
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC Pinnacle தங்குதடையற்ற நிதியியல் அனுபவத்துடன் முதன்மை வங்கிச்சேவைக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ளது
May 3, 2021

இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான DFCC வங்கி, நாட்டில் வளர்ச்சி கண்டு வருகின்ற வசதி படைத்த மக்களுக்கு தங்குதடையற்ற நிதியியல் சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய நிறுவனமாக, தனது முதன்மை வங்கிச்சேவை முன்மொழிவான DFCC Pinnacle மூலம் தனது ஸ்தானத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்தியுள்ளது. வேகமாக மாற்றம் கண்டு வருகின்ற தற்போதைய வணிக உலகில், அனைவரும் அவர்கள் முகங்கொடுக்கின்ற நேர வரையறை முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் தங்கள் முதலீடுகளையும் வருமானத்தையும் திறமையாக நிர்வகிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். இதற்கு நிபுணத்துவ ஆலோசனை, பிரத்தியேகமயமாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகாமைத்துவம் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதுடன், அவை DFCC Pinnacle மூலமாக வழங்கப்படும் பெறுமதி சார்ந்த பிரதான முன்மொழிவுகளாகும்.
உயர்மட்ட தனிப்பட்ட வங்கிச்சேவை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு பிரத்தியேக வங்கியாக கட்டமைக்கப்பட்டுள்ள DFCC Pinnacle, முதன்மை நிதியியல் தீர்வுகள் வழங்குநர் என்ற ஸ்தானத்தை விரைவாகச் சம்பாதித்துள்ளது. இலக்கம் 87, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 07 என்ற சௌகரியமான முகவரியில் அமைந்துள்ள DFCC Pinnacle சேவை மையம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இட வசதியுடன் அதிநவீன வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர் சந்திப்பு அறைகள், பாதுகாப்பான வைப்பு பெட்டகங்கள் (இருக்கும் வசதிகளுக்கு அடிப்படையில்), கூட்ட அறைகள், சைக்கிளில் பிரயாணிப்பதற்கான தனிவழி, உடைமாற்றும் அறைகள், வரவேற்பறை மற்றும் தேவை ஏற்பட்டால் அமர்ந்து பணியை முன்னெடுப்பதற்கான இருக்கை வசதிகள் Pinnacle வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாகக் கிடைக்கப்பெறுகின்றன.
DFCC Pinnacle தற்போது DFCC வங்கியின் துணைத் தலைவியும், Pinnacle சேவை, கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றுக்கான தலைமை அதிகாரியுமான ஷெரா ஹசன் அவர்களின் தலைமையில் செயற்பட்டு வருகின்றது.
தனிப்பட்ட வங்கிச்சேவையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஷெரா ஹசன் அவர்கள் பிரத்தியேக தனிப்பட்ட வங்கிச் சேவைகளில் ஆழமான அறிவு மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், இது தயாரிப்பு சார்ந்த புத்தாக்கங்கள் மற்றும் தீர்வுகளை முன்னெடுத்துச் செல்ல DFCC Pinnacle உடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
DFCC Pinnacle மற்றும் அதன் சேவை வழங்கல் தொடர்பில் ஷெரா ஹசன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “உயர்ந்த பணி நிலையிலுள்ள உங்களது வேலைப்பளு மற்றும் அதற்கு மத்தியிலும் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய தேவை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை DFCC வங்கி புரிந்து கொண்டுள்ளதுடன், எமது முதன்மை வங்கிச்சேவை என்பது ஒட்டுமொத்தத்தில் சௌகரியத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, DFCC Pinnacle மூலம் வழங்கப்படும் பெறுமதி சேர் முன்மொழிவுகள் மற்றும் பிரத்தியேக இடம், முதன்மை வங்கிச்சேவையின் முக்கிய மதிப்புகளை உள்ளிணைக்கிறது. எங்கள் முக்கிய அம்சங்களில் ஒன்று. எங்கள் வாடிக்கையாளர் சேவை முகாமையாளர்கள். அவர்கள் வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் பிரத்தியேகமயமாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதற்கும் தேவையான பயிற்சியையும் அறிவையும் பெற்றுள்ளார்கள். தேவைப்பட்டால் பதில் வாடிக்கையாளர் சேவை முகாமையாளர்களுடன் நாங்கள் தொடர்ச்சியான ஒட்டுமொத்த நிதி மற்றும் முதலீடுகளை நிர்வகிப்பதுடன், எமது தீர்வுகள் வெறும் வங்கிச்சேவைக்கு அப்பாற்பட்டு, மூலதனச் சந்தைகள், நிதி முதலீட்டு முகாமைத்துவம், அசைவற்ற ஆதனம் மற்றும் வேறு எந்த சட்ட மற்றும் முதலீட்டுத் தேவைகளையும் நிறைவேற்றுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
“DFCC Pinnacle சேவையின் மூலமாக, வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நோக்கங்களை நிறைவேற்றுவது முன்மொழிவுக்கு முக்கிய அடிப்படையாகும். வாடிக்கையாளர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ என எந்த இடத்தில் இருந்தாலும், வழங்கப்படுகின்ற சேவை தொடர்ந்தும் சீரானதாக இருக்கும். வாடிக்கையாளர் ஒரு பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை முகாமையாளருடன் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வசதியைக் கொண்டிருப்பதுடன், 365 நாட்களும் வங்கிச்சேவைத் தேவைகள், ஆலோசனை அணி மற்றும் சட்ட உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக 24 மணி நேரமும் Pinnacle அழைப்பு மையத்திலுள்ள நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அர்ப்பணிப்புமிக்க முகவர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியுடன், தங்களது வணிகச் செயற்பாடுகளை முழுமையான பிரத்தியேகமாக முன்னெடுப்பதற்கு கூட்ட அறை மற்றும் சந்திப்பு அறைகளையும் முற்பதிவு செய்துகொள்ள முடியும். ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக எங்கள் வாடிக்கையாளர்களுடன் மாதாந்த சைக்கிளோட்ட நிகழ்வைக் கொண்டிருப்பதால், எங்கள் வாடிக்கையாளர் சேவையானது வங்கிச்சேவைக்கும் அப்பாற்பட்டது. இது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு தருணமாக அமைவதுடன், வாடிக்கையாளர்கள் தங்கள் சைக்கிள்களில் வருகை தருகிறார்கள், அல்லது எங்கள் சைக்கிள் தரிப்பிடத்திலிருந்து சைக்கிளொன்றைப் பெற்று, நிகழ்வில் பங்குபற்றி, அதன் பின்னர் குளிக்கவும், ஆடைகளை மாற்றுவதற்கும் கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து ஆரோக்கியமான காலை ஆகாரமும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது போன்ற ஒரு முழுமையான அணுகுமுறையையே வாடிக்கையாளர்கள் இன்று தங்கள் நிதி கூட்டாளர்களிடமிருந்து தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இதைத்தான் DFCC வங்கி முழுமையான அர்ப்பணிப்புடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
ஷெரா ஹசன்
DFCC Pinnacle இன் தலைமை அதிகாரியும், கிளை வங்கிச்சேவை,
திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் துணைத்தலைவியும்