DFCC இல் வாழ்க்கை
DFCC வங்கியானது பன்முகத்தன்மை மற்றும் யாவரையும் உள்ளடக்கும் ஒரு பணியிட கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மகிழ்ச்சியான பணியாளர்கள் அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆகவே, எங்கள் ஊழியர்களின் ஈடுபாட்டினை அதிகரிப்பதற்கான அம்சங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்க நீண்ட நேரத்தையும் சக்தியையும் நாம் முதலீடு செய்கிறோம்.
எங்கள் விழுமியங்கள்
எங்கள் பணியிடக் கலாச்சாரமானது எங்கள் முக்கிய விழுமியங்களின் கட்டமைப்பை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. அது மட்டுமல்லாது, எங்கள் நிறுவனம் கடைபிடிக்கும் விழுமியங்களை வெளிப்படுத்தவும் ஆளுமைப்படுத்தவும் நாம் எங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கின்றோம். இந்த விழுமியங்கள் அனைத்து ஊழியர்களினதும் பங்களிப்பைக்கொண்டு உருவாக்கப்பட்டமையினால், இவை எம் இதயங்களுக்கு நெருக்கமானவையாகவும் இருக்கின்றன. இந்த திட்டமானது, வெவ்வேறு தரங்களைச் சேர்ந்த ஊழியர்களைக் கொண்ட குழுவினால் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எங்கள் விழுமியங்கள்:
- புத்தாக்கம் கொண்டது
- வாடிக்கையாளரை மையமாகக் கொண்டது
- தொழில்நேர்த்தி
- நன்னெறி சார்ந்தது
- பொறுப்புக்கூறல்
- அணி சார்ந்தது
- சமூகப் பொறுப்பு கொண்டது
- பன்முகத்தன்மை, சமபங்கு & உள்ளடக்கம்
- சேவைக்கு முக்கியத்துவம்
ஊழியர் ஆதரவு
DFCC இல், சில சமயங்களில் ஊழியர்களுக்கு பிரச்சினைகள், சந்தேகங்கள் மற்றும் கவலைகள் இருப்பதையும் அவர்களுக்கு உதவி தேவை என்பதையும் நாம் அறிவோம். இவற்றுக்கு தீர்வு வழங்குவதற்கான பல செயல்முறைகளையும் நாம் கொண்டுள்ளோம். குறிப்பாக, முறையான குறை தீர்க்கும் செயல்முறை, பலதரப்பட்ட தரங்களை உள்ளடக்கிய செயல்பாட்டு குறைதீர்ப்புக் குழு, அத்துடன் பெண் ஊழியர்கள் தொழில் ரீதியாகவோ தனிப்பட்ட ரீதியிலோ முகம் கொடுக்கும் பிரச்சினைங்களை வெளிக்கொண்டுவருவதற்கான “ரீச் அவுட்” திட்டம், ஆகிய தீர்வு முறைகளை நாம் கொண்டுள்ளோம்.
அனைத்து ஊழியர்களும் இலகுவாக அணுகக்கூடிய வகையில், CEO உட்பட மூத்த நிர்வாகத்துடன் திறந்த கதவு கொள்கையை எமது வங்கி நடைமுறைப்படுத்துகிறது. மேலும், நாம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறையேனும் “Open Days” நடைமுறையை செயல்படுத்தி வருகின்றோம். அப்போது, வங்கியின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குறைதீர்ப்பு மற்றும் ரீச் அவுட் குழுக்களின் பிரதிநிதிகள், வங்கியின் ஊழியர்களை நேராய் சந்தித்து அவர்களுக்கு இருக்கும் பிற பிரச்சினைகள் பற்றிய அவர்களின் யோசனைகளைக் கேட்டு அறிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறார்கள்.
உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு
வங்கியின் உடற்பயிற்சி முன்முயற்சி, OMMM ஆனது, ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. நாங்கள் மானியத்துடன் கூடிய மருத்துவ திட்டங்கள், பல்வேறு உடற்பயிற்சி திட்டங்கள், உடற்பயிற்சி போட்டிகள், ஜிம் உறுப்புரிமை, விழிப்புணர்வு நடவடிக்கைகள், நினைவாற்றல் மற்றும் மனநல முன்முயற்சிகள் ஆகியவற்றை வழங்குகிறோம். குறிப்பாக, எங்கள் வலையமைப்பில் இருப்போர் மத்தியில் சைக்கிள் ஓட்டுதலை ஒரு வாழ்க்கை முறையாக ஊக்குவிப்பதே எங்கள் பிரதான திட்டமாக இருக்கின்றது.
சமூக நிகழ்வுகள்
வங்கியின் நாட்காட்டி பல செயற்பாடுகளை உள்ளடக்குகிறது, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஊழியர்கள் தாங்கள் விரும்பும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்வுகளில், வருடாந்த சுற்றுலா, புதுவருட விற்பனை விழா, பக்தி கீ, விளையாட்டு தினங்கள், இரவு உணவும் நடனமும், குறித்த நிகழ்வையொட்டிய விருந்துகள், வினா-விடைப் போட்டிகள், கிறிஸ்துமஸ் விருந்துகள், DFCC குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்வுகள், கிறிஸ்துமஸ் கரோல்கள், பிரிவு ரீதியான அலங்காரப் போட்டிகள், வருடாந்த கலை மற்றும் புகைப்படப் போட்டி போன்றவை அடங்கும்.