![DFCC வங்கி அட்டைதாரர்களுக்கு இந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் 60% சேமிப்பு மற்றும் பல சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பு](https://www.dfcc.lk/ta/wp-content/themes/dfccbank/assets/images/careers/careers-banner-02.jpg)
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி அட்டைதாரர்களுக்கு இந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் 60% சேமிப்பு மற்றும் பல சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பு
April 19, 2021
![](https://s3.ap-southeast-1.amazonaws.com/dfcc.lk/wp-content/uploads/sites/3/2021/04/19032801/2tam.jpg)
விடுமுறைக் காலம் வேகமாக நெருங்கி வரும் நிலையில், நாடளவில் 300 கூட்டாளர் விற்பனை மையங்களில் தனது கடனட்டை வாடிக்கையாளர்களுக்கு 60% வரையான சேமிப்புக்களை வழங்குவதாக DFCC வங்கி உறுதியளித்துள்ளது. பொருட் கொள்வனவு முதல் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மின்-வர்த்தக ஒன்லைன் தளங்கள் வரை, அனைவருக்கும் ஏற்ற வங்கியானது இந்த பண்டிகைக் காலத்தில் தனது விசுவாசமான வாடிக்கையாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் பொருட் கொள்வனவுகளை மேற்கொண்டு குதூகலிப்பதற்கு இடமளிக்கிறது.
அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாரியளவிலான சேமிப்புக்களுக்குப் புறம்பாக, ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் அட்டைதாரருக்கு 1% பண மீளளிப்பானது அவர்களுடைய DFCC வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்படும். இந்த தனித்துவமான முன்மொழிவு, வாடிக்கையாளர்கள் புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில் தங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் செலவுகளை மேற்கொள்ளும் போதே சேமிக்கவும் இடமளிக்கிறது. இது தவிர, DFCC வங்கியின் கடனட்டைகள், அட்டை மூலமான கடன் மற்றும் நிலுவையை அட்டைக்கு மாற்றிக்கொள்ளும் திட்டங்களுக்கு மிகக் குறைந்த செயலாக்கக் கட்டணத்தையும் கொண்டுள்ளன.
DFCC வங்கி கைகோர்த்துள்ள 300 வணிக மையங்களில், நுகர்வோரின் அபிமானம் பெற்ற பல மையங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கீல்ஸ், கார்கில்ஸ், ஆர்பிக்கோ, அபான்ஸ், சிங்கர், Galleria, Cotton Collection, Levi’s, Adidas, Cool Planet, Sriyani Dress Point, DSI, Bata, CIB, House of Fashions மற்றும் ODEL ஆகியவையும் இதில் அடங்கும்.
இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள், விடுமுறை மற்றும் பிரயாணம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, ஆபரணம், ஆடை மற்றும் அணிகலன்கள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கும் முன்னணி வணிக மையங்களில் தள்ளுபடிகளை அட்டைதாரர்கள் பெற்று அனுபவிக்க முடியும்.
ஆண்டின் இந்த காலகட்டத்தில் பல வாடிக்கையாளர்கள் உபகரணங்கள் மற்றும் அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்கு விரும்புவதால், DFCC வங்கி தனது அட்டைதாரர்களுக்கு Buy Now Pay Later (இப்போது வாங்கி பின்பு பணம் செலுத்துங்கள்) என்ற ஊக்குவிப்புத் திட்டத்திற்கும் இடமளித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 0% வட்டியின்றிய 12 மாதங்கள் வரையான கொடுப்பனவுத் திட்டங்கள் மூலம், அட்டைதாரர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு, வங்கி தனது டெபிட் அட்டை வாடிக்கையாளர்களுக்கும் ஊக்குவிப்புச் சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணத்தை மீளப் பெறும் சிரமங்களுக்குப் பதிலாக டெபிட் அட்டைதாரர்கள் தங்கள் அட்டைகளை பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியாக, DFCC வங்கி தெரிவு செய்யப்பட்ட பொருட் கொள்வனவு, பாதணிகள், ஆபரணங்கள் மற்றும் உணவக கூட்டாளர் விற்பனை மையங்களில் ஒன்லைன் கொள்வனவு சலுகைகள் உட்பட பல தள்ளுபடிகளை வழங்குகிறது.
DFCC வங்கியின் இந்த பண்டிகைக்கால அட்டை சலுகைகள் குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஆண்டுதோறும், எங்கள் கூட்டாளர் வணிக மையங்கள் மூலம் அற்புதமான ஊக்குவிப்புச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் எங்கள் அட்டைதாரர்களுக்கு புத்தாண்டுக் காலகட்டத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றியுள்ளோம். ஊரடங்குச் சட்டம் காரணமாக கடந்த ஆண்டில் கொண்டாட்டங்கள் களைகட்டாத நிலையில், இந்த ஆண்டு, எங்கள் வாடிக்கையாளர்கள் மீண்டும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் புத்தாண்டுக் காலகட்டத்தை குதூகலமாகக் கொண்டாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஆண்டு எங்கள் அட்டை வழங்கும் சலுகைகளை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஊக்குவிப்பதுடன், இதனால் அவர்கள் கொண்டுள்ள கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.