DFCC வங்கி பிஎல்சி, இந்தியாவின் HDFC வங்கியுடன் இணைந்து இந்திய ரூபாய் Nostro கணக்கைத் திறந்துள்ளது
March 28, 2023
அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி பிஎல்சி, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுவாக இலங்கையர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து, இந்தியாவின் HDFC வங்கியில் இந்திய ரூபாய் வடிவிலான Nostro கணக்கைத் திறப்பதாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியானது, இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக வகைப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “இந்திய ரூபாய் Nostro கணக்கைத் திறப்பதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் முதலீடுகளுக்கான மகத்தான வளர்ச்சிவாய்ப்புக்களை நாங்கள் காண்கிறோம்,” என்று DFCC வங்கியின் திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச் சேவைக்கான சிரேஷ்ட உப தலைவரான பிரின்ஸ் பெரேரா அவர்கள் குறிப்பிட்டார்.
இந்திய ரூபாயில் Nostro கணக்கை ஸ்தாபிப்பதன் மூலம், DFCC வங்கி இலங்கை மற்றும் இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இந்திய ரூபாயில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுசரணையளிக்கும் வகையில் செயல்படுகிறது. உட்கட்டமைப்பு, தொடர்பாடல் இணைப்பு, போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் புனர்வாழ்வு, கல்வி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி ஆகியவற்றில் வர்த்தக உறவுகளுடன், சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளர்களில் ஒன்றாக இந்தியா பாரம்பரியமாக திகழ்ந்து வருகிறது.
இந்திய ரூபாயில் Nostro கணக்கை ஸ்தாபிப்பதன் மூலம், DFCC வங்கி இலங்கை மற்றும் இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இந்திய ரூபாயில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுசரணையளிக்கும் வகையில் செயல்படுகிறது. உட்கட்டமைப்பு, தொடர்பாடல் இணைப்பு, போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் புனர்வாழ்வு, கல்வி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி ஆகியவற்றில் வர்த்தக உறவுகளுடன், சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளர்களில் ஒன்றாக இந்தியா பாரம்பரியமாக திகழ்ந்து வருகிறது.
HDFC வங்கி லிமிட்டெட் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாகும். அதற்கு நாடு முழுவதும் 7,183 கிளைகள் உள்ளன. DFCC வங்கி மற்றும் இந்தியாவின் HDFC வங்கி இடையிலான இந்த புதிய ஏற்பாடு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பான மற்றும் நம்பகமான பரிவர்த்தனை தளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DFCC வங்கி, இந்தியாவுடன் பரிவர்த்தனைகளைப் பேணுகின்ற இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த புதிய தளத்தின் நன்மைகளை தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் நாடு முழுவதும் உள்ள தனது கிளை வலையமைப்பைப் பயன்படுத்த விரும்புகிறது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அதிக பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வளர்க்கும் முகமாக, வணிகங்களுக்கும், தனிநபர்களுக்கும் புதிய வாய்ப்புகளை தோற்றுவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
பிரின்ஸ் பெரேரா- சிரேஷ்ட துணைத் தலைவர்- திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை, DFCC வங்கி
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] A+ தரப்படுத்தலையும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.