
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கிக்கு Google Workspace உடனான ஒருங்கிணைப்பு நற்பலனளித்துள்ளது
May 19, 2021

கடந்த ஆண்டு மே மாதத்தில், Finetech Sri Lanka உடன் கைகோர்த்து Google Workspace ஐ (முன்னர் G Suite என்ற பெயரில் அழைக்கப்பட்டது) நாட்டில் வங்கித்துறையில் முதன்முதலாக செயல்படுத்திய வங்கி என்ற பெருமையை DFCC வங்கி நிலைநாட்டியிருந்தது. இந்த கூட்டாண்மையின் கீழ் பல தன்னியக்கமயமாக்கல் செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என இரு தரப்பினருக்கும் பெறுமதி சேர்த்தல் அடிப்படையில் DFCC வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
வெளிப்புற மாற்றத்தை ஆதரிப்பதற்கும், டிஜிட்டல் வளர்ச்சிமாற்ற சக்கரத்தை பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு உச்ச பட்ச அனுபவத்தை வழங்குவதற்கும் உட்புற டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்தின் முக்கியத்துவத்தை தெளிவாகப் புரிந்து கொண்ட DFCC வங்கி, 2025 ஆம் ஆண்டளவில் மிகுந்த அளவில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் இயங்கும் வங்கியாக மாறுவதற்கான நோக்கத்துடன் இயங்கி வருகின்றது. Google Workspace Enterprise Edition வழங்கியுள்ள கருவிகள் வங்கியில் உள்ள பல செயல்முறைகளின் தன்னியக்கமயமாக்கத்திற்கு உதவியுள்ளதுடன், இது விரைவான வாடிக்கையாளர் சேவைகளுக்கு வழிவகுத்துள்ளதுடன், அதே சமயத்தில் மனிதரீதியான தவறுகளைப் போக்கி, வாடிக்கையாளர் விசுவாசத்தை ஆழமாக்குகிறது.
கட்டணத்தை மீள்தள்ளுபடி செய்யும் அங்கீகார நடைமுறை இதன் கீழான ஒரு நடைமுறைரீதியான பயன்பாடாகும். Google Workspace கருவிகளைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட தன்னியக்கமயமாக்க பணிப்பாய்ச்சல் இந்த பயன்பாட்டை DFCC வங்கியின் பிரத்தியேக சேவை அழைப்பு மையம் மூலம் வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் கட்டண மீள்தள்ளுபடி கோரிக்கைகளை கையாள இடமளித்துள்ளது. முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் நிலவரத்தைக் கண்காணிக்க உதவுதல், சரியான நேரத்தில் சேவையை வழங்குவது செயல்படுத்தப்படுவது ஆகியவற்றின் மூலமாக, ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மகத்தான அளவில் மேம்படுத்துகிறது.
கடனட்டை விநியோக கண்காணிப்புத்தடத்தை ஆரம்பிக்கவும் வங்கி திட்டமிட்டுள்ளது, இது அதனைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளருக்கு விநியோக நிலவரத்தை நிகழ் நேரத்தில் கண்காணிக்க இடமளிக்கிறது. ஒரு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் இது செயல்படுவதால், மோசடி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாமல் இருப்பதை இந்த கண்காணிப்புத்தடம் உறுதி செய்யும். இந்த கண்காணிப்புத்தடத்தின் மூலம், உரிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல், விநியோக செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களை அடையாளம் காணுதல் மற்றும் விநியோக பங்காளர்களுக்கு அறிவித்தல் போன்ற மனிதரீதியான செயல்முறைகள் அகற்றப்படும்.
டிஜிட்டல்மயமாக்கல் DFCC பணியாளர்களுக்கும் பயனளித்துள்ளது, காகித அடிப்படையிலான செயல்முறைகளில் இருந்து தங்குதடையின்றிய திறன்மிக்க டிஜிட்டல் செயல்முறைகளுக்கான மாற்றத்தைத் தழுவிக்கொள்ள வழிவகுத்துள்ளது. வாகன கோரிக்கை நிர்வாக பயன்பாடு அதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. இது பணியாளர்கள் தங்கள் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக வாகனங்களை டிஜிட்டல் முறையில் உரிய அங்கீகார அனுமதிகளுடன் கோரிப் பெற்றுக்கொள்ள இடமளிக்கிறது. பயனர்களுக்கு பெறுமதியைச் சேர்ப்பிப்பதுடன், வெளிப்புற வாடகை வண்டிகளின் பயன்பாட்டைக் குறைக்கும் அதே வேளையில் பயனர் கோரிக்கைகளை தனது வாகனத் தொகுதியில் கிடைக்கக்கூடிய வாகனங்களுடன் ஒத்திசைப்பதன் மூலம் வாகனப் பயன்பாட்டை மேம்படுத்த போக்குவரத்துப் பிரிவுக்கு இடமளித்துள்ளது. Google Maps ஐப் பயன்படுத்தி உட்கட்டமைக்கப்பட்ட ஒன்லைன் வாகன கண்காணிப்புத்தடத்தால் இதன் பாவனை மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பணியாளர்களை பணியில் உள்வாங்கிக் கொள்வது தொடர்பாக, தனிப்பட்ட கோப்பு சரிபார்ப்பு பட்டியல் பயன்பாடானது DFCC வங்கியில் மனிதவளத் துறையின் செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளது. இந்த பயன்பாட்டின் உதவியுடன், புதிய ஊழியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களை மனிதவளத் துறை முறையாகப் பேணிக் கண்காணிக்க முடியும் என்பதால் முழுச் செயல்முறையையும் சீரமைத்துள்ளது.
Google Workspace பயன்பாடு குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “DFCC வங்கியைப் பொறுத்தவரையில், டிஜிட்டல்மயமாக்கல் என்பது விரும்பினால் முன்னெடுக்கவோ அல்லது விரும்பாவிட்டால் கைவிடவோ ஒரு தெரிவல்ல. இது தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு சேர்க்கையுடனும் நடைபெற்று வரும் ஒரு அத்தியாவசிய வளர்ச்சி மாற்றமாகும். Google Workspace இன் கருவிகள் மூலமாக எங்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளின் ஊடாக, எங்கள் வாடிக்கையாளர் சேவையின் நேர்மை மற்றும் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வது எதிர்காலத்தை நோக்கி கட்டுக்கடங்காத அளவில் வளர்ச்சி காணும் என்பதை நாம் உறுதிப்படுத்த முடியும்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.