிஷ்ட பிரிவு பதவிகளுக்கு அண்ணளவாக 3-4 வாரங்கள் மற்றும் சிரேஷ்ட பிரிவுகளுக்கு 6-8 வாரங்கள் எடுக்கும். அதிகப்படியான விண்ணப்பதாரிகள் மற்றும் கட்டமைப்பின் காரணமாக முகாமைத்துவ பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு ஆனது நீண்ட காலம் எடுக்கும்.
நீங்கள் DFCC இணையத்தளத்ததின் முகப்புத்தக பக்கம் சென்று பார்வையிடவும். அத்தோடு நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்க முன்னர் வங்கி தொடர்பான மற்றும் எங்களின் பொருட்கள்/சேவைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும். ஆரம்ப நிலை பதவிகளுக்கு சிறந்த தொடர்பாடல் குழு வேலை பாடசாலை காலங்களில் வகித்த தலைமைத்துவ பங்கு விண்ணப்பதாரியின் ஏனைய செயற்பாட்டு திறன்கள் என்பன அங்கீகாரத்தின் போது கருத்தில் கொள்ளப்படும்.
சிரேஷ்ட நிலை பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்த பதவி தொடர்பான உங்களின் பொது அறிவு / தொழில்நுட்ப அறிவு என்பவற்றை மேம்படுத்திக் கொள்வதோடு DFCC வங்கியினால் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்ட குறித்த பதவிக்கான பணியினை வளப்படுத்துவதில் உங்களின் அறிவையும் அனுபவத்தினையும் எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பது குறித்து உங்களின் மூலோபாயத்தை முன்வைக்க /வெளிப்படுத்துமாறு கோரப்படலாம்.
ஆம்.
ஆம்.
கீழ் குறிப்பிடப்பட்டள்ள ஆவணங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பாடசாலையை விட்டு விலகிய சான்றிதழ்கள்
- கிராம சேவகர் சான்றிதழின் அசல் பிரதிகள்
- பொலிஸ் சான்றிதழ்
- CV இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தகைமைகளுக்கான சான்றிதழ் பிரதிகள் தே.அ.அ மற்றும் பிறப்புச் சான்றிதழ் பிரதிகள்
- பட்டப்படிப்பன் சான்றிதழ் பிரதி/ தொழில்சார் பரீட்சைகள்(தேவைப்படுமாயின்)
- திருமணச் சான்றிதழ்( தேவைப்படுமாயின்)
- பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்(தேவைப்படுமாயின்)
- சிபாரிசுக் கடிதங்கள் 03
- இதற்கு முன்னர் வேலை செய்த இடத்தில் இருந்து சேவைக் கடிதம்(தேவைப்படுமாயின்) மேலும் பல.
ஆம்.எதிர்காலத்தில் பொருத்தமான வேலைவாய்ப்பு வரும் வரை நாம் CV ஐ எமது தரவு சேகரிப்பில் வைத்திருப்போம். தகுந்த பதவி வெற்றிடம் வரும் பட்சத்தில் உங்களை தொடர்புகொள்வோம்.
நீங்கள் அண்மையில் பாடசாலையை விட்டு விலகியவராயின் எங்கள் குழாமில் இணைய குறைந்தபட்ச அளவுகோல்களை பூர்த்தியாக்கல் வேண்டும். வங்கியியல் நடவடிக்கைகளுக்கு வங்கிக் கிளை ஒன்றில் டெலர் ஆகவோ அல்லது காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஏதேனும் பிரிவில் (உதாரணம் கணக்கியல் சந்தைப்படுத்தல் ,மனித வளம் போன்ற )மாற்றீடாக ஆதரவு வழங்க கூடிய விதத்தில் உங்களது தொழிற்பாதையை தெரிவு செய்யலாம்.
நீங்கள் நிறைவேற்று பயிற்சி அல்லது முகாமைத்துவ பதவிகளுக்கான பயிற்சி அளவுகோல்களை நிறைவு செய்து இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாக தரத்தில் சேரலாம். நீங்கள் உங்களது தொழிற் பாதையை பிரதானமாக கடன் அல்லது பின்புற காரியாலய பணி/ வெற்றிடங்களை பொறுத்து (உதாரணமாக திறைசேரி நிதி போன்ற ) ஏதேனும் பிரிவில் உதவிக்கான பங்கினை வகிக்கலாம்.
மேலும் நீங்கள் வங்கியில் ஓர் ஜுனியர் தரத்தில் இணைந்திருப்பீர்கள் ஆயின் அத்தோடு பணியில் இருக்கும் போதே நீங்கள் பட்டப்படிப்பை அல்லது ஓர் தொழில்நிபுணத்துவ தகைமையையோ பூர்த்தி செய்து இருந்தால் அளவுகோல்களுக்கு அமைய ஊழியர்கள் விரைவாக உயர் பதவிக்கோ நிர்வாக தரத்திற்கோ தரம் உயர்த்தக் கூடிய முன்னேற்றகரமான தொழிற்துறை கட்டமைப்பு செயற்திட்டங்கள் உங்களுக்கு உள்ளன.
அனுபவமிக்க தனிநபர்கள் அவர்களின் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப வேலையில் சேர்க்கப்படுவர்.
