1955 இல் நிறுவப்பட்ட DFCC வங்கி ஆனது ஆசியாவின் பழைமையான வங்கிகளில் ஒன்றாகும்.
இது ஓர் தனித்துவமான நிவனம். தனியார் துறை வடிவத்தில் இருந்தாலும் பெரும்பாலும் பொது-தனியார் கூட்டாண்மை அமைப்பு போன்றே விளங்குகிறது. DFCC ஆனது ஓர் பாராளுமன்ற சட்டத்தின் கீழ் தனியார் துறை பங்களிப்பின் ஊடாக சுயாதீனமான தொழிற்துறை வளர்ச்சிக்கு கைகொடுக்க உருவாக்கப்பட்டது.
பொருளாதார சூழ்நிலைகள் ,மாறிவரும் அரசியல் மாற்றங்களுக்கு எதிராக மற்றும் உரிமை ஆவணம் பெற்றிராத பிரேதசங்களில் தனது ஆணையை நிறைவேற்றல் போன்றவற்றிக்காக இன்று வரையில் அரசாங்கத்தின் ஆதரவுடன் அரைநூற்றாண்டிற்கு மேலதிகமாக புதுமையான மற்றும் வினைத்திறன்மிக்க பங்களிப்பினை தனியார் துறை அபிவிருத்திக்கு வழங்கியுள்ளது . DFCC இன் பங்கானது நீண்டகால கடன்களை மட்டும் வழங்குவதில் மட்டுப்படுத்தப்படவில்லை திறன் மேம்பாடு மற்றும் வியாபார வசதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
DFCC வங்கி ஆனது தடம் பதித்த பல தொழில்முனைவோர்கள் மற்றும் நிவனங்களுடன் இணைந்து வளர்ச்சி பெறவும் முக்கியமாக அவர்களின் தொடக்க நிலைகளில் மற்றும் சவாலான ஆரம்ப காலங்களில் உற்ற துணையாக விளங்கியதில் பெருமிதம் கொள்கிறது. தற்போது அதில் பலர் விவசாயம் ஆடைத்தொழிற்சாலை கட்ட நிர்மாணம் உணவு மற்றும் குளிர்பானம் சக்தி ஆரோக்கியம் உற்பத்தி தொலைத்தொடர்பு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் முன்னணியாக வகிக்கின்றனர்.
அபிவித்தியின் முக்கிய துறைகளான விடுதிகள் ஹோட்டல்கள் கையடக்க தொலைபேசி தொலைத்தொடர்பு மற்றும் அண்மையில் புதுப்பிக்கதக்க எாிசக்தி போன்ற சிறிய நடுத்தர நிறுவனங்களை வழிநடத்த துணிவுடன் செயற்பட்ட ஓர் முன்னோடியாக வங்கியாகத் திகழ்கிறது. வங்கியானது முதலீட்டு வங்கியியல், யுனிட் ரஸ்ட் ,பங்கு தரகு , துணிகர முயற்சியாண்மை மூலதனம், தொழித்துறை உடைமை முகாமைத்துவம் போன்ற புதிய முயற்சிகளிலும் மற்றும் பாராட்டும் முறையிலான வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ளது.
அதன் வளர்ச்சிப் பாதையில் இன்னும்அதிக தூரம் பயணிக்க வேண்டி இருப்பதனால் DFCC வங்கி ஆனது புதிய மிலேனியத்தில் அதன் வியாபார மார்க்கத்தை முன் உதாரணம் ஒன்றுடன் தொடர்ந்தது. புதிய துணை நிறுவனங்கள் ஆலோசனை மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளுடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்டன. முதலீட்டு வங்கியியல் வணிகம் ஆனது வளர்ச்சி பெறக்கூடிய உலகளாவிய முதலீட்டு வங்கியியல் குழுமமாக ஓர் கூட்டு முயற்சியின் ஊடாக மீண்டும் நிறுவப்பட்டது.
கடந்த தசாப்தத்தின் முக்கிய நிகழ்வாக DFCC வங்கியின் வணிக வங்கியியல் துணை நிறுவனம் DFCC வர்தன வங்கி ஆரம்பிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. ஓர் தனித்துவமான வங்கி ஒரே கட்டமைப்பில் இருந்த DFCC வியாபாரத்துடன் மட்டும் தொடர்புபட்டதாய் இருக்காமல் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களினதும் வாழ்க்கையின் தேவைப்பாடுகளுக்கு சேவைகளை வழங்கக் கூடியதாகவும் மாற்றம் பெற்றது. மேம்படுத்தப்பட்ட தனிப்பட்ட நிதிச் சேவைகள் வளங்கள் மற்றும் பொறுப்புக்கள் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
DFCC ஆனது அதன் பயணம் முழுவதும் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் அதன் விசேட பங்கில் கண்ணும் கருத்துமாய் இருப்பதில் தவறவில்லை. விசேடமாக மாகாணங்களுக்கு நிதி வளங்களை பகிர்ந்தளித்து கிராமப்புற பொருளாதாரத்தினை மாற்றியைமத்து அதன் மூலம் வாழ்வாதாரங்களுக்கு துணை புரிதல் வேலைவாய்ப்புக்களை தோற்றுவித்தல் மற்றும் மூலதன உருவாக்கம் போன்றவற்றின் ஊடாக நிலையான அபிவிருத்தி நிதியிடலில் தொடர்ச்சியாக முன்னணியில் திகழ்ந்தது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளே இம்மாற்றத்தின் முக்கிய இயக்கி ஆகும். அத்தோடு DFCC ஆனது இத்துறையின்அபிவிருத்திக்கு எப்போதும் உறுதுணையாக உள்ளது.
