
நிர்வாக சபை
Established in 1955 with a mandate to spearhead development financing in a newly independent nation, DFCC Bank PLC has over the past 60 years grown, evolved and diversified to meet the changing needs and aspirations of an emerging economy

திரு. ஜே. துரைரட்னம் - தலைவர்
2018 ஓகஸ்ட்டில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபை அங்கத்தவராகவும் 2019 ஜூலையில் அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
திரு.துரைரட்னம் இலங்கை கொமர்ஷல் வங்கி பி.எல்.சி.யில் 36 ஆண்டுகள் சேவையாற்றியதன் மூலம் வங்கிச் சேவைகளில் விரிவான அனுபவத்தைப் பெற்றுள்ளார். இலங்கை கொமர்ஷல் வங்கியில் 2012 ஏப்பிரல் முதல் 2014 ஜூலை வரை பணிப்பாளராகவும் அதன் பின்னர் 2018 ஜூலை 26ஆம் திகதி ஓய்வுபெறும் வரை முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அவர் கடமையாற்றினார்.
திரு.துரைரட்னம் இலங்கை கொமர்ஷல் வங்கியில் இருந்தபோது பிரதம செயற்பாட்டு அதிகாரி, பிரதிப் பொது முகாமையாளர் – சர்வதேசம், உதவிப் பொது முகாமையாளர் – சர்வதேசம் மற்றும் இறக்குமதிகள் பிரதானி போன்ற வேறு பல சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளையும் வகித்துள்ளார். அவர் பெற்றுள்ள அனுபவம் சர்வதேச வர்த்தகம் கடல்கடந்த வங்கிச் சேவை கொடுகடன் மற்றும் வங்கிச் செயற்பாடுகளின் சகல துறைகளையும் உள்ளடக்கும். கொமர்ஷல் டிவலப்மன்ட் கம்பனி பி.எல்.சி.யின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ள அவர் லங்கா ஃபினான்ஸ் சேர்விசஸ் பியிரு லிமிட்டட்டின் சபையில் ஒரு பணிப்பாளராகவும் அங்கத்துவம் வகித்துள்ளார்.
திரு.துரைரட்னம் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானமாணி பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து உயர்நிலை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

திரு. N.H.T.I. பெரேரா - பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி
ஜுலை 2019இல் DFCC வங்கி பிஎல்சி நிர்வாகசபைக்கு நியமிக்கப்பட்டார்.
திரு.திமால் பெரேரா 2022 ஜனவரி 01 முதல் DFCC வங்கி பிஎல்சி இன் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றினார். ஹற்றன் நஷனல்வங்கி,Barclays வங்கிபிஎல்சி,கொமர்ஷல் வங்கி கட்டார், HSBC குழுமம் இலங்கை & வெளிநாட்டு போன்ற வங்கிக்கிளைகளில் சிரேஷ்ட பதவிகளை வகித்ததன் ஊடாக பரந்துப்பட்ட அனுபவங்களை கொண்டுள்ளார்.
இவர் Acuity Partners Ltd, Synapsys Ltd., and Acuity Stock Brokers (Pvt) Ltd ஆகியவற்றின் ஓர்பணிப்பாளரும் ஆவார்.HNB Assurance Plc, HNB General Insurance Ltd and HNB Grameen Finance Ltd ஆகியவற்றின் ஓர்சபை அங்கத்தவராகவும்சேவையாற்றிஉள்ளார்.
திரு.பெரேரா அவர்கள் இலங்கை பட்டயக்கணக்காளர்சபையின் அங்கத்தவராக உள்ளதுடன் அத்தோடு பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின்முகாமைத்துவக்கணக்கியல் (CIMA) –UK கல்வியினை நிறைவு செய்துள்ளார்.

திருமதி வீ.ஜே. சேனாரத்ன - பணிப்பாளர்
2015 ஜூலையில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திருமதி சேனாரத்ன தற்சமயம் இலங்கை டிஸ்ட்டிலாPஸ் பி.எல்.சி.யின் பிரதம சட்ட அதிகாரி மற்றும் கம்பனிச் செயலாளர் பெரிசில் (பிறைவேட்) லிமிட்டட்டின் கம்பனிச் செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார். பரடைஸ் ரிஸோட் பாசிக்குடா (பிறைவேட்) லிமிட்டட், அமெதிஸ்ட் லெஷர் லிமிட்டட் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் மெல்ஸ்டாகோர்ப் லிமிட்டட் இலங்கை டிஸ்ட்டிலரிஸ் கம்பனி பி.எல்.சி. ஆகியவற்றின் மாற்றுப் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றுகின்றார்.
37 ஆண்டுகால தொழில்சார் அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் வழக்காடுதல், வணிகச் சட்டம், சொத்துக் கைமாற்ற ஆவணங்களின் தயாரிப்பு, கம்பனிச் செயலக நடைமுறைகள் ஆகியவற்றில் நன்கு பரிச்சயமானவர். 2003 மே முதல் 2009 வரை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் கம்பனிச் செயலாளராக இருந்த அவர் இலங்கை மத்திய வங்கியின் சட்ட அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டத்தரணி மற்றும் பிரசித்த நொத்தாரிஸ் சத்தியப் பிரமாண ஆணையாளர் ஆகிய தகைமைகளைக் கொண்டுள்ள திருமதி சேனாரத்ன 1977 ஓகஸ்ட் 25ஆம் திகதி சட்டத்தரணியாகச் செயலாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டார். அவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வழக்கறிஞரும் ஆவார்.

