
வங்கியுடன் வளர்ச்சி அடைதல்
DFCC வங்கியில் ஓர் தொழில்முறையானது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள், பலவிதமான நன்மைகள் மற்றும் தொழில்நிபுணத்துவம், குழுப்பணி, வெளிப்படைத்தன்மை, பன்முகத்தன்மை, தனிப்பட்டவர்களின் ஆற்றல் மற்றும் அங்கீகாரங்களுக்கும் மதிப்பளித்தல் ஆகியவற்றை மதிப்பிடும் ஒரு கலாச்சாரத்தை உறுதியளிக்கிறது.
வங்கியுடன் வளர்ச்சி அடைதல்
வெற்றிக்கான செயற்திட்டம்
ஊழியர்களின் முக்கிய திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கு உயர் அளவிலான பொறுப்புக்களை பொறுபேற்பதற்கான மேம்படுத்தல் வாய்ப்புக்களை வழங்கக் கூடிய கட்டமைப்பு செயல்பாடுகளை நாம் கொண்டுள்ளோம்.எங்களின் சகல ஊழியர்களும் அவர்களின் வளர்ச்சித் தேவையை பட்டியலிடுவதற்கும் வழக்கமான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புக்களை அணுகுவதற்கும் திட்டம் உள்ளது. குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுக்கு எதிராக தனிப்பட்ட சாதனைகளை வரைபடமாக காட்டுவதற்கான வெளிப்படையான செயற்திறன் முகாமைத்துவ செயன்முறையை வங்கி கொண்டுள்ளது.
மேம்படுத்தல்கள் மற்றும் செயற்திறன் முகாமைத்துவம்
கீழ் மட்ட பிரிவுகள் மற்றும் நிர்வாக மட்டத்திலான ஊழியர்களுக்கான தொழிற்பாதை பதவி உயர்வுகள் என்பன காலம் மற்றும் செயல்பாட்டினை பொறுத்து தீர்மானிக்கப்படும். முகாமைத்துவ மட்டத்திலான பதவிகளுக்கு திறமை, செயல்பாடு மற்றும் பணியாளர் குழாமில் பதவிகளுக்கான வெற்றிட வாய்ப்பு என்பவற்றை பொறுத்து அமையும் .
வருடாந்த செயல்திறன் இலக்கு ஆனது பிரிவு மட்டத்திலான வங்கி இலக்குகள் மற்றும் தனிப்பட்டவர்களையும் அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது.
வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம்
எங்கள் ஊழியர்களின் தேவைகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப வங்கியானது பல்வேறு வெகுமதிகள் மற்றும் அங்கீகார திட்டங்களை கொண்டுளளது. மாறுப்பட்ட கொடுப்பனவு மற்றும் வருடாந்த சம்பள உயர்வுகள் ஆனது செயல்திறனை பொறுத்தும் மேலதிக படிக்கற்களை தாண்டிச் செல்லும் ஊழியர்கள் அங்கீகரித்து பாராட்டப்படுகின்றனர்.
நன்மைமிகு பொதி
DFCC வங்கியானது சிறந்தவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளது. எங்களுக் சேவையாற்றுகின்ற அதேவேளை எங்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைமிகு தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.வெவ்வேறுப்பட்ட தரங்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட சலுகைகளில் பல்வித கவர்ச்சிகரமான நன்மைகளை வழங்குகின்றோம். பிரயாண கொடுப்பனவு மிகவும் கவர்ச்சிகரமான மானியத்துடன் இதர செலவுகள் வீட்டு மற்றும் வாகனக் கடள்கள் என்பனவற்றை எங்களது நன்மைமிகு பொதிகள் உள்ளடக்கியுள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஊழியர்கள் அவர்களது தொழில்முறைசார் வலையமைப்பினை கட்டியெழுப்பிட ஊக்குவி;க்கும் முகமாக ஜிம் மற்றும் சமூக அமைப்புக்களின் அங்கத்துவம் போன்றவற்றையும் சலுகை திட்டங்களாக வங்கி வழங்குவதுடன் தொழில்முறை அமைப்புக்களுக்கான சந்தா கொடுப்பனவுகளை மீள் வழங்குகிறது.
எங்கள் ஊழியர்களின் உயர் கல்வி அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு உதவும் முகமாக பல்வேறுப்பட்ட கவர்ச்சிகரமான கல்விசார் மீள் செலுத்தும் மானியங்கள் மற்றும் கடன்களை பெற முடியும்.
எங்களது ஊழியர்கள் தற்போது சந்தையில் காணப்படும் சில கவர்ச்சிகரமான திட்டங்களுடன் அவர்களால் உருவாக்கப்படும் வியாபாரத்தின் மீது ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதி உடையவர்களாவர்.
பயிற்சி மற்றும் அபிவிருத்தி
DFCC ஆனது தொடர்ச்சியாக எங்களது ஊழியர்களிடம் முதலீடு செய்வதையும் அவர்களது திறன்களை மேம்படுத்துவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. எங்கள் ஊழியர்களின் திறமைகள் விரிவடைவதற்கும் மதிக்கப்படுவதற்கும் நிறைய வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.எங்களிடம் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளக மற்றும் வெளியக விரிவாக்கப்பட்ட eகற்றல் செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக பகுதியளவில் வெளிநாட்டு திறன் மேம்பாட்டு வாய்ப்புக்களும் உள்ளன. ஏனைய அபிவிருத்தி முறைகளான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் ,குறுகிய மற்றும் நீண்டகால பணி சுழற்சி விசேட பணிகள் உள்ளடங்கலாக சவால்களை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புக்களில் முதலீடு செய்யவும் தயாராக இருக்கும் ஊழியர்களுக்கு வேலையினை வளப்படுத்தும் வாய்ப்புக்களும் உள்ளன.
நாம் “Ascension” மற்றும் “Rise” போன்ற இரு திட்டங்களை வழங்குகின்றோம். இது முன்னதாக உயர்மட்ட நிலைகளில் தங்களது உயர் திறன்களை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதற்காகவும் மற்றும் தங்களது செயற்திறன்களை வெளிப்படுத்துவதில் சிரமப்படும் ஊழியர்களுக்கு கைகொடுப்பதற்காகவும் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டது. ஜுனியர் நிலையில் உள்ள ஊழியர்கள் அவர்களது வழக்கமான பணிக்கு அப்பால் வெளியிடங்களில் புதிய பொறுப்பினை ஏற்பதற்கான மீள்திறனளிக்கும் திட்டங்களையும் வழங்குகின்றோம்.ஊழியர்கள் தங்களது தலைமைத்துவ திறன் ,விளக்கமளித்தல் திறன் பொது மேடைகளில் பேசுதல் போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ள தங்களுக்கே உரித்தான டோஸ்மாஸ்டர் கழகத்தினை கொண்டுள்ளது. கழகமானது கோல்டன் கவேல் மற்றும் தரமான கழகம் உள்ளடங்கலாக பல விருதுகளையும் மாவட்டத்திடம் இருந்து பெற்றுள்ளது.