DFCC வங்கியின் வேர்ச்சுவல் வோலட் (Virtual Wallet) இலங்கையின் ‘Best Digital Wallet’ என்ற அங்கீகாரத்தை Global Banking and Finance Review சஞ்சிகையிடமிருந்து பெற்றுள்ளது
November 8, 2021
இலங்கையின் முதன்மையான வர்த்தக வங்கியான DFCC வங்கிக்கு அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற தனது அந்தஸ்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில், Global Banking & Finance Review சஞ்சிகையால் ஏற்பாடு செய்யப்பட்ட Global Banking & Finance Awards 2021 விருதுகள் நிகழ்வில் ‘Best Digital Wallet Sri Lanka’ என்ற விருது அங்கீகாரத்தை அண்மையில் பெற்றுள்ளது.
வங்கிக்கு அதன் புரட்சிகரமான ‘Virtual Wallet’ தொழில்நுட்ப தளத்துக்காக இந்த விருதைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, எந்த சூழ்நிலையிலும் மீண்டு எழுகின்ற ஆற்றல் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்பிப் பேணிப் பாதுகாப்பதுடன், தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மதிப்பைத் தோற்றுவிக்க வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு இந்த சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. Virtual Wallet போன்ற புத்தாக்கமான, பாரிய நற்பலனை விளைவிக்கும் சேவைகளை உருவாக்குவதில் வங்கியின் வெற்றியை இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் கணிசமான பொருளாதார மற்றும் சமூக மதிப்பைத் தோற்றுவிப்பதில் சிறந்து விளங்குகின்றன.
DFCC Virtual wallet 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வேர்ச்சுவல் வோலட் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சொந்த கணக்குகள் மற்றும் பிற வங்கிக் கணக்குகளுக்கு இடையில் நிகழ்நேரத்தில் நிதி பரிமாற்றங்களைச் செய்யும் அல்லது பிற வங்கி கடன் அட்டைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் செயல்பாட்டை வழங்குகிறது. இது மூன்று மொழிகளிலும் கிடைப்பதுடன், பன்முகப்படுத்தப்பட்ட தொழிற்பாடுகளையும் கொண்டுள்ளது. மேலும், பாவனைக் கட்டணப் பட்டியல் மற்றும் காப்புறுதி கொடுப்பனவுகள், நிறுவனக் கொடுப்பனவுகள் ஆகியவற்றுக்கு இடமளிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, வசதியான தீர்வாக செயல்பட்டு, தற்போதைய தொற்றுநோய் காரணமாக எழுந்துள்ள முட்டுக்கட்டைகளைப் போக்குவதற்கும் வழிகோலுகிறது. வங்கிக் கணக்கு மீதிகள், வட்டி வீதங்கள், நிலையான வைப்புகளின் முதிர்வு திகதிகள் மற்றும் பலவற்றைச் சரிபார்க்கும் திறன் முதற்கொண்டு புதிய இடைமுகம் மற்றும் 25 இற்கும் மேற்பட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்கள் நிரம்பியுள்ளதாக, எப்போதும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய wallet சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கான பரிவர்த்தனைகள் மற்றும் கணக்கு கூற்றுக்கள் உட்பட தொடர்புடைய அனைத்து தகவல் விபரங்களையும் பார்க்க ஏதுவாக வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் DFCC கடனட்டைகளை (பிரதான மற்றும் துணை) தங்கள் wallet இல் சேர்க்கும் திறனும் வழங்கப்பட்டது. DFCC வங்கியின் தற்போதையை வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி செயலியை (app) பதிவிறக்கம் செய்தோ அல்லது வாடிக்கையாளர் சேவை இலக்கத்தினை அழைத்து தங்கள் wallet ஐ தொழிற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் m-cash மற்றும் விளம்பரப்படுத்தப்பட்ட மின்வணிக வணிகர் கொடுப்பனவுகள் மூலம் 40 புதிய கட்டண விதிப்பாளர்களையும் wallet இணைத்துள்ளது. DFCC Wallet என்பது எளிமையான பயனர் இடைமுகத்துடன் சந்தையில் உள்ள ஒன்லைன் கலப்பு மொபைல் வங்கிச்சேவைத் தளமாகும். இந்த ஆண்டில் இதில் இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, The Global Banking and Finance Review Awards விருதுகள், உலகளாவிய நிதிச் சமூகத்தில் நிகழும் புத்தாக்கம், சாதனை, மூலோபாயம், முற்போக்கு மற்றும் உத்வேகம் தரும் மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட நேர்மறையான தாக்கத்தை முன்னிலைப்படுத்த முயன்று வருகிறது. இந்த விருதுகள் அனைத்து அளவிலான நிறுவனங்களையும் அங்கீகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை நிபுணத்துவத்தின் குறிப்பிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நிதி உலகில் பொதுவான சிறப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கு அங்கீகாரமளிக்கின்றன.
விருதுகள் மற்றும் வங்கிக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “சமீபத்திய Global Banking and Finance Review Awards விருதுகள் நிகழ்வில் Best Digital Wallet இனைக் கொண்டிருக்கும் சிறந்த வங்கியாகத் தெரிவு செய்யப்பட்டதில் DFCC வங்கி பெருமிதம் கொள்கிறது. உலகத்தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் அதே நேரத்தில் தன்னுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு டிஜிட்டல் வழிமுறையில் செயல்பட இடமளித்து, சமூகத்திற்கு எந்த சூழ்நிலையிலும் மீண்டு எழும் திறன் கொண்ட, நிதியியல் ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை தோற்றுவிப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை இந்த அங்கீகாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. Best digital wallet இனைக் கொண்டிருக்கும் வங்கி என்று போற்றப்படுகின்றமை உள்ளூர் வங்கிச்சேவை மற்றும் நிதித் துறையின் உச்சத்தில் தொடர்ந்து சிறந்து விளங்க எங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில் இலங்கையின் முதன்மையான வணிக வங்கியாக பெருமளவில் சமூக-பொருளாதார மதிப்பை உருவாக்கும் எங்கள் வாக்குறுதியையும் நிலைநாட்டுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.