DFCC Pinnacle கடனட்டைகளுடன் Pearl Bay Water and Leisure Park வில் 30% ஐ சேமியுங்கள்
February 16, 2023
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் ஒன்றான DFCC வங்கி, இலங்கையில் உள்ள சமீபத்திய பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுப் பூங்கா அனுபவமான Pearl Bay உடன் இணைந்து தனது DFCC Pinnacle கடனட்டைகள் மூலம் பிரத்தியேகமான 30% சேமிப்பை வழங்குகிறது. டேவிட் பீரிஸ் குழுமத்தின் ஒரு அங்கமான Pearl Bay, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி முதல் செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் முதல் ஐரோப்பிய ஒன்றிய தரநிலை கொண்ட நீரியல் பூங்கா மற்றும் FIA/CIK – சான்று அங்கீகாரமளிக்கப்பட்ட ஓய்வு மற்றும் தொழில்முறை பொழுதுபோக்கு வண்டியோட்ட (karting) திடலை ஒன்றிணைத்து அதிநவீன மற்றும் மிகவும் அற்புதமான சாகச அனுபவங்களை வழங்குகிறது.
DFCC வங்கி, தனது Pinnacle கடனட்டை மூலம், Pearl Bay Water மற்றும் Leisure Park உடன் இணைந்து இந்த வகையிலான ஊக்குவிப்புச் சலுகையை வழங்கும் முதல் கொடுப்பனவுகள் சேவை வழங்குநராகும். DFCC Pinnacle ஆனது, வங்கியின் மிகவும் சாமர்த்தியமான வாடிக்கையாளர்களுக்காக, பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் உறவு முகாமையாளர்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் முகாமைத்துவம் உட்பட, தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவை முன்மொழிவு மற்றும் அனுபவமாகும். தனிப்பட்ட கவனிப்புடன், DFCC Pinnacle வாடிக்கையாளர்கள் DFCC வங்கியின் Pinnacle சொகுசு வங்கிச்சேவை மையத்திற்கான அணுகல் உட்பட, அனைத்து வசதிகள் மற்றும் சௌகரியங்களுடன், மற்றும் கணக்குகள், அட்டைகள், டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் பிற சேவைகளுக்கான முன்னுரிமை வீதங்கள் மற்றும் கட்டணங்கள் உட்பட பல பிரத்தியேக சேவைகளையும் அனுபவிக்கின்றனர். DFCC Pinnacle கடனட்டைதாரர்கள் வருடாந்த கட்டணங்களுக்கான தள்ளுபடி, எரிபொருள் நிரப்பு கொடுப்பனவுகள், உணவகங்கள், பாவனைக் கட்டண பட்டியல்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளும் செலவுகளுக்கு 3% பண மீளளிப்பு, பெரும்பாலான பரிவர்த்தனைகளில் வட்டியின்றிய தவணைக் கொடுப்பனவுத் திட்ட தெரிவுகள், இலவச விமான நிலைய சொகுசு ஓய்வறை வசதி, வாயிற்காப்பு வரவேற்பு சேவைகள், இலவச பிரயாணக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதிக்கு விசேட திட்டங்கள் ஆகியவற்றிலும் தள்ளுபடியை அனுபவிக்கிறார்கள்.
இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் துணைத் தலைமை அதிகாரியும், Pinnacle சேவைப்பிரிவு, கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “DFCC வங்கியில், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கவேண்டும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதுடன், Pearl Bay உடனான எமது கூட்டாண்மையும் அதற்கு மற்றுமொரு சிறந்த சான்றாகும். நாட்டின் உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். நாம் திட்டமிட்டுள்ள பல்வேறு முயற்சிகளில், இந்த கூட்டு முயற்சியும் ஒன்றாகும். இந்த தனித்துவமான மற்றும் அற்புதமான புதிய ஓய்வு வரப்பிரசாதத்தில் 30% என்ற கணிசமான தொகை சேமிப்பை வழங்க முன்வந்த முதலாவது வங்கி நாம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்வதுடன், எங்கள் அட்டைதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் Pearl Bay வழங்கும் அனைத்தையும் அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம் இந்த விசேட மற்றும் பிரத்தியேக சலுகையைப் பயன்படுத்தி Pearl Bay இல் மிகச் சிறந்த நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு வண்டியோட்டங்கள், விளையாட்டு துப்பாக்கி மற்றும் பல்வேறுபட்ட உணவு மற்றும் பான வகை தெரிவுகளை எமது Pinnacle அட்டைதாரர்கள் அனுபவித்து மகிழ்வதை காண்பதற்கு நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
பண்டாரகமவில் அமைந்துள்ள இந்த பூங்கா ஐரோப்பிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், SplashBay (நீர்ச்சறுக்கு விளையாட்டுக்கள்), SpeedBay (பொழுதுபோக்கு வண்டியோட்டம்) மற்றும் TargetBay (விளையாட்டுத் துப்பாக்கி அனுபவம்) மற்றும் முழு குடும்பத்தினரும் ஈடுபடக்கூடிய ஏற்பாடுகள் போன்ற பல்வேறுபட்ட விசேட “வலயங்களை” கொண்டுள்ளது. DFCC Pinnacle கடனட்டைதாரர்களுக்கான நேரடி 30% தள்ளுபடியானது SplashBay, SpeedBay மற்றும் TargetBay ஆகிய வலயங்களுக்கான நுழைவு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
SplashBay நீர்ப்பூங்கா, பலவிதமான விறுவிறுப்பான நீர்ச் சறுக்கு விளையாட்டுகள் மற்றும் தடாகங்களைக் கொண்டுள்ளதுடன், குடும்பங்கள் சுட்டெரிக்கும் வெயிலில் குளிர்ச்சியடைவதற்கும் வேடிக்கையை அனுபவிப்பதற்கும் ஏற்றது. மறுபுறத்தே, SpeedBay என்பது FIA/CIK – சான்று அங்கீகாரத்தைப் பெற்ற ஓய்வு மற்றும் தொழில்முறை வண்டியோட்டத் திடலாகும். இது விறுவிறுப்பு பிரியர்களுக்கு அற்புதமான மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. TargetBay என்பது ஒரு விளையாட்டுத் துப்பாக்கி சூட்டிடமாகும். இது குறிபார்த்துச் சுடுவதில், உங்கள் இலக்கைச் சோதிக்கவும் உங்கள் திறமைகளை பட்டை தீட்டவும் ஒரு வேடிக்கையான மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.