திருமதி எல்.கே.ஏ.எச். பெர்னாண்டோ - பணிப்பாளர்
2017 நவம்பரில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திருமதி பெர்னாண்டோ பட்டயக் கணக்காளர்களின் நிறுவனமான கிரான்ட் தோர்ன்டன் இன்டர்நஷனலின் இலங்கைப் பிரதிநிதியாள கிரெஸ்டன் எம்ன்ஸ் அன்ட் கம்பனியில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். கணக்கியல் நிதி மற்றும் முகாமைத்துவத் துறைகளல் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.
தற்சமயம் அவர் ஆர் ஐ எல் புரப்பட்டி பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணிபுரிகின்றார். ரெடிவெயர் இன்டஸ்ட்ரிஸ் லிமிட்டட் ஃபூட்புஸ் (பிறைவேட்) லிமிட்டட் ஆர் ஐ எல் ட்ரஸ்ட் லிமிட்டட் யூனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பி.எல்.சி. டிவிஎஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டட் யூனிமோ என்டர்பிறைசஸ் லிமிட்டட் ஓரியன்ற் மோட்டர் கம்பனி லிமிட்டட் யு எம் எல் ஹெவி இக்விப்மன்ற் லிமிட்டட் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் அவர் பதவி வகிக்கின்றார். யூனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பி.எல்.சி.யின் கணக்காய்வுக் குழுவின் தலைவராகவும் சேவையாற்றுகின்றார்.
திருமதி பெர்னாண்டோ இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின் பேராளரும் இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிலையத்தின் அங்கத்தவரும் ஆவார்.

திரு. என்.கே.ஜி.கே. நெம்மாவத்த - பணிப்பாளர்
2018 டிசெம்பரில் DFCC வங்கி பி.எல்.சி.யின் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
திரு.என்.கே.ஜி.கே.நெம்மாவத்த தற்சமயம் சுற்றுலா வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சில் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) என்ற பதவியை வகிக்கின்றார்.
அவர் இதற்கு முன்னர் அரசாங்கத் துறையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். நிதி அமைச்சின் பொதுத் தொழில் முயற்சிகள் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் சுற்றாடல் துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் என்பன அவற்றுள் அடங்கும். இலங்கை சமுர்த்தி அதிகார சபை இலங்கை சுங்கத் திணைக்களம் வர்த்தக தீர்வை மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
திரு.நெம்மாவத்த கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகத் துறை இளமாணி (சிறப்பு) பட்டத்தைப் பெற்றவராவார். கொழும்புப் பல்களைக்கழகத்திலிருந்து அதிகாரப் பரவலாக்கம் மற்றும் உள்ளுராட்சி ஆய்வூகள் தொடர்பான பட்டபின்படிப்பு டிப்ளோமாவையும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்திலிருந்து முகாமைத்துவத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் இலங்கைப் பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின் உரிமச் சான்றாளரும் ஆவார்.

