DFCC Savings Goal மூலமாக உங்கள் கனவுகளை எளிதாகவும் நெகிழ்வாகவும் நனவாக்கிக் கொள்ளுங்கள்
June 5, 2023
அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கியானது, DFCC Savings Goal இனை அறிமுகப்படுத்துவதை, பெருமிதத்துடன் அறியத்தந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் குறுகிய கால நிதி இலக்குகளை அடைய, திறம்பட சேமிக்க அவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான புதிய திட்டமாகும். இந்த DFCC Savings Goal திட்டங்களை வங்கியின் இணையத்தளத்தினூடாக எளிதாக ஆரம்பித்துக் கொள்ளலாம். DFCC Savings Goal ஆனது ஆண்டுக்கு 7% என்ற கவர்ச்சிகரமான வட்டி வீதத்தை வழங்குவதுடன், இது சந்தையில் கிடைக்கும் சிறந்த வீதங்களில் ஒன்றாகும். மேலும், அபராதக் கட்டணங்கள் எதுவுமின்றி, நீங்கள் தீர்மானிக்கும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி, உங்கள் நிதி இலக்குகளை விரைவாக அடைய உதவுகிறது. DFCC Savings Goal உடன், வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் சேமிப்புப் பயணத்தைத் தனிப்பயனாக்கிக் கொள்ள முடியும். தம்மிடமுள்ள நிதியுடன் நெகிழ்வுத்தன்மையை அனுபவிக்கலாம். அத்துடன், அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் அடைய, கவர்ச்சிகரமான வட்டி வீதங்களிலிருந்து பயனடையலாம்.
DFCC Savings Goal ஆனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட நிதி அபிலாஷைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான, தனிப்பயனாக்கப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்க அவர்களுக்கு வலுவூட்டுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான இலக்குத் தொகையைக் குறிப்பிடலாம். ரூபா. 10,000/- முதல் ரூபா. 10,000,000/- வரையான தொகையாக அது இருக்கலாம் என்பதுடன், மற்றும் DFCC Savings Goal கணக்கை ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் இத்திட்டத்தை ஆரம்பிக்கும் திகதியைத் தேர்ந்தெடுக்கலாம். தினசரி, வாராந்த அல்லது மாதாந்த சேமிப்புப் பங்களிப்பின் தவணைகளைத் தெரிவுசெய்து, ஆரம்பிக்கும் திகதியிலிருந்து 30 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான சேமிப்புக் குறிக்கோளுக்கான இறுதித் திகதியை நிர்ணயிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. கூடுதல் நெகிழ்வுத்தன்மையாக, உங்கள் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப இறுதித் திகதியை நீட்டிப்பது சாத்தியமாகும்.
“கனவுகளை நனவாக்குவது பணத்தை சேமிப்பதை விட மேலானது என்பதை DFCC வங்கியில் நாங்கள் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம். இது அந்த கனவுகளை நனவாக்க உதவும் வகையில், கூடுதல் வளர்ச்சிக்கான அதிக வட்டி வீதத்துடன் அதற்கான அர்த்தத்தையும், கட்டமைப்பையும் உருவாக்குவதாகும்,” என்று DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்துறையின் சிரேஷ்ட துணைத் தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கூறினார். “அதனாலேயே DFCC Savings Goal திட்டத்தை ஒரு தனித்துவமான மற்றும் புத்தாக்கமான தயாரிப்பாக வடிவமைத்துள்ளோம். இது எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டுவதுடன், அவர்கள் தமது இலக்குகளை அடைய அவர்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் ஆதரவை இது வழங்குகிறது. இத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் இடைநடுவில் உங்கள் இலக்குகளை மாற்றிக்கொள்ள நீங்கள் தீர்மானித்தால், அதற்கு எந்த அபராதமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. DFCC Savings Goal திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாங்கள் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் இதை எங்கள் இணைய வங்கிச்சேவையின் மூலமாக சௌகரியமாக மேற்கொள்ளலாம். இதன் மூலமாக மாற்றத்திற்கு வித்திடும் சேமிப்பு பயணத்தை மேற்கொள்ளுங்கள்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.”
ஈடுஇணையற்ற நெகிழ்வுத்தன்மையை வழங்கும், DFCC Savings Goal ஆனது வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தங்கள் இலக்குகளுக்கு கூடுதல் நிதியைச் சேர்த்துக்கொள்ள இடமளிக்கிறது. கூடுதல் அறவீடுகள் அல்லது கட்டணங்கள் இல்லாமல் எந்த நேரத்திலும் பணத்தைத் மீளப் பெறுதலுக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கு தொடர்ந்து உதவ, தங்கள் DFCC Savings Goal திட்டத்திற்கான எதிர்கால வைப்பு நிதி மீளப் பெறப்பட்டால், அதனை ஈடுசெய்யும் வகையில் திட்டமானது தானாகவே சரிசெய்யப்பட்டு, தங்குதடையற்ற சேமிப்பு அனுபவத்தை வழங்குகிறது. உங்களின் திட்டமிடப்பட்ட கடப்பாடுகளில் ஒன்றை நீங்கள் தவறவிட்டால், அபராதம் எதுவும் விதிக்கப்படாது. அதே சமயம் DFCC வங்கியின் கட்டமைப்புகள் தானாகவே மீண்டும் முயற்சிக்கும். உங்களிடம் நிதி இருந்தால், நீங்கள் நிச்சயமாக திட்டத்தை தொடர்ந்து பேண இது உதவும். வழக்கமான சேமிப்புக் கணக்கைப் போலவே, அந்தக் காலகட்டம் வரை திரட்டப்பட்ட மொத்த வட்டி பெறுமானத்தைப் பெறும் அதே வேளையில், DFCC Savings Goal எந்த நேரத்திலும் அபராதம் இல்லாமல் சௌகரியமாக மூடப்படலாம்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.