DFCC Leasing மற்றும் Micro Cars ஆகியன கூட்டு குத்தகை ஊக்குவிப்பு மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பை வழங்க கைகோர்ப்பு
May 16, 2023
பொதுமக்களுக்கு கூட்டு குத்தகை ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காக DFCC Leasing மற்றும் Micro Cars ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. DFCC Leasing மற்றும் Micro Cars ஆகியவற்றுக்கு இடையிலான இந்த கூட்டு முயற்சியானது தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் இரு நிறுவனங்களாலும் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பலாபலன்களை அனுபவிப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும். ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் நியாயமான கட்டண வீதங்கள், நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் தெரிவுகள், உயர்தர தயாரிப்புகள் மற்றும் இரு முனைகளிலும் பிரத்தியேகமயப்படுத்தப்பட்ட சேவை போன்ற பல வரப்பிரசாதங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. Micro Cars நிறுவனத்தின் Saic Almaz SUV மற்றும் Proton Saga Sedan ஆகியவை இந்த விசேட கூட்டு குத்தகை ஊக்குவிப்பின் கீழ் வழங்கப்படும் முக்கிய மோட்டார் வாகன வகைகளாகும்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் தனிநபர்களை மையப்படுத்திய வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரான திரு ஆசிரி இத்தமல்கொட அவர்கள், “எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதிமிக்க மற்றும் குத்தகை தெரிவுகளை வழங்க Micro Cars உடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பிரத்தியேகமயப்படுத்தப்பட்ட குத்தகை தீர்வுகளை வழங்குவதில் DFCC Leasing நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இந்த கூட்டு ஊக்குவிப்பு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. எங்கள் இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் Micro Cars உடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
DFCC Leasing, நவீன வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், அதன் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான தயாரிப்புகளுடன் இணைந்து சிறந்த தரமான சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது. DFCC Leasing மற்றும் Micro Cars ஆகியவற்றுக்கு இடையிலான இந்த கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு முன்மொழிவை மேலும் மேம்படுத்தும்.
“இலங்கையின் முதன்மையான வாகன குத்தகை சேவை வழங்குனர்களில் ஒன்றான DFCC Leasing உடன் கைகோர்த்துக்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று Micro Cars இன் குழுமப் பணிப்பாளரான திரு. அசேல லிஹினிகடுவ கூறினார். “சிறந்த மதிப்பு மற்றும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க, நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதால், புதிய ஒருங்கிணைப்புகளை உருவாக்க இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
மோட்டார்வாகன பொறியியல் துறையில் 29 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட Micro Cars, வெளிநாட்டிலிருந்து பகுதியளவில் பாகங்கள் தருவிக்கப்பட்டு முற்றிலும் உள்நாட்டில் பொருத்தப்படுதல் (Semi Knocked Down -SKD) மற்றும் வெளிநாட்டிலிருந்து முழுமையாக பாகங்கள் தருவிக்கப்பட்டு முற்றிலும் உள்நாட்டில் பொருத்தப்படுதல் (Completely Knocked Down -CKD) ஆகியவற்றிலும் முன்னோடியாக உள்ளதுடன், சர்வதேச அளவில் சிறந்த அங்கீகாரம் பெற்றுள்ளது. இது 35,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சிநேகபூர்வமான, நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் வழங்குகிறது. 7 இருக்கைகளைக் கொண்ட SAIC Almaz Premium SUV மற்றும் Full option Proton Saga Sedan அதன் இரண்டு முதன்மை வகைகளாகும். முக்கிய உலகளாவிய வர்த்தகநாமங்களுடன் ஒப்பிடக்கூடிய சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை மிகவும் கட்டுபடியான விலைகளில் வழங்குகின்றன.
DFCC Leasing மற்றும் Micro Cars ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு, தமது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த மதிப்பு மற்றும் சேவையை வழங்குவதற்கான அவர்களின் கூட்டு அர்ப்பணிப்புக்கு சான்றாகும். மேலும் விபரங்களை அறிந்துகொள்ள அல்லது இந்த விசேட குத்தகை ஊக்குவிப்பைப் பெற, வாடிக்கையாளர்கள் DFCC வங்கியின் 24 மணிநேர துரித அழைப்பு இலக்கமான 112350000 மூலமாக, அல்லது info@dfccbank.com அல்லது Micro Cars நிறுவனத்தை 0776 626262 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளலாம். அல்லது DFCC வங்கிக் கிளை அல்லது Micro Cars காட்சியறைக்குச் சென்றும் அறிந்து கொள்ள முடியும். மேலும் தகவல்களை https://www.microcars.lk மூலமாக இணையத்திலும் அறிந்து கொள்ள முடியும்.
DFCC வங்கியின் தனிநபர்களை மையப்படுத்திய வங்கிச்சேவை மற்றும் சிறியஇ நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவரான திரு ஆசிரி இத்தமல்கொட மற்றும் Micro Cars இன் குழுமப் பணிப்பாளரான திரு. அசேல லிஹினிகடுவ ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைமாற்றிக் கொள்ளும் காட்சி.
இடமிருந்து வலமாக – மெஷார பெரேரா, முகாமையாளர் – DFCC வங்கி பிஎல்சி, சாமர பீரிஸ் – சிரேஷ்ட முகாமையாளர் – DFCC வங்கி பிஎல்சி, அசங்க பட்டபடிகே, உதவித் துணைத் தலைவர் – DFCC வங்கி பிஎல்சி, சமத்திரி காரியவசம் – துணைத் தலைவர் (பொது சட்டம்) – DFCC வங்கி பிஎல்சி, ஆசிரி இத்தமல்கொட – சிரேஷ்ட துணைத் தலைவர் – தனிநபர்களை மையப்படுத்திய வங்கிச்சேவை மற்றும் சிறியஇ நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், அசேல லிஹினிகடுவ – குழுப் பணிப்பாளர், Micro Cars, திரு. ஜானக ஹேரத் – நிதித் துறைத் தலைவர், Micro Cars, ஜேக்கப் நிஷாந்தன் – சந்தைப்படுத்தல் துறை தலைவர், Micro Cars, திரு. நிர்ஷாத் நஸ்லி – கிளை முகாமையாளர், Micro Cars.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.