![DFCC வங்கி தனது ஊழியர்களை பணிக்கு சைக்கிளில் வருவதை ஊக்குவித்து ஒரு முன்னோடியாகச் செயற்படுகின்றது](https://www.dfcc.lk/ta/wp-content/themes/dfccbank/assets/images/careers/careers-banner-02.jpg)
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி தனது ஊழியர்களை பணிக்கு சைக்கிளில் வருவதை ஊக்குவித்து ஒரு முன்னோடியாகச் செயற்படுகின்றது
April 8, 2021
![](https://s3.ap-southeast-1.amazonaws.com/dfcc.lk/wp-content/uploads/sites/3/2021/04/20032843/bike-event-1020.jpg)
‘2030 ஆம் ஆண்டளவில் பேண்தகமை கொண்ட பணி-வாழ்க்கை முறையை அடையப்பெறல்’ என்பது 2020 – 2030 ஆம் ஆண்டிற்கான அதன் பேண்தகமை மூலோபாயத்தில்; DFCC வங்கி இனங்கண்டுள்ள பாரிய இலக்குகளில் ஒன்றாகும். பேண்தகமை கொண்ட பணியிடங்கள் உட்பட ஆட்சி ஒழுங்கு முறை மூலம் பேண்தகமை கொண்ட பணியிடங்களையும், வாழ்க்கை முறையையும் மேம்படுத்தும் முயற்சிகளை வங்கி மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் பொதுவாக வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்க்கை முறையிலும் இதே மாற்றத்தை அடைந்துகொள்ள உதவ முயற்சிக்கின்றது. பன்முகத்தன்மை மற்றும் அரவணைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பது முதற்கொண்டு, உற்பத்தித்திறன் சார்ந்த ஆரோக்கியம் மற்றும் பேண்தகமை கொண்ட நுகர்வு மற்றும் வாழ்க்கை முறை நடைமுறைகள் வரையிலான பல கூறுகள் இதில் அடங்கும். இது சம்பந்தமாக, வங்கியின் ஆரோக்கிய ஊக்குவிப்பு அணியான “OMMM” தொடங்கிய புதிய ‘Bike to Work’ முயற்சி, அதன் ஊழியர்கள் பேண்தகமை கொண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேண ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் வங்கி மட்டத்தில் அதனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு முயற்சியாகும்.
வங்கி வலையமைப்பின் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கான முயற்சியாக ஒவ்வொரு மாதமும் “Bike to Work” தினம் ஏற்பாடு செய்யப்படுவதால் இது ஒரு முறை மாத்திரம் இடம்பெறும் செயற்பாடாக அல்லாமல் ஒரு தொடர்ச்சியான செயற்பாடாக முன்னெடுக்கப்படவுள்ளது. சைக்கிள் ஓட்டுதலை ஒரு பொழுதுபோக்காக மேற்கொள்ள ஊழியர்களை ஊக்குவிப்பதன் மூலம் சைக்கிள் ஓட்டுதலுக்கு அதிக முன்னுரிமை அளிக்க DFCC வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது. பணிக்கு சைக்கிளில் வருவதை உத்தியோகபூர்வமாக அறிவித்து இந்த அளவிலான முயற்சியை வங்கி ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதல் முறை என்பதால், நாட்டில் சைக்கிள் ஓட்டுதல் தொடர்பில் ஆதிக்கம் செலுத்தி அதை ஒரு வாழ்க்கை முறை தெரிவாக மாற்றியமைக்க DFCC வங்கி விரும்புகிறது.
இந்த முயற்சி ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதில் DFCC வங்கியின் வலுவான உறுதிப்பாட்டை நிரூபிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பேணுவதில் நிதி நிறுவனத்தின் நிலைப்பாட்டையும் இது எடுத்துக்காட்டுகிறது. வேலைக்கு சைக்கிளில் வருவது வங்கியின் காபன் அடிச்சுவட்டைக் குறைக்கும் முயற்சியில் மறுக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், “Bike to Work” முயற்சி, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பொறுப்புணர்வுமிக்க முறையில் வளத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒரு அர்த்தமுள்ள மற்றும் பேண்தகமை கொண்ட பங்களிப்பை உறுதி செய்வதில் DFCC வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் DFCC வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட OMMM முயற்சி, பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உள மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் நலனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மேலும் பல செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.