DFCC வங்கி மேம்படுத்தப்பட்ட குத்தகை தயாரிப்புகளுடன் தொழில் துறையில் புதிய தரத்தை ஏற்படுத்தியுள்ளது
July 25, 2023
DFCC வங்கியின் குத்தகை சேவைப் DFCC Leasing, “காலம் செல்லச் செல்ல சிறந்ததாக மாறும் குத்தகை” தீர்வாகவுள்ள “Aduwenakota Aduwena Leasing” என்ற தனது விசேட குத்தகை ஊக்குவிப்பின் மூலமாக சந்தையில் மோட்டார் வாகனங்களுக்கு இலங்கை மக்கள் மத்தியில் காணப்படும் அக்கறைகளுக்கு ஒரு தைரியமான மற்றும் புத்தாக்கமான அடியை முன்னெடுத்து வைத்துள்ளது. 2023 செப்டெம்பர் 14 வரை, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும், DFCC Aduwenakota Aduwena குத்தகையானது வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களின் விலை வீழ்ச்சியடைகின்ற போது அல்ல புதிய வானங்களின் இறக்குமதி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுகின்ற போது, வட்டி வீதங்கள் குறைக்கப்படும் வரை காத்திராது, இப்போதே வாகனத்தைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கிறது.
ஏனெனில், DFCC Aduwenakota Aduwena குத்தகையானது, ஒரு வருடத்திற்குப் பின்பும் கூட எவ்விதமான தண்டப்பணமும் இன்றி உங்களுடைய தற்போதைய வாகனத்திற்கு பதிலாக தரமுயர்ந்த வாகனமொன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், குறைந்த வட்டி வீதத்திற்கு மாறும் நெகிழ்வுத்தன்மையை அனுபவிக்க உங்களுக்கு இடமளிக்கிறது. இப்போது, இலங்கையில் வேறு எந்த குத்தகை வசதியும் வழங்காத நெகிழ்வுத்தன்மையாக இது காணப்படுவதுடன், வாகனமொன்றை சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற உங்கள் கனவுகளை இப்போதே நனவாக்கிக் கொள்ளவும், எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மிகவும் சாதகமான சந்தை நிலைமைகளில் இருந்து நீங்கள் பயனடையவும் உங்களுக்கு இடமளிக்கிறது!
DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சிரேஷ்ட பிரதித் தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்கள், “எமது வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டுவதையும், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நெகிழ்வுத்தன்மையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று கூறினார். “இந்த தனித்துவமான குத்தகை ஊக்குவிப்புடன், தனிநபர்களும், வணிகங்களும் இந்த வாய்ப்பினை தவற விடாது தற்போதே பயன்படுத்தி, தற்போதைய சந்தை வீதங்களில் வளர்ச்சி மற்றும் சௌகரியத்தை அனுபவிக்க நாம் இடமளிக்கின்ற அதே நேரத்தில், எதிர்காலத்தில் மிகவும் சாதகமான சந்தை விலைகளுக்கு ஏற்ப மாறுவதற்கும் தெரிவு உள்ளது. மேலும், எந்த ஒரு தண்டப்பண கட்டணமும் இல்லாமல் இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்பட்டவுடன் அதிநவீன வாகனத்திற்கு மாறிக்கொள்ளவும் நாம் வாய்ப்பளிக்கின்றோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த புத்தாக்கமான ஊக்குவிப்பு இலங்கையில் இந்த வகையில் முதன்முதலாக ஒன்றாக உள்ளதுடன், இது DFCC Leasing நுகர்வோரின் முக்கிய கவலைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், நிகரற்ற நன்மைகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. கிடைக்கக்கூடிய தெரிவுகளை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யும் சுதந்திரத்துடன், வாடிக்கையாளர்கள் தற்போதைய சந்தை நிலைமைகளை தமக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்டு, தமது கனவு வாகனத்தைச் சொந்தமாக்கி மற்றும் அவர்களின் தனிப்பட்ட அல்லது வணிக முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவிக்கலாம்.
குத்தகையில் அறிமுகமாகியுள்ள இந்த புரட்சியைப் பற்றி மேலும் விபரங்களை அறிந்துகொள்ள, உங்கள் அருகிலுள்ள DFCC வங்கிக் கிளையை நாடுங்கள் அல்லது DFCC Leasing இன் இணையத்தளமான https://www.dfcc.lk/products/leasing-personal/ ஐப் பார்வையிடுங்கள் அல்லது DFCC வங்கியின் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை அழைப்பு மையத்தை 0112350000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுங்கள்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இலங்கையில் DFCC வங்கியானது, Green Climate Fund (GCF) இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையின் முதன்முதல் மற்றும் தற்போதுள்ள ஒரே நிறுவனமாகும். இது இலங்கையின் காலநிலைத் தணிப்பு மற்றும் தழுவல் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சலுகை நிதி வசதியை வழங்குகிறது. Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021 and 2022’ விருது அடங்கலாக ஏராளமான அங்கீகாரங்களை வங்கி சம்பாதித்துள்ளதுடன், Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.