DFCC வங்கியின் வரலாறு;
A Pioneer, Pathfinder and Trailblazer
DFCC வங்கி தற்சமயம் ஒரு முழுமையான வர்த்தக வங்கியாக இருந்தபோதிலும் 1955ஆம் ஆண்டு பாராளுமன்ற அதிகாரச் சட்டம் ஒன்றின் கீழ் இலங்கையின் முன்னோடி அபிவிருத்தி வங்கி என்ற வகையிலேயே கூட்டிணைக்கப்பட்டது. DFCC ஐ ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணை 1952ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உலக வங்கித் தூதுக்குழுவினாலேயே முன்மொழியப்பட்டது. DFCC கூட்டிணைக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட தனித்துவமான கட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தினதும் உலக வங்கியினதும் கூட்டு முயற்சியினால் வடிவமைக்கப்பட்டதாகும். இதற்கமைய ஆசியாவின் முதலாவது அபிவிருத்தி வங்கிகளுள் ஒன்றாக DFCC ஏற்படுத்தப்பட்டது.
அரசாங்கத்திற்கு இந்த நிறுவனத்தில் நேரடிப் பங்குரிமை எதுவுமில்லை. எனினும் நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஆரம்ப மூலதனத்தைப் போல இருமடங்கு தொகையை வட்டியற்ற இரண்டு நீண்டகாலக் கடன்களாக அரசாங்கம் நிறுவனத்திற்கு வழங்கியது.
தனியார் துறைப் பங்குதாரர்களுக்கும் அத்தகைய பங்குதாரர்களினால் தெரிவு செய்யப்படும் பணிப்பாளர்கள் சபை ஒன்றிற்கும் அதிகாரச் சட்டம் இடமளித்தது. அரசாங்கம் மூலதனத்தில் எவ்வித பங்குரிமையையும் வைத்திருக்காதபோதிலும் பணிப்பாளர் ஒருவரை நியமிக்கும் உரிமையைத் தன்னுடன் வைத்துக்கொண்டது.
அடுத்த வருடத்தில் அதாவது 1956ஆம் ஆண்டில் DFCC வங்கி கொழும்புப் பங்குப் பரிவத்தனையின் முன்னோடியெனக் கூறப்படும் கொழும்புத் தரகர்கள் சங்கத்தில் பட்டியலிடப்பட்ட முதலாவது வங்கியானது. (1970ஆம் ஆண்டிலேயே அதாவது 14 ஆண்டுகள் கழித்தே இன்னுமொரு வங்கி பட்டியலிடப்பட்டது). அன்றிலிருந்து பட்டியலிடப்பட்ட கம்பனியாக விளங்கும் DFCC வங்கியின் பங்குகள் தனிப்பட்ட மற்றும் நிறுவன முதலீட்டாளர்களினால் வைத்திருக்கப்படுகின்றன.
2014ஆம் ஆண்டின் 39ஆம் இலக்க DFCC வங்கி (நீக்கம் மற்றும் விளைவு ஏற்பாடுகள்) அதிகாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து DFCC வங்கி 2015 ஜனவரி 6ஆம் திகதி 2007ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தின் கீழ் DFCC வங்கி பி.எல்.சி. என்ற பெயருடன் கூட்டிணைக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 ஒக்டோபர் 1ஆம் திகதி DFCC வங்கி பி.எல்.சி.யூம் அதற்கு முற்றிலும் சொந்தமான உப நிறுவனமாகிய DFCC வர்தன வங்கியும் கம்பனிகள் அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒருங்கிணைக்கப்பட்டு DFCC வங்கி பி.எல்.சி. என்ற பெயரில் ஒரே நிறுவனமாக இயங்கத் தொடங்கின. அதே நாளில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையிடமிருந்து வர்த்தக வங்கிச் சேவைக்கான உரிமத்தைப் பெற்றுக்கொண்ட வங்கி இப்பொழுது உரிமம் பெற்ற ஒரு வர்த்தக வங்கியாகச் செயற்படுகின்றது.
