DFCC இல் தொழில் வாய்ப்புகள்
எங்கள் ஆட்சேர்ப்பு நெறிமுறைகள்
எங்கள் வங்கியானது பணியமர்த்தல் நடைமுறைகளில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் உறுதிபூண்டுள்ள, சகலருக்கும் சம வாய்ப்பு வழங்கும் வேலை வழங்குநராகும். எங்கள் வங்கிக்கு ஊழியர்கள் அவர்களது தகுதி, வேலைக்கான தகுதி மற்றும் எங்கள் விழுமியங்களுடன் ஒன்றிசைதல் போன்ற அம்சங்களின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள்.
எங்கள் மத்தியில் காணப்படும் ஒவ்வொரு வித்தியாசமும் எங்கள் பணியிட அனுபவத்தை செழுமைப்படுத்தி சிறந்த சொல்லலை உருவாக்குகின்றது என்று நாங்கள் நம்புவதால், பன்முகத்தன்மையை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் தொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்ற தகுதிகளை உடைய அனைவரும் விண்ணப்பிக்குமாறு நாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெற்றிடமாகக் காணப்படும் பணிநிலைகள்
பாடசாலை படிப்பை முடித்தவர்கள் வங்கி பயிற்சி உதவியாளர்களாக வங்கியில் சேருவதற்கான வாய்ப்புகள்
பின்வரும் குறைந்தபட்ச தகுதிகளை நீங்கள் கொண்டுள்ளவராக இருந்தால், https://dfccjobportal.peopleshr.com இல் காணப்படும் இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வங்கி பயிற்சி உதவியாளர் நிலைக்கு சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க நீங்கள் தகுதி பெறுவீர்கள். வெற்றிடமாகக் காணப்படும் பதவிநிலைக்கு அமைய நீங்கள் எமது தேர்வுச் செயல்பாட்டில் பங்கேற்க அழைக்கப்படுவீர்கள்.
நீங்கள்:
- 23 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்
- நல்ல நபர்களுக்கிடையே தொடர்பாடல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்
- சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதற்கான திறமை வேண்டும்
- கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் Credit தர சித்திகளுடன் க.பொ.த O/L சித்தியடைந்து, மேலும் க.பொ.த A/L இல் 3 சித்திகளை (பொது ஆங்கிலம் தவிர்த்து) பெற்றிருத்தல் வேண்டும்
கவர்ச்சிகரமான ஊதியம் உள்ளிட்ட ஏனைய நன்மைகள், மற்றும் DFCC உடன் வங்கித் தொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்ற விதமாக விரிவான பயிற்சிகள் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்கும்.
பாடசாலை கல்வியை முடித்தவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள் (6 மாதங்கள்)
எமது வங்கியில் தொழில்துறை பாதையை ஆராயவும் நன்மதிப்புமிக்க வேலை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும் விரும்பும் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு நாங்கள் வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம். உங்களுக்கு வாங்கித்துறையின் வல்லுநர்களால் வகுப்பறை சார் மற்றும் வேலை அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுவதோடு கவர்ச்சிகரமான மாதாந்திர கொடுப்பனவும் வழங்கப்படும்.
O/Ls மற்றும் A/Lகளை வெற்றிகரமாக முடித்தவர்கள் வங்கியில் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பள்ளியை விட்டு வெளியேறியவர் இன்டர்ன்ஷிப் வாய்ப்பில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், DFCC HR போர்டல், https://dfccjobportal.peopleshr.com மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்கவும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளின் அடிப்படையில், உங்களுக்கு DFCC வங்கியில் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும்.
பட்டதாரிகளுக்கு வங்கியில் சேர வாய்ப்புகள் இளநிலை பயிற்சி நிர்வாகிகள்
புதிய பட்டதாரிகள் வங்கியில் இளநிலை பயிற்சி நிர்வாகிகளாக சேரலாம். பின்வரும் குறைந்தபட்ச தகுதிகளை நீங்கள் கொண்டுள்ளவராக இருந்தால், https://dfccjobportal.peopleshr.com இல் காணப்படும் இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து இளநிலை பயிற்சி நிர்வாகி நிலைக்கு சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க நீங்கள் தகுதி பெறுவீர்கள். வெற்றிடமாகக் காணப்படும் பதவிநிலைக்கு அமைய நீங்கள் எமது தேர்வுச் செயல்பாட்டில் பங்கேற்க அழைக்கப்படுவீர்கள்.
நீங்கள்:
- தகுந்த பட்டம் (Class உடன்) அல்லது வங்கியால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முழு தொழில்முறை தகுதி
- நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு பற்றி அறிந்திருக்க வேண்டும்
- சிறந்த தகவல்தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பாடல் திறன்களைக் கொண்டிருத்தல் வேண்டும்
- நல்ல குழுப் பணியாளராக இருத்தல் வேண்டும்
- சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான திறமை கொண்டிருத்தல் வேண்டும்
கவர்ச்சிகரமான ஊதியம் உள்ளிட்ட ஏனைய நன்மைகள், மற்றும் DFCC உடன் வங்கித் தொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்ற விதமாக விரிவான பயிற்சிகள் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்கும்.
புதிய பட்டதாரிகளுக்கு பயிற்சிப்பணி வாய்ப்புகள் / பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களும் பட்டதாரி பயிற்சி பெறுபவர்களாக (6 மாதங்கள்)
கடன் மதிப்பீடுகள்/உறவு மேலாண்மை/கடன் மறுசீரமைப்பு போன்ற அம்சங்களைப் பற்ற அவர்களுக்கு தெளிவோட்டுவதன் மூலம் புதிய பட்டதாரிகள்/இளங்கலைப் பட்டதாரிகளுக்கு வங்கியில் தொழிலைப் பெற நாங்கள் உதவுகிறோம்.
பட்டதாரி பயிற்சிப்பணி வாய்ப்பை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால் https://dfccjobportal.peopleshr.com இல் காணப்படும் இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி சமர்ப்பியுங்கள். வெற்றிடமாகக் காணப்படும் பதவிநிலைக்கு அமைய நீங்கள் எமது தேர்வுச் செயல்பாட்டில் பங்கேற்க அழைக்கப்படுவீர்கள்.