திருமதி. எச்.எம்.என்.எஸ். குணவர்த்தன - பணிப்பாளர்
DFCC வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக 2020 ஜூலையில் நியமிக்கப்பட்டார்.
திருமதி குணவர்த்தன அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் தற்போது Capital City Law வின் கூட்டு நிர்வாகப் பங்காளராகவும், CHEC Port City Colombo இன் சிரேஷ்ட சட்ட ஆலோசகராகவும் மற்றும் International Distilleries இன் குழும சட்ட ஆலோசகராகவும் உள்ளார். அவர் இலங்கையின் நிறுவன சட்ட ஆலோசனை ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் உள்ளார்.
திருமதி குணவர்த்தன Julius & Creasy இல் தனது தொழிலை ஆரம்பித்து, இலங்கை மத்திய வங்கியின் சட்டப் பிரிவில் இணைந்து கொண்டார். அவர் நிதிக் கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகராகவும், நிதி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராகவும் (சட்டம்) மற்றும் பொதுத் திறைசேரியின் சட்ட விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் உள்ளிட்ட பல சிரேஷ்ட அரச சேவை பதவிகளை வகித்துள்ளார். செயற்திட்ட பணிப்பாளராக, அவர் நிதி சீர்திருத்த செயற்திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி/நிதி அமைச்சின் நிதி முகாமைத்துவ சீர்திருத்த செயற்திட்டம் மற்றும் உலக வங்கி/நீதி அமைச்சின் சட்ட மற்றும் நீதி சீர்திருத்த செயற்திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். HIID/ஹாவர்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா), Amsterdam Institute of Finance, LKY School of Public Policy (சிங்கப்பூர்), பொதுநலவாய நாடுகள் செயலகம் (லண்டன்) மற்றும் உலக வங்கி (வாஷிங்டன்) உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அடங்கலாக, விரிவான வெளிநாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். அவர் முன்பு Renuka City Hotels PLC இன் பணிப்பாளராகவும், DFCC வங்கி பீ.எல்.சீ மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் அரச நியமனத்தின் கீழான பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திருமதி குணவர்தன ஐக்கிய இராச்சியத்தில் வணிகச் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற வழக்கறிஞராக உள்ளார்.

திரு. எச்.ஏ.ஜே. டி சில்வா விஜயரட்ண - பணிப்பாளர்
DFCC வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக 2020 ஜூலையில் நியமிக்கப்பட்டார்.
திரு டி சில்வா விஜயரட்ண பொது முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம் மற்றும் கணக்காய்வு ஆகிய துறைகளில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், Investcorp வங்கி, பஹ்ரைன், Grindlays Bahrain வங்கி, Ernst & Young, பஹ்ரைன் மற்றும் Ernst & Young, இலங்கை ஆகிய நிறுவனங்கள் அவரது பணி அனுபவத்தில் அடங்கியுள்ளன. மேலும், Sri Lanka Institute of Nanotechnology (Pvt) Limited (SLINTEC) இன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை 5 ஆண்டுகளுக்கும் மேலாக (2013 முதல் 2019 வரை) அவர் வகித்துள்ளார்.
அவர் தற்போது யூனியன் அஷ{ரன்ஸ் பீ.எல்.சீயின் சுயாதீன பணிப்பாளராக உள்ளதுடன், கணக்காய்வு மற்றும் விதிமுறை இணக்கப்பாட்டு சபையின் பணிப்பாளர் சபைத் தலைவராகவும் உள்ளார். அவர் தற்போது MAS Holdings இன் கணக்காய்வுச் சபையின் பணிப்பாளர் சபைத் தலைவராகவும், தரவு பகுப்பாய்வு மற்றும் கணினி அறிவுத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ZONE 24×7 இன் வணிக ஆலோசகராகவும் உள்ளார். Gamini Corea Trust அறக்கட்டளையின் அங்கத்தவராகவும், SLINTEC Endowment Trust Fund நம்பிக்கை நிதியத்தின் அறங்காவலராகவும் உள்ளதுடன், Avastha Financial Advisory Services நிறுவனத்தின் ஸ்தாபகராகவும்/உரிமையாளராகவும் உள்ளார்.
திரு டி சில்வா விஜயரட்ண இலங்கையின் பட்டய கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் இணை அங்கத்தவராகவும், ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கை நிலையத்தின் சக அங்கத்தவராகவும் உள்ளார்.

திரு. என் வசந்த குமார் - பணிப்பாளர்
செப்டம்பர் 2021 இல் DFCC வங்கி PLC வாரியத்திற்கு நியமிக்கப்பட்டார்.
திரு வசந்த குமார், ANZ கிரைண்ட்லேஸ் வங்கியில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து, அதன் பிறகு 18 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வங்கியில் வங்கிச் சேவையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கணக்கிடுகிறார். மக்கள் வங்கியில் தனது சேவைக் காலத்தில், மக்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி/ பொது மேலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அவர் தற்போது செலிங்கோ இன்சூரன்ஸ் பிஎல்சி, செங்கடகல ஃபினான்ஸ் பிஎல்சி, அசெட் டிரஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சேஃப் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் பணிப்பாளராக உள்ளார்.
அவர் இதற்கு முன்னர் பீப்பிள்ஸ் லீசிங் அண்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பிள்ஸ் மெர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, பீப்பிள்ஸ் டிராவல்ஸ் லிமிடெட், லங்கா பைனான்சியல் சர்வீசஸ் பீரோ லிமிடெட் மற்றும் இலங்கையின் கடன் தகவல் பணியகம் ஆகியவற்றின் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் இலங்கை FOREX சங்கம் மற்றும் முதன்மை வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.
திரு வசந்த குமார், இங்கிலாந்து வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

