
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி, காலநிலை சார்ந்த நிதி வழங்கல் வாய்ப்புகளைத் திறந்து, Green Climate Fund (GCF) இடமிருந்து அங்கீகாரம் பெற்ற முதல் இலங்கை நிறுவனமாக மாறியுள்ளது
July 19, 2023

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, Green Climate Fund (GCF) இன் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளதுடன், இது இந்த குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினை எட்டிய முதல் இலங்கை நிறுவனமாக அதனை மாற்றியுள்ளது. இந்த சான்று அங்கீகாரம் DFCC வங்கிக்கு GCF இலிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை வரை செலவாகும் செயல் திட்டங்களுக்கான சலுகைக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு இடமளிப்பதுடன், இது இலங்கை முழுவதும் காலநிலை தணிவிப்பு மற்றும் அவற்றை தழுவிக்கொள்ளும் செயல் திட்டங்களுக்கு கடனளிக்க உதவுகிறது. GCF இன் சான்று அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கடுமையான செயல்முறையின் மூலம், DFCC வங்கி, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும், நிலைபேண்தகு எதிர்காலத்தை உருவாக்குவதிலும் முன்னணியில் இருக்கும் வகையில் உலகளவில் 118 மதிப்பிற்குரிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது இணைந்துள்ளது. DFCC வங்கி இப்போது இந்த மதிப்பிற்குரிய குழுவில் இணைந்துள்ளதால், நிலைபேண்தகு முயற்சிகளுக்கான கடன் வழங்கலில் முன்னணியில் இருக்கும் வங்கியின் நற்பெயரை அது வலுப்படுத்துகிறது.
காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கீழ் 194 நாடுகளால் 2010 இல் நிறுவப்பட்ட GCF, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பச்சைவீட்டு வாயு உமிழ்வைத் தணிவிப்பதிலும், காலநிலை நெகிழ்திறனை மேம்படுத்துவதிலும் இந்த கடன் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இன்றுவரை GCF சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள 118 நிறுவனங்கள், பல்வேறு வகையான சர்வதேச, பிராந்திய மற்றும் தேசிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இலங்கையின் நாமத்தை உலக வரைபடத்தில் பதிக்கும் இந்த குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினைப் பற்றி கலந்துரையாடிய DFCC வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. ஜெ. துரைரட்ணம் அவர்கள், “Green Climate Fund ஆல் அங்கீகாரம் பெற்ற முதல் இலங்கை நிறுவனம் என்ற பெருமையை நாங்கள் பெற்றுள்ளோம். இந்தச் சாதனையானது, நிலைபேற்றியல் மீது DFCC வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். இது எமது நிலைபேற்றியல் மூலோபாயம் மற்றும் நெகிழ்திறன் கொண்ட ஒரு உலகினை அனைவருக்கும் உருவாக்கும் எமது குறிக்கோள் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது. இலங்கை எதிர்கொள்ளும் அவசர காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் காலநிலை சார்ந்த கடன் நிதி மற்றும் சிறந்த பலனை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
“காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை இலங்கை எதிர்கொள்கிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு காலநிலை நடவடிக்கைகளை எடுக்க உதவும் உலகின் மிகப்பெரிய காலநிலை சார்ந்த நிதியாக, DFCC வங்கியை இலங்கையில் முன்முதலாக நேரடி அணுகல் வசதியைப் பெறும் நிறுவனமாக வரவேற்பதில் GCF மகிழ்ச்சி அடைகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த உமிழ்வு மற்றும் காலநிலை நெகிழ்திறன் கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பலனளிக்கும் மற்றும் நீண்டகால கூட்டாண்மையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்று Green Climate Fund இன் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஹென்றி கோன்சலஸ் அவர்கள் குறிப்பிட்டார்.
DFCC வங்கியின் GCF சான்று அங்கீகாரமானது, தனிப்பட்ட காலநிலை தழுவல் மற்றும் தணிவிப்பு திட்டங்களுக்கு கடன் நிதியளிப்பதற்கும், நெகிழ்வுத்திறன் கொண்ட வணிகத்தை வளர்ப்பதற்கும் பல்வேறு கலப்பு கடன் நிதி தெரிவுகளைப் பயன்படுத்த இடமளிக்கிறது. இலங்கையின் காலநிலை தொடர்பான கடப்பாடுகள் மற்றும் தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் (Nationally Determined Contributions – NDCs) மற்றும் தேசிய தழுவல் திட்டம் (National Adaptation Plan) ஆகியவற்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இலக்குகளை நிறைவேற்றுவதற்கு வங்கியானது சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் பிற அமைச்சுக்கள், தனியார் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் சர்வதேச நிதி வழங்கல் நிறுவனங்கள், அபிவிருத்தி முகவர் நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் நெருக்கமாக ஒத்துழைக்கும்.
DFCC வங்கியின் GCF சான்று அங்கீகாரத்தின் அடிப்படையானது 2020 இல் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலைபேற்றியல் மூலோபாயமாகும். இந்த மூலோபாயம் அடுத்த தசாப்தத்திற்கான வங்கியின் நிலைபேற்றியல் சார்ந்த இலக்குகளை முன்வைப்பதுடன், நெகிழ்திறன் கொண்ட இலங்கையை மாற்றும் அதன் நோக்கத்திற்குப் பங்களிக்கிறது. 2030 ஆம் ஆண்டளவில், DFCC வங்கியானது, காபன் நடுநிலை வகிக்கும் வங்கியாகவும், இலங்கையில் பசுமை கடன் நிதிக்கான முன்னணி நிறுவனமாகவும் தலைப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கியின் நிலைபேண்தகைமை முயற்சிகள் சுற்றுச்சூழல் நோக்கங்களை மட்டுமல்லாது நிலைபேண்தகு வேலை-குடும்ப வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கியதுடன், தனிப்பட்ட, நிறுவன மற்றும் தேசிய மட்டங்களில் நெகிழ்திறனை வளர்க்கிறது.
DFCC வங்கியானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கடன் நிதியளிப்பதிலும், இலங்கையில் நிலைபேண்தகு மாற்றத்தை ஊக்குவிப்பதிலும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. 1990 களில் இருந்து, வங்கியானது இலங்கையின் முதலாவது தேசிய மின் விநியோகத்திற்காக சிறிய நீர், காற்று, சூரிய மற்றும் கழிவுகளில் இருந்து எரிசக்தியை பிறப்பிக்கும் திட்டங்களுக்கு நிதியளிப்பது உட்பட பல முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும், DFCC வங்கி இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இரண்டு உலக வங்கி மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் கடன் வசதியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்திய போது ஒரு முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தது.
DFCC வங்கியின் GCF சான்று அங்கீகாரம் இலங்கைக்கான நிலைபேண்தகு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. GCF நிதியுதவிக்கான அணுகலைப் பெற்றுள்ள DFCC வங்கி, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், நெகிழ்திறனை வலுப்படுத்துவதற்கும், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது சாதகமான விளைவை ஏற்படுத்துவதற்கும் தலைமை தாங்கத் தயாராக உள்ளது.

DFCC இன் சான்று அங்கீகாரம் 2023 ஜூலை 10 முதல் 13 வரை தென் கொரியாவின் சாங்டோ இன்சியோனில் நடைபெற்ற 36 வது GCF சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.