- ஏனைய கடனட்டை நிலுவைகளை உங்கள் DFCC கடனட்டைக்கு பரிமாற்றி குறைந்த கட்டணங்களுடன் மாதாந்த தவணை முறையில் செலுத்தலாம்.
- ஆகக்குறைந்த நிலுவை பரிமாற்ற தொகை ரூ. 20,000.00 ஆகவும், அதிகபட்ச பரிமாற்ற தொகை DFCC கடனட்டையில் அங்கீகரிக்கப்பட்ட தொகையின் 75% ஆகவும் இருக்கும்.
- கையாளுதல் கட்டணங்கள் உற்பட 6, 12, 24, 36, 48, 60 மாதங்கள் வரையிலான சமமான மாதாந்த தவணையில் திருப்பி செலுத்தலாம்.
- நடைமுறைவழி மற்றும் செயலாக்க கட்டணம் பொருந்தும்:
- கடனட்டையின் தொகையிலிருந்து நிலுவை திட்டத்தின் மொத்த தொகை தடுத்துவைக்கப்படும்.
- மாதாந்த தவணை கொடுப்பனவுகள் கடனட்டை கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன், இத் தொகை மொத்த நிலுவையில் பகுதியையும் கையாளுதல் கட்டணத்தையும் கொண்டது.
- நிலுவை மாற்றுத் திட்டத்தின் மாதாந்த கொடுப்பனவு எதிர்வரும் மாதத்தில் அட்டைதாரருக்கு பட்டியலிடப்படும்.
- கொடுப்பனவு காலவரையறைக்கு முன்பாக நிலுவை மாற்றுத் திட்டத்தினை தீர்த்து வைக்க விரும்பும் பட்சத்தில் நிலுவை மாற்றுத் திட்டத்தின் நிலுவை தொகையில் 4% தீர்வு கட்டணமாக அறவிடப்படும்.
- அட்டை கணக்கில் பற்று வைப்பதன் மூலமாக நிலுவை மாற்றுத் திட்டத் தொகை உரிய வங்கிகளுக்கு CEFTS முறையில் பணம் பரிமாற்றப்படும்.
- நிலுவை மாற்றுத் திட்டத்தினை காலாவதியாகும் திகதிக்கு முன்னதாக தீர்க்க விரும்பும் பட்சத்தில், அதனை கடனட்டையின் உரிமையாளர் எழுத்து மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அச் சந்தர்ப்பத்தில் மீதமுள்ள நிலுவை மாற்றுத் திட்டத்தின் நிலுவை தொகையில் 4% தீர்வு கட்டணமாக அறவிடப்படும்.
- நிலுவை மாற்றுத் திட்ட வசதிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பபடிவத்தை நிரப்பி அதனை info@dfccbank.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, அருகிலுள்ள DFCC வாங்கிக்கிளையில் ஒப்படைக்கலாம்.
காலம் | 06 மாதங்கள் | 12 மாதங்கள் | 24 மாதங்கள் | 36 மாதங்கள் | 48 மாதங்கள் | 60 மாதங்கள் |
---|---|---|---|---|---|---|
மாதாந்த கையாளுகைக் கட்டணம் | 1.00% | 0.83% | 0.75% | 0.63% | 0.75% | 0.68% |
செயற்படுத்தல் கட்டணம் (Rs.) | 1,700.00 | 2,000.00 | 3,000.00 | 3,500.00 | 4,000.00 | 4,500.00 |