செல்வி. ஆனிலா லக்ஷ்மி தம்பையா - பணிப்பாளர்
2021 ஒக்டோபரில் DFCC வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனிலா லக்ஷ்மி தம்பையா அவர்கள், Keells Hotel Management மற்றும் John Keells Holdings – புதிய வணிக மேம்பாடு மற்றும் குழும முயற்சிகளுக்கான அதிகாரியாக இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அவர் 2008 இல் Hotel Renuka மற்றும் Renuka City Hotel ஆகியவற்றில் பணியாற்ற ஆரம்பித்துள்ளதுடன், தற்போது Renuka Hotels PLC மற்றும் Renuka City Hotels PLC ஆகிய இரண்டிலும் இணை முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
அவர் Cargo Boat Development Co. PLC, Renuka Consultants and Services Ltd, Renuka Properties Ltd, Lancaster Holdings Ltd, Amalgamated Theaters (Pvt) Ltd மற்றும் Portfolio Management Services (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
ஆனிலா லக்ஷ்மி தம்பையா அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் Nottingham பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ ஆய்வுகளில் கலைத்துறையில் இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றுள்ளார். மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் Manchester பல்கலைக்கழகத்தின் Manchester Business School இல் சர்வதேச வணிகம் மற்றும் முகாமைத்துவத்தில் விஞ்ஞான முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

திரு டபிள்யூ ஆர் எச் பெர்னாண்டோ - பணிப்பாளர்
2022 செப்டெம்பரில் DFCC வங்கி பிஎல்சி பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு வெல்லகே ருவான் ஹர்ஷ பெர்னாண்டோ அவர்கள், கணக்காய்வு மற்றும் ஆலோசனை சேவைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள பல நிறுவனங்களுக்கான கணக்காய்வுக் கூட்டாளராகவும், Ernst & Young Sri Lanka இன் பல்வேறு பாரிய வாடிக்கையாளர்களுக்கு சிரேஷ்ட ஆலோசனைக் கூட்டாளராகவும் பணியாற்றியுள்ளார். திரு பெர்னாண்டோ அவர்கள் 2016 ஏப்ரல் முதல் 2021 ஜூனில் ஓய்வு பெறும் வரை Ernst & Young’s (EY) இன் இலங்கைக்கான முகாமைத்துவக் கூட்டாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1998 மற்றும் 2003 க்கு இடையில் பெரும் எண்ணிக்கையிலான அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயப்படுத்தல் நடவடிக்கையின் போது நிதி அமைச்சின் கீழ் பொது நிறுவன பிரிவு ஒப்பந்தத்தின் வணிகமயமாக்கலுக்கும் அவர் பொறுப்பு வகித்திருந்தார்.
திரு பெர்னாண்டோ அவர்கள் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின் சக உறுப்பினராகவும், ஐக்கிய இராச்சியம் பட்டய நிறுவன முகாமைத்துவ கணக்காளர்கள் நிலையத்தின் (CIMA) சக உறுப்பினராகவும் உள்ளார். அவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளதுடன், ஐக்கிய இராச்சியம் சான்றளிக்கப்பட்ட பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் (ACCA) இன் உறுப்பினராகவும் உள்ளார்.

திரு டபிள்யூ டி பட்டகொட - பணிப்பாளர்
2022 செப்டெம்பரில் DFCC வங்கி பிஎல்சி பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு வசந்த தியகஹா பட்டகொட அவர்கள் 2014 ஆம் ஆண்டு LOLC குழுமத்தில் இணைந்துகொண்டார். தற்போது அவர் குழுமத்தின் சட்டத்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார். சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பணியகத்துடன் இணைந்து தனது தொழிற்பயிற்சியை மேற்கொண்டு பின்னர் தனியார் சட்டத்தரணியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் சட்டத்தரணியாக இரண்டு தசாப்த கால அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் நிறுவன மற்றும் குற்றவியல் சட்டங்களை நன்கு அறிந்தவர்.
அவர் 2021 முதல் இன்றுவரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறுவன சட்டத்தரணிகள் சபையின் தலைவராக பணியாற்றி வருகிறார். அவர் LOLC குழுமத்தில் உள்ள பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துணை நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் பணியாற்றி வருகிறார்.
திரு பட்டகொட ஒரு சட்டத்தரணி. அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (LLB) மற்றும் சட்ட முதுகலை (LLM) பட்டம் பெற்றவர். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் தனது கலாநிதி (Ph.D.) கற்கையை மேற்கொண்டு வருகிறார்.