விசேடமாக கூட்டுறவு மற்றும் சமூக பொறுப்புகளின் பிாிவுகளிலும் மற்றும் அபிவிருத்திலும் DFCC ஆனது அதன் பணியில் பல ஆண்டுகளாக அங்கீகாிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சர்வேதச நிதி சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டமையே விசேடமாகும். DFCC வங்கி ஆனது மாறக் கூடிய சிறிய அளவிலான நிதி நிறுவனங்களில் ஒன்றாக மட்டுமல்லாது சர்வேதச மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளை மாற்றும் வலுவான நிதி நிறுவனமாக மற்றும் வங்கி தன்னை பல்வேறு பொருட்களாக மாற்றக் கூடியதாயிருத்தல் போன்றவற்றிலும் வெற்றி கண்டுள்ளது என உலக வங்கி குறிப்பிடுகின்றது. DFCC இன் விசேட தகுதி நிலை குறிப்பிடுவது யாதெனில் இதுவே பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு நிதியை வழங்குவதற்கும் நிதியை பெற்றுக்கொள்வதற்கும் விருப்பத்திற்குாியதாக இருப்பதற்கு காரணமாகும்.
பல ஆண்டுகளாக DFCC ஆனது புத்தெழுச்சிமிக்க பொருளாதாரம் அதன் நிறுவனங்கள் மற்றும் அதன் மக்கள் ஆகியோரின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகவும் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் நிறுவப்பட்டு விஸ்தாிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜனவாி 2015 இல் DFCC 2007 கம்பனிச் சட்ட இல 07 கீழ் DFCC வங்கி பி.எல்.சி யாக மாற்றம் பெற்றும் பொது வழங்கல் கம்பனியாக கூட்டிணைக்கப்பட்டது.
ஒக்டோபர் 2015 இல் இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதித் துறையில் மைல்கல் நிகழ்வாக DFCC வங்கி பிஎல்சி மற்றும் அதன் துணை நிறுவனம் DFCC வர்தன வங்கி ஆகியன மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் முழுமையான வர்ததக வங்கி ஒன்றினை உருவாக்க ஒன்றிணைந்தன. நிதிச் சேவை துறையில் DFCC வங்கி பிஎல்சியை கணக்கிட வேண்டிய வலுமிக்க சக்தியாக அதன் நிலையினை இணைக்கப்பட்ட பங்குடைமை மற்றும் கூடடிணைக்கப்பட்ட அபிவிருத்தி வங்கியியல் மற்றும் ஒன்றுசேர்க்கப்பட்ட நிறுவனங்களின் வணிக வங்கியியல் வளங்கள் என்பனவே வலுப்படுத்துகின்றன. நிலையான பெறுமதி ஒன்றினை உருவாக்குவதனை இலக்காக கொண்டு ஒருங்கிணைந்த நிறுவனம் முழு அளவிலான வங்கிச் சேவைகளை நாட்டின் சகல பொருளாதார துறைகள் மற்றும் புவியியல் முழுவதிலும் வழங்குகின்றது.
நிதிச் சேவைகள் குழுமமாக DFCC வங்கி பிஎல்சி கூட்டு முயற்சியாளர்கள் அதன் துணை நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட கம்பனி ஊடாக முதலீட்டு வங்கியியல் யுனிட் டிரஸ்ட் பங்கு தரகு துணிகர முயற்சியாண்மை மூலதனம் தொழிற்துறை உடைமை முகாமைத்துவம் ஆலோசனை மற்றும் தகவல்தொழில்நுட்ப சேவை போன்ற அதன் வியாபாரங்கள் ஊடாக தொடர்ந்து வளர்ச்சி அடைகின்றது.
வங்கி தற்போது நாடளாவிய ரீதியில் 138 கிளைகளை இயக்குகிறது.அத்தோடு பல்வேறு துறையில் நிபணத்துவம்மிக்கவர்களுடன் 1500 இற்கு மேற்பட்ட ஊழியர்களால் சேவை வழங்கப்படுகின்றது.
What does the future hold?
DFCC வங்கியானது வடிவைமப்பின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் தெரிவிற்கேற்றப மாறுதல் அடையக்கூடியது.
அத்தோடு எதிர்காலத்திற்கு பொருத்தமானதாக அமையும்.
சகலருக்கும் நிைலயான முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்வுக்கு பொறுப்புணர்வுமிக்க நிதித் தீர்வுகைள மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக தனிப்பட்ட நபர்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் தொடர்ந்தும் கவனம் செலுத்தும்.
உங்கள் வளர்ச்சிக்கு...