DFCC வங்கியானது பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, தனது பெண் பணியாளர்களைப் போற்றியுள்ளது
March 28, 2023
DFCC வங்கி தனது பெண் பணியாளர்கள் வங்கியின் வெற்றிக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை வெளிக்காண்பிக்கும் வகையில், அவர்களைப் போற்றிப் பாராட்டும் முகமாக ஒரு வார கால பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்த பிரச்சாரமானது பாலின சமத்துவத்துக்கு முட்டுக்கட்டையாகவுள்ள பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன், பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான வங்கியின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் அமைந்தது. இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன், அனுபவமிக்க வங்கியாளரும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவருமான கிமர்லி பெர்னாண்டோ மற்றும் தொழிலதிபரும், Butter Boutique இன் ஸ்தாபகருமான ருக்ஷி நெத்திகுமார ஆகிய மூன்று முக்கிய பெண் பேச்சாளர்களைக் கொண்ட பெண்கள் தலைமையிலான அமர்வு இந்த பிரச்சாரத்தின் சிறப்பம்சமாகும். பணியிடத்தில் பாலின பன்மைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்த தங்கள் அனுபவங்களையும், ஆழமான அறிவையும் அவர்கள் பகிர்ந்து கொண்டவர். கிளை வலையமைப்பைச் சேர்ந்த பல பெண் ஊழியர்களையும் இந்த அமர்வு அங்கீகரித்துள்ளது. அவர்கள் தங்கள் தொழில் இலக்குகளை அடைய இளம் பெண் ஊழியர்களுக்கு வழிகாட்டி மற்றும் ஊக்கமளிக்க முன்வந்தமைக்கான தன்னார்வ முயற்சிக்காக இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டனர்.
DFCC வங்கியின் முறைசார் நிலைபேறாண்மை மூலோபாயமானது வேலைவாய்ப்பு மற்றும் தலைமைப் பாத்திரங்களில் பெண் பிரதிநிதித்துவத்தில் தொடர்ந்து முன்னேற்றத்தை வலியுறுத்துகிறது. வங்கியின் கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் நிலைபேறாண்மை இலக்குகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அவை மாற்றியமைக்கப்படுகின்றன. DFCC வங்கி ஒரு சம வாய்ப்புடன் பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனமாகும். மேலும் ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு வரை, ஒரு பணியாளரின் பயணத்தின் அனைத்து அம்சங்களும் வெளிப்படையானவை மற்றும் சமத்துவமான முறையில் செயல்படுத்தப்படுகின்றன. பணியிடத்தில் பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும், நிறுவனம் மற்றும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களுக்கு வலுவூட்டுவதிலும் வங்கி தொடர்ந்தும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.