வங்கியில் இணைந்த பிறகு தொழிற்பாதை மாற்றத்தினை மேற்கொள்ள நீங்கள் குறிப்பிட்ட ஒரு பதவியில் குறைந்தபட்சம் கால அளவினையேனும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும் .அத்தோடு வருடாந்த மாறுதல்களுடன் நீங்கள் பதவி மாற்றத்திற்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலும் சகல தொழில் வாய்ப்புக்களும் உள்ளக ரீதியாக விளம்பரப்படுத்தப்படுவதுடன் தகைமை உள்ள ஊழியர்கள் விளம்பரப்படுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவுகோல்களை பூர்த்தி செய்வீர்களாயின் விண்ணப்பிக்க முடியும். நீங்கள் சிரேஷ்ட குழுவுடன் முறையான நேர்முகப்பரீட்சையினை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பதவி வெற்றிடத்திற்கு நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்களாயின் உங்களது தொழிற்பாதை மாற்றமானது கவனத்தில் கொள்ளப்படும்.
விற்பனை ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் பயணத்திற்காக செலவு செய்த பணத்தினை ஈடு செய்தல் கையடக்க தொலைபேசி செலவுகள்(குறிப்பிட்ட எல்லை வரை) அத்தோடு கவர்ச்சிகரமான ஊக்குவிப்பு திட்டங்கள் உள்ளடங்கலாக உங்களின் செயற்பாட்டினை அடிப்படையாக கொண்டு வருடாந்த அதிகரிப்புக்கள் மற்றும் போனஸ்களையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொழில்முறை வளர்ச்சிக்கு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்தி வாய்ப்புக்களையும் சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்துவோர் விரைவான தொழில் முறை மாற்ற செயற்பாடுகளை எதிர்ப்பார்க்கலாம்.
போட்டிமிகு சம்பளத்திற்கு அப்பால் கிளை முகாமையாளர்கள் குறிப்பிட்ட தரத்திற்கான நிலையான கொடுப்பனவு கையடக்க தொலைபேசி கொடுப்பனவுகள் கிளை முகாமையாளர் கொடுப்பனவு தங்குமிட கொடுப்பனவு( வெளியிட பணிக்கு) உள்ளடங்கலாக வங்கியின் நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் ஏனைய நன்மைகளும் கிடைக்கப்பெறும்.
சிறந்த செயற்திறன் வெளிப்படுத்துனர்கள் விரைவான தொழிறபாதை மேம்படுத்தல் வாய்ப்புக்களையும் எதிர்பார்க்கலாம்.
வங்கியின் நிலையான வேலை நேரம் காலை 8.30 தொடக்கம் மாலை 5.00 மணி வரை.ஆயினும் கிளை வலையமைப்பு ஊழியர்கள் வேலை முறைப் பட்டியல் அடிப்படையில் காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வேலை செய்ய வேண்டும். எங்களின் சில கிளைகளில் நீடிக்கப்பட்ட வங்கி மணித்தியாலங்கள் காணப்படுவதால் அக்கிளைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைமுறைப் பட்டியல் அடிப்படையில் வேலை நாட்களில் மாலை 7 மணி வரை பணியினை தொடர எதிர்ப்பார்க்ப்படுவர்.
வேலையின் தேவைப்பாட்டினைப் பொறுத்து சௌகரியமான வேலை முறைப் பட்டியல் மணித்தியாலங்களும் உள்ளன.
நீங்கள் பணிக்கு சேர்ந்த முதல் வருடம் ஒவ்வொரு மாதமும் 0.5 நாள் தற்காலிக விடுமுறையும் ( casual leave) மற்றும் 1 நாள் மருத்துவ விடுமுறையும் (medical leave) வழங்கப்படும். அடுத்த ஆண்டு 14 நாட்கள் மருத்துவ விடுப்பும் 7 நாட்கள் தற்காலிக விடுமுறையும் உங்களுக்கு வழங்கப்படும் நீங்கள் வங்கியில் இணைந்த நாளினை அடிப்படையாக கொண்டு விடுமுறை வழங்கப்படும். அடுத்த ஆண்டு 21 நாட்கள் விடுமுறையும் 14 நாட்கள் மருத்துவ செலவுகளும் மற்றும் 7 நாட்கள் தற்காலிக விடுமுறையும் வழங்கப்படும்.
சகல பொது விடுமுறைகள் மற்றும் வர்த்தக விடுமுறைகளும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை தினமாகும்.
நீங்கள் வங்கியில் பாடசாலை விட்டு விலகியவராக இணைந்து இருந்தால் அல்லது பகுதியளவில் நிபுணத்துவ தகைமை பெற்றிருந்தால் எதிர்பார்க்கும் செயற்திறன் தரத்தினை பெற்றிருந்தால் /தரத்திற்கு மேம்பட்டு இருந்தால் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் பதவி உயர்விற்கு தகுதி பெறுவீர்கள். வங்கியின் விடுக்கப்படும் அளவுகோல்களை பூர்த்திசெய்யும் சிறந்த உயர் செயற்தினாளிகளுக்கு விரைவாக சந்தர்ப்பம் வழங்கப்படும்.