DFCC வங்கி துல்ஹிரிய MAS Intimates இல் MySpace வங்கிச்சேவை மையத்தை திறந்து வைத்துள்ளது
February 16, 2023
MySpace சுய வங்கிச்சேவை மையங்களின் சௌகரியமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் DFCC வங்கி, துல்ஹிரியவில் உள்ள MAS Fabric Park இல் தனது வங்கிக்கு வெளியிலுள்ள வலையமைப்பின் சமீபத்திய சேர்க்கையை திறந்து வைத்துள்ளது. புதிய MySpace சுய வங்கிச்சேவை மையமானது MAS Intimates பணியாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கான வங்கிச்சேவை வசதிகளுக்கான 24 மணி நேர அணுகலை வழங்குகிறது. வங்கிச் சேவைகளுக்கு மேலதிகமாக, புதிய DFCC MySpace சுய வங்கிச்சேவை மையமானது, கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், நிறுவனக் கொடுப்பனவுகள், மொபைல் ரீலோட் மற்றும் Pay and Go எந்திரம் உட்பட பல வசதிகளை வழங்குகிறது. LankaPay வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள, ஏடிஎம் ஆனது, LankaPay வலையமைப்பில் உள்ள உள்ளூர் வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து அட்டைகளையும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வழங்கப்பட்ட JCB அட்டைகள் மூலமாக பணத்தை மீளப் பெறுவதற்கும், அதிகபட்ச இணைப்பு மற்றும் இடைப்பரிமாற்ற செயல்பாட்டு வசதியையும் வழங்குகிறது.
DFCC வங்கியின் வர்த்தக வங்கிச்சேவைக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான திரு ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இதனை திறந்து வைப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “எமது DFCC MySpace சுய வங்கிச்சேவை மையம் இப்போது MAS Fabric Park இல் முழுமையாகச் செயற்படுகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். MAS நிறுவனம் எமக்கு ஆற்றியுள்ள உதவிகளுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன், இப்பிரதேசத்திலுள்ள சமூகத்திற்கு சேவைகளை வழங்க ஆவலாக உள்ளோம். நவீன யுகத்தில் வங்கிச்சேவை மற்றும் நிதிச் சேவைகளுக்கான சௌகரியத்துடனான அணுகல் மிக முக்கியமானது. எமது விரிவான டிஜிட்டல் வழங்கல்களுடன், DFCC Myspace ஆனது டிஜிட்டல் மற்றும் நிஜ உலகங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. வங்கிக்கு வெளியிலான எமது புதிய சேவை மையத்தைப் பார்வையிடவும், மிகவும் சௌகரியமான மற்றும் இலகுவான பாவனை வழிமுறை கொண்ட வங்கிச்சேவை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும், இப்பகுதியில் உள்ள சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அழைக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.
துல்ஹிரிய MAS Fabric Park இல் உள்ள DFCC வங்கியின் MySpace வங்கிச்சேவை மையமானது, DFCC வங்கி மற்றும் MAS Intimates இன் நியாயபூர்வ வர்த்தகம் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நடத்தப்பட்ட விசேட வைபவத்திற்கு மத்தியில், 2023 பெப்ரவரி 8 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் DFCC வங்கி மற்றும் MAS Intimates இன் சிரேஷ்ட அதிகாரிகள், சமூக உறுப்பினர்களுடன் இணைந்து கலந்துகொண்டனர். சில்லறை வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்துறைப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவரான திரு ஆசிரி இத்தமல்கொட, டிஜிட்டல் மூலேபாயத்திற்கான துணைத் தலைவரான திரு தினேஷ் ஜெபமணி, பிராந்தியம் 05 இற்கான பிராந்திய முகாமையாளரான திரு டெரன்ஸ் ஏத்துகல மற்றும் கேகாலை கிளை முகாமையாளரான சஞ்சய ஜயதிலக மற்றும் MAS Intimates இன் மனிதவள முகாமையாளரான திரு ஹிரான் குலரத்ன, Intimates இன் பொது முகாமையாளரான இரங்க ஜெயவிக்ரம, DFCC விற்பனை/டிஜிட்டல் அணி மற்றும் நியாயபூர்வ வர்த்தகம் மற்றும் கூட்டு ஆலோசனைக் சபையில் இணைக்கப்பட்டுள்ள MAS intimates பணியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.