DFCC முதலாவது அபிவிருத்தி வங்கியாகச் செயற்பட்ட காலத்தில் இலங்கையின் முன்னோடித் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி வழங்குநராக விளங்கியதுடன் தொழில் முயற்சியாளர்கள் கட்டியெழுப்பிய தொழில் முயற்சிகளுக்கு குறிப்பாக அவற்றின் இடர் நிறைந்த ஆரம்பக் கட்டங்களில் பெறுமதியைச் சேர்த்தது. இன்று வியாபார அரங்கில் வெற்றிகரமாகச் செயற்படும் பல நிறுவனங்கள் அவற்றின் ஆரம்பகால நிதியுதவியை DFCC வங்கியிலிருந்தே பெற்றுக்கொண்டன.
தற்சமயம் எமது சேவைத் திட்டங்களுள் சுமார் 45 சதவீதமானவை அபிவிருத்திக் கடன்களாகும். நாம் எமது வர்த்தக வங்கிச் சேவை வியாபாரத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில் அத்தகைய கடனுதவிகள் பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பைச் செய்கின்றன.
கழிவுப் பொருள்களிலிருந்து சக்தி உருவாக்கம் மற்றும் நீரியல் காற்று சூரிய மின்சக்தி வேலைத்திட்டங்கள் போன்ற “பசுமை” அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஏனைய பாரிய புதிய வேலைத்திட்டங்களுக்கும் DFCC வங்கியே இப்போதும் விரும்பி நாடப்படும் கடன் வழங்குநராகச் செயற்படுகின்றது. ஆறு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தின் பக்கபலத்துடன் செயற்படும் எமது வங்கியின் வேலைத்திட்டக் கடன் வழங்கும் அலுவலர்கள் அணியின் நிபுணத்துவத்திற்கு இத் தொழிற்றுறையில் நிகரே கிடையாது. சிறந்த தொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்கும் எண்ணம் கொண்ட எவரும் தனது எண்ணத்தை நிறைவேற்றுவதற்கான நிதி வசதியைப் பெறுவதற்கு முதலில் நாடும் வங்கியாக DFCC வங்கியே இப்போதும் விளங்குகின்றது.
DFCC வங்கியிலுள்ள நாம் மாறிவரும் சந்தைத் தேவைகளை ஈடுசெய்வதற்குத் தொடர்ச்சியான வளர்ச்சியும் புத்தாக்கமும் அவசியமென நம்புகின்றோம். குறுகியதோர் எல்லைக்குள் செயற்படும் விசேடத்துவமான வங்கி என்ற நிலையிலிருந்த எமது வங்கி கடந்த 60 ஆண்டுகளில் தருணத்திற்கேற்ற மற்றும் மதிநுட்பமான முக்கிய சுவீகரிப்புகள் ஒருங்கிணைப்புகள் மற்றும் பங்காளித்துவங்களின் மூலம் பாரிய முறையில் விரிவடைந்து ஒரு மாபெரும் நிதிச் சேவைகள் குழுமமாக மாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் “ஓர் ஒப்பேறக்கூடிய நிதி நிறுவனமாக மாத்திரமன்றி மாறிவரும் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழலில் பல்தொகுதித் திட்டங்களைக் கொண்ட முனைப்பானதொரு நிதி நிறுவனமாகத் தன்னை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டுள்ள ஒரு சிறு தொகை அபிவிருத்தி நிதி நிறுவனங்களுள் ஒன்றாக DFCC வங்கி விளங்குகின்றது” என்ற அங்கீகாரத்தை உலக வங்கி எமக்கு வழங்கியுள்ளது.
DFCC வங்கி பி.எல்.சி. இன்று அபிவிருத்தி மற்றும் வணிக வங்கியியல் தொடர்பில் விரிவான சேவைகளையும் பரந்த அளவிலான வங்கியியல் தீர்வுகளையும் வழங்குகின்றது. வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற பெறுமதி மற்றும் வசதி ஆகிய நன்மைகளை வழங்கும் டிஜிட்டல் முறையிலான வசதிகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதிலும் DFCC வங்கி முன்னணி வகிக்கின்றது.
அத்தகைய வசதிகளுள் DFCC வேர்ச்சுவல் வொலட் ஒன்றாகும். வங்கிச் சேவைகள் துறையில் இது மிகவும் புதுமையான ஒரு டிஜிட்டல் வசதியாகும். தனிப்பட்டவர்களும் வியாபார நிறுவனங்களும் பணத்தைப் பயன்படுத்தாத கொடுக்கல் வாங்கல்களில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த உதவும். லங்கா மணி ட்ரான்ஸ்பர் இன்னுமொரு வசதியாகும். DFCC வங்கியில் பேணப்படும் கணக்குகளுக்கு அல்லது ஏதேனும் டுஆவூ நிதிப் பங்காளி நிறுவனத்திற்கு உடனடிப் பண அனுப்பீடுகளைச் செய்ய இந்த அதிநவீன அனுப்பீட்டு முறை இடமளிக்கும். Pயலறுயஎந மற்றும் நுஆஏ தொழில்நுட்பம் கொண்ட கடன் அட்டைகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இத் தொழில்நுட்பத்தைத் தனது சகல வகையான கடன் அட்டைகளுக்கும் வழங்கும் முதலாவது வங்கி DFCC வங்கியே. கடன் அட்டைகளை “ஸ்வைப்” செய்யும் ஒவ்வொரு தடவையும் 1% கேஷ் பெக் வழங்குவதையும் DFCC வங்கியே முதலாவதாக ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கியானது அதன் கிளைகள் மற்றும் மாற்று ஊடகங்கள் மூலம் நாடெங்கிலும் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றது. தற்சமயம் அதன் வலையமைப்பில் 100க்கு மேற்பட்ட கிளைகளும் சேவை ஸ்தானங்களும் அடங்கியுள்ளன. அது மாத்திரமன்றி வங்கியானது டுயமெயீயல பொது யூவூஆ அமைப்பில் இணைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் நாடெங்கிலும் 4000 க்கு மேற்பட்ட ATM களில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்துகொள்ளவும் இணைக்கப்பட்ட வங்கிகள் ஊடாக எவ்வித செலவுமின்றி பண மீளப்பெறுதல் மீதி விசாரணை போன்ற அலுவல்களைச் செய்துகொள்ளவும் முடியும்.
வழமையான வங்கிச் சேவைகளைத் தவிர முதலீட்டு வங்கிச் சேவை செல்வ முகாமைத்துவம் தகவல் தொழில்நுட்பம் கைத்தொழில் பேட்டை முகாமைத்துவம் ஆலோசனை போன்ற சேவைகளையும் DFCC குழுமம் அதன் உப நிறுவனங்களான DFCC கொன்சல்டிங் லங்கா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ் சினப்சிஸ் என்பவற்றின் ஊடாகவும் கூட்டு முயற்சியான அக்யூட்டி பாட்டனர்ஸ் ஊடாகவும் வாடிக்கிகையாளர்களுக்கு வழங்குகின்றது. அக்யூட்டி பாட்டனர்ஸ் என்பது நிறுவன நிதி பங்குத் தரகு நிலையான வருமான வர்த்தகம் வெஞ்சர் வர்த்தகம் மற்றும் சொத்து முகாமைத்துவம் உள்ளடங்கிய நிதிச் சேவைகளை வழங்கும் சக்தி வாய்ந்த அமைப்பின் தாய்நிறுவனமாகும்.
ஆறு தசாப்த காலத்திற்கும் மேலான புகழ்பெற்ற வரலாற்றின் அடிப்படையில் தன்னை விரிவுபடுத்தும் DFCC வங்கி இந்த நாட்டு மக்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்பத் தன்னைத் தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொண்டு வருகின்றது. 2020ஆம் ஆண்டிற்கான எமது இலட்சிய நோக்குஇ மற்றும் பல்லாண்டு காலமாக நாம் வளர்த்துக்கொண்ட நிபுணத்துவத் திறன் ஆகியவற்றின் பக்கபலத்துடன் வங்கியையும் இத் தொழிற்றுறையையும் தற்போதய டிஜிட்டல் யுகத்தில் ஒரு புதிய மட்டத்திற்குக் கொண்டுசெல்ல நாம் ஆவலாயிருக்கின